தொலைக்காட்சி!!

Search This Blog

Thursday, January 28, 2016

எண் 2 ல் பிறந்தவருக்குரிய சகல பலன்கள்!


எண் 2 யில் பிறந்தவருக்குரிய பலன்கள்
சந்திரன் நட்சத்திரம் :- ரோகிணி, ஹஸ்தம், திருவோணம்
சந்திர பகவான் பாடல்
எங்கள் குறைகள் எல்லாம் தீர்க்கும்
திங்களே போற்றி, திருவருள் தருவாய்
சந்திரா போற்றி, சத்குரு போற்றி
இந்த 2-ம் எண்ணைப் பற்றி அனைத்து நூல்களும் மக்களைதேவையில்லாமல் பயப்படுத்துகின்றன. உண்மை அதுவன்று. பெரும்மரங்கள் சாய்ந்தாலும் நாணல் மட்டும் நிலைத்து நிற்கம்.ஒவ்வொருவர் வாழ்விலும் புயல் (சோதனைகள்) என்பது நிச்சயம்ஏற்படும். அதற்கு எந்த எண்ணும் விதிவிலக்கல்ல. மற்ற எண்காரர்கள்துவண்டு விடும்போது இவர்கள் மட்டும் வாழ்க்கையின்சோதனைகளில் வளைந்து கொடுத்து, முன்னேறி விடுவார்கள்.அம்பாளின் அருள் பெற்ற எண் இது.
பகலுக்கு இராஜா சூரியன் என்றால் இரவுக்கு ராணி சந்திரன். சூரியன்தந்தைகாரன் சந்திரன் மாதாகாரகன். எனவே இந்த எண்காரர்களிடம்பெண்மையும், மென்மையும் உண்டு. இவர்கள் ஓரளவு தடித்ததேகத்தினர்தாம். இதில் பிறந்த ஆண்கள் சுருட்டை முடியையும்,பெண்கள் நீண்ட முடியையும் கொண்டவர்கள்.
இவர்கள் எவ்வளவு தூரம் வளைந்து கொடுக்கிறார்களோ, பலசமயங்களில் அதைவிடக் கடின சித்தராகவும் மாறிவிடுவார்கள்.மனத்தினால் செய்யும் தொழில்களில் (கற்பனை, கவிதை,திட்டமிடுதல் போன்றவற்றில்) மிகவும் விருப்பமுடன் ஈடுபடுவார்கள்.
இவர்களுக்கு விட்டுக் கொடுக்கும் குணம் உள்ளதால், மக்களால்பெரிதும் விரும்பப்படுவார்கள். கற்பனை கலந்து கவர்ச்சியுடன்பேசுவதால் இவர்களுக்கு மக்களாதரவு உண்டு. பெரும்பாலோருக்குமுன்னோர்கள் சொத்துக்கள் இருக்கும்.
இந்த எண்ணின் ஆதிக்கம்குறைந்தவர்கள் வீண்பிடிவாதம் கொண்டு தங்கள் வாழக்கையைத்தாங்களே கெடுத்துக் கொள்வார்கள். நீதிமன்ற வழக்குகளிலும்சிக்கலை தந்து விடும். முன்னோர் சொத்துக்களையும் இழக்க நேரிடும்.மனதில் நிம்மதி இருக்காது.
இவர்களின் வெற்றிக்கும் அல்லது தோல்விக்கம் ஒரு பெண்ணேகாரணமாக இருப்பாள். காரணம் இவர்களுக்குச் சந்தேகம் குணம்அதிகம் உண்டு¢. இதனால் முழுமையாக யாரையும், நம்பாமல்திரும்பத் திரும்ப மற்றவர்களடன் சந்தேகம் கொள்வதால்தான்.இவர்களுக்கு எதிரிகள் உருவாகின்றனர். எதையும் பதட்டத்துடனும்,ஒருவித சோம்பலுடனும் அணுகும் குணத்தினையும் மாற்றிக்கொண்டால் இவர்கள் நிச்சயம் முன்னேறுவார்கள்.
முக்கியகாரியங்கள் எவற்றையும் சட்டென முடிக்காமல் காலரத்தைக் கழித்துவிட்டு, பின்பு அவசரம் அவசரமாகச் செய்து முடிபார்கள். ஒருமாதத்தின் இறுதியில்தான் அவசர அவசரமாக உட்கார்ந்து அந்தந்தமாதத்தின் வேலையை முடிப்பார்கள். தங்களது வாக்குறுதிகளைஇவர்கள் காப்பாற்றுவது மிகவும் சிரமம்.
திருநெல்வேலி சென்றவுடன்அல்வா வாங்கி அனுப்புவதாகச் சொல்வார்கள். ஆனால் அனுப்பமாட்டார்கள். சந்திர ஆதிக்கம் நன்முறையில் அமைந்திருந்தால் நல்லதிட்டங்கள் போட்டும் அவற்றில் வெற்றியும் அடைந்து விடுவார்கள். (உ&ம்) தேசத்தந்தை மகாத்மா காந்தி. தங்களிடம் பல திறமைகள்இருந்தும் துணிந்து செயல்பட விருப்பப்பட மாட்டார்கள்.இல்லாததைக் கற்பனை செய்து கொண்டு தங்களது வாழ்க்கையில்முடிவெடுக்க முடியாமல் திண்டாடுவார்கள். காலையில்சுறுசுறுப்புடன் தொடங்குவார்கள். ஆனால் மாலைக்குள் ஊக்கம்குறைந்து, சோர்ந்துவிடும் இயல்பினர்.
பத்தாவது முறை தடுக்க விழுந்தவனிடம்
பூமித்தாய் முத்தமிட்டு சொன்னது,
மறந்துவிடாதே நீ ஒன்பது முறை
எழுந்து நின்றவன் என்று
கவிஞர் கவிதாமணியின் இந்த புதுக்கவிதையின் வரிகளை மறக்காமல்கடைப்பிடித்தால் இவர்களது வாழவில் இன்பம் நிச்சயம்.
முக்கிய குறிப்பு
விதி எண் 2 ஆக வரும் அன்பர்கள் ஒரு வகையில் அதிர்ஷ்டசாலிகள்.திருமணம் ஆனவுடன்தான் அம்பாளின் அனுக்கிரகத்திற்குஉட்படுவார்கள். வசதியுடன் மனைவி அல்லது மனைவி வந்தவுடன்வேலை, வாழ்க்கையில் முன்னேற்றம் ஆகியவை இந்தஎண்காரர்களுக்கு ஏற்பட்டு விடும்.
இவர்களும் பிறந்த ஊரை விட்டு வெளியூர் சென்று தொழில்,வியாபாரம் அமைந்தால்தான் நல்ல தொழில் முன்னேற்றம், நல்லஇலாபங்கள் அடையலாம். இவர்கள் நடையில் எப்போதும் வேகம்உண்டு. செலவத்தைச் சேர்ப்பதில் மிகவும் ஆசை உடையவர்கள்.உலக சுகங்களை அனுபவிப்பதிலும் மிகவும் நாட்டம் உண்டு.அளவுக்கு அதிகமாகச் சாப்பிடும் குணம் உள்ளவர்கள். மனோவசியம்மற்றும் மந்திர தந்திரங்களாலும் இவர்களுக்கு ஈடுபாடு உண்டு.
தாய்மையின் இயல்பான பாசம், குடும்பப்பற்று, தேசபக்தி,ஊர்ப்பற்று, தமிழ்ப்பற்று ஆகியவை உண்டு.
இவர்களது நோய்கள்
அளவுக்கு அதிகமாகச் சாப்பிடுபவர்களாதலால், வயிற்றுக்கோளாறுகள் அடிக்கடி ஏற்படும். சந்திரனின் ஆதிக்கம்குறையும்போது சிறுநீரகக் கோளாறுகள், மனச்சோர்வு,மூலவியாதிகள் தோன்றும் இவர்களுக்கு நீர்த் தாகம் அதிகம் உண்டு.தண்ணீர், காபி, டீ மற்றும் குளிர்பானங்கள் ஆகியவற்றை மிகவும்விரும்புவார்கள். எனவே, இவர்கள் குடிப் பழக்கத்திற்கு மட்டும்ஆளாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் அதற்குஅடிமையாகி விடுவார்கள்.
பூசணி, பறங்கி, வெள்ளைப்பூசணி, முட்டைக்கோசு ஆகியவற்றைஅதிகம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். சளித்தொந்தரவுகளும் அடிக்கடி ஏற்படும்.
மற்ற முக்கிய ஆலோசனைகள்
பல அன்பர்கள் தங்களின் குறைகளை மறைத்துக்கொண்டு வாழகின்றஇரண்டைக் குணமுள்ளவர்களாக இருப்பார்கள். இவர்கள் வெளியேதைரியமுடையவர்களாகத் தோன்றினாலும் உள்ளத்தில் பெண்மையே(பயமே) மேலோங்கி நிற்கும். எனவே, இவர்கள் ஒரு வழிகாட்டியைதேர்ந்தெடுத்து அவரின் ஆலோசனைகளின் பேரில் காரியங்களைச்செய்து வரவேண்டும்.
திருமண வாழ்வில் அதிர்ஷ்டம் இருந்தாலும், தங்களுக்கு அதிர்ஷ்டஎண்களில் பிறந்த பெண்களை மணந்து கொண்டால்தான் இவர்களதுவாழக்கை வளமாக இருக்கும். இல்லையெனில் குடும்பப்பிரச்சினைகள் கடைசிவரை இருந்துகொண்டே இருக்கும். இவர்களின்திருமணத்திற்கு 1, 3, 5, 6 ஆகிய எண்களில் பிறந்த பெண்கள்ஏற்றவர்கள். இருப்பினும் 7ந் தேதி பிறந்த பெண்ணே (பிறவி எண் (அ)கூட்டு எண்) மிகவும் சிறந்தவள்.
ஆனால் 8 அல்லது 9 எண் உடைய பெண்களை மட்டும் மணக்கவேகூடாது. பின்பு வாழ்க்கையே நரகமாகிவிடும்.
1ம் எண் பிறந்த பெண்ணும், இவர்களை அடக்கி ஆட்கொள்வாள்.நல்ல வழித்துணையாக அமைவாள். எனவே மணம் புரிந்துகொள்ளலாம்.
இவர்கள் தங்களது திருமணங்களை 1, 10, 19, 28, 6, 15, 24, 7, 16மற்றும் 25 தேதிகளும், மற்றும் 1, 6, 7 எண் கூட்டு எண்களாக வரும்தினங்களிலும் செய்து கொள்ள வேண்டும்.
இவர்கள் 1, 2, 4, 7 ஆகிய எண்களில் பிறந்த அன்பர்களை தொழிலில்கூட்டாளியாக ஏற்றுக் கொள்ளலாம். 5ம், 6ம் நடுத்தரமானதுதான் 9எண்காரர்களையும், 8ம் எண்காரர்களையும் கூட்டாளிகளாகச் சேர்க்கவேண்டாம்.
இவர்களுக்கு 7, 5, 6, 1 ஆகிய நாட்களில் பிறந்தவர்கள் நண்பர்களாகஅமைவார்கள்.
சந்திரன் யந்திரம் & சந்திரன் & 18
7 2 9
8 6 4
3 10 5
சந்திரன் மந்திரம்
ததிசங்க துஷாராபம்
ஷீரோ தார்ணவ ஸம்பவம்
நாமம் சசிநம் ஸோமம்
சம்போர் மகுட பூஷணம்
எண் 2 சிறப்பு பலன்கள்
எண் 2 என்பது மனோகாரகனான சந்திரனுக்கு உரியதாகும். இந்தஎண் பெண் தன்மை கொண்டது. எனவே, இந்த எண் ஆதிக்கத்தில்பிறப்பவர்களுக்கு மனோ பலமும், கற்பனைத் திறனும்இயற்கையிலேயே உண்டு. எண்ணின் பலம் குறைந்தால்தன்னம்பிக்கைக் குறையும், மனதில் பல வீண் ஐயங்களும் ஏற்படும்.உலகத்தின் கவிஞர்கள் இவர்களே. தங்களின் காரியங்களை பலகோணங்களில் சிந்தித்த பின்பே தொடங்குவார்கள்.
இதனால் காரியதாமதம் ஏற்படுவதைத் தவிர்க்க முடியாது. இவர்களது மனத்தின்வேகத்திற்கு ஏற்றவாறு இவரது செயல்களில் வேகம் இருக்காது.எனவே, இவர்களைக் கற்பனைவாதிகள் என்று உலகம் சொல்கிறது.பேசிக் கொண்டிருப்பதில் இன்பம் காண்பவர்கள். எந்த ஒருவிஷயத்தையும் பல கோணங்களில், உணர்ச்சிபூர்வமாகப்பேசுவார்கள். சிலர் மிகவும் கஞ்சத்தனமாகப் பணம் சேர்ப்பார்கள்.வேறு சிலரோ பெரும் செலவாளிகளாக இருப்பார்கள்.
மனச்சோர்வு வராமல் இவர்கள் பார்த்துக் கொண்டால் செயல்களில்வெற்றி கிடைக்கும். எதிர்காலலம் பற்றிய அழகயி கற்பனைகள்இவர்களுக்கு உண்டு. புதிய புதிய கற்பனைகள் இவர்களுக்கு உண்டு.புதிய புதிய எண்ணங்களும், திட்டங்களும் இவர்களுக்குத் தோன்றம்.இவர்கள் தண்ணீரால் (பஞ்சபூதம்) குறிக்கப்படுகிறார்கள்.
எனவே,பெரும் பிடிவாதம் கொண்ட மனிதாராகவோ, அல்லது பயந்துநடுங்கும் கோழைகளாகவோ இருப்பார்கள். எனவே, இவர்கள்தங்களது குறைகளை அறிந்து, அதை நிவர்த்தி செய்து கொள்ளவேண்டும். பெரும் ஓவியர்கள், கலைஞர்கள், பாடகர்கள்,இலக்கியவாதிகள் எல்லாம் இந்த எண்ணில் பிறந்தவர்கள்தான்.
அடுத்தவர்களைக் குற்றம் சொல்லும் குணத்தையும், வீண் டம்பப்பேச்சையும் தவிர்த்துக் கொள்ள வேண்டும். இவர்களுக்குத்துன்பங்கள் தொடர்ந்து வரும்போது தற்கொலை எண்ணம்கூடத்தோன்றும். தங்களை விளம்பரப்படுத்திக் கொள்வதில் மிகவும்பிரியமுள்ளவர்கள்.
தண்ணீரில் சிலருக்குக் கண்டங்கள் ஏற்படலாம்.எப்படியும் வெளியூர்த் தொடர்பு, வெளிநாட்டுத் தொடர்புகள் ஏற்பட்டுஅவற்றின் மூலம் பல நன்மைகள் அடைவார்கள். அடுதவர்களுக்குப்பெரிதாக யோசனை சொல்வார்கள். ஆனால் தங்கள் அளவில்குறைவாகவே பயன்படுத்திக் கொள்வார்கள். தெய்வ பக்தியும் உண்டு.தங்களின் செயல்கள் மீதே இவர்களுக்கு பல ஐயங்கள் தோன்றும்.சரியாகத் தான் செய்தோமா? இல்லையா? என்று பல தடவைகுழம்புவார்கள்.
இவர் உணர்ச்சி மயமானவ்ரகள். கோபம், பிடிவாம், ஆத்திரம் போன்றகுணங்கள் உண்டு. இக்குணங்களைத் தவிர்த்துக் கொண்டால்தான்மக்களின் மத்தியில் செல்வாக்கு அடையலாம். இந்த எண்காரர்களுக்குகுழந்தை பாக்கியம் நிறைய உண்டு. குறிப்பாக பெண் குழந்தைகள்அதிகம் இருக்கும்.
பொதுவாக இவர்களுக்கு தாமதமாகத்தான் திருமணம் நடக்கும். ஒருசிலருக்கு மிக இளவளதிலேயே திருமணம் நடக்கலாம். பெரும்பாலும்பெண்களால் உதவிகள் கிடைக்கும். சில பெண்களால் இவர்கள்வாழ்க்கையில் பாதிப்பும் உண்டு. காதல் செய்வதில் மிகவும் விருப்பம்உண்டு.
வரிவரியாகக் கற்பனைகளை எழுதுவார்கள். ஆனால்சந்தேகக் குணம் நிறைந்துள்ளதால் திருமண வாழ்வு பாதிக்கப்படும்.இவர்கள் தியானம், யோகாசனம் போன்ற இயற்கையானபயிற்சிகளை மேற்கொண்டால் வலுவான மனமும், அலை பாயாதஎண்ணங்களும் ஏற்படும்.
விளையாட்டுக்களில் நாட்டம் செல்லும். உள் அரங்கவிளையாட்டுக்களை மிகவும் விரும்புவார்கள். எண் பலம்அதிகமானால் இராமனாக இருப்பார்கள். குறைந்தால் இராவணனாகஇருப்பார்கள்.
தன்னம்பிக்கை பொதுவாகக் குறைவாகவே இருக்கும். பலபொருள்களில் ஒரே நேரத்தில் மனம் செலுத்துவதால் எதையும்அழமாகச் செய்யத் தெரியாது. எந்த நேரத்திலும் வாழ்க்கையில் இடறிவிழுந்து விடுவோம் என்ற ஐயம் இருக்கும். எனவே, எச்சரிக்கைஉணர்வும் அதிகம் உண்டு.
வாழக்கையில் ஆபத்தான முடிவை (ரிஸ்க்)எடுக்கத் தயங்குவார்கள். அலுவலகத்திலும், வீட்டிலும் எந்தப்பணியையும் முழுமையாக மற்றவர்களை நம்பி ஒப்படைக்கமாட்டார்கள். சஞ்சல சுபாவமம், சபல சித்தமும் இவர்களுடன் கூடப்பிறந்தவைகள். வாழ்க்கையின் ஒவ்வொரு நிலையிலும், காரணமற்றகவலைகளினால் தங்களை வருந்திக் கொள்வார்கள். நடக்கக்கூடாது,நடக்க முடியாத நிகழ்ச்சிகளையெல்லாம் கற்பனை செய்து கொண்டு, இவை நடந்துவிடுமோ என்று எண்ணி¢ எண்ணிக் குழம்புவார்கள்.
எந்த அளவுக்குத் துணிச்சலாகப் பேசுகிறார்களோ, அந்த அளவுக்குமனதில் பயம் இருந்துகொண்டே இருக்கும். இவர்களுக்கெனத் தனித்தபண்போ, பழக்கவழக்கமோ இருக்காது. எப்போதும் மற்றவர்களைபார்த்து, அவர்களிடன் நடை உடைகளைப் பின்பற்றுவார்கள்.
இதனால் இவர்களுடைய இயல்பும், பழக்கவழக்கங்களும் அடிக்கடிமாறிக்கொண்டே இருக்கும். தாங்கள் எடுக்கும் முடிவினையும் கூடஅடிக்கடி மாற்றிக் கொள்வார்கள். எதைப் பற்றியும் விவாதம்செய்வதில் மட்டும் மிகவும் ஈடுபாடு உண்டு.
முக்கிய ஆலோசனை
2ம் எண் சந்திரனுக்கு உரியது. சந்திரன் நன்றாகப் பிரகாசிக்கச்சூரியனின் உதவி தேவை. சூரியன் இல்லையென்றால் சந்திரனுக்குப்பிரகாசமில்லை. மதிப்புமில்லை. அதைப் போன்றே 2ம் எண் வருகிறஅன்பர்கள் (பிறவி எண் அல்லது வித¤ எண்) நிஷீபீயீணீtலீமீக்ஷீ ஒருஅதாவது ஆலோசகர் ஒருவரை தேர்வு செய்து கொள்ள வேண்டும்.அவர் அடுத்த மதம் அல்லது இனத்தைச் சேர்ந்தவராக இருக்கவேண்டும். இல்லையெனில் இவர்களை அவர் தமது சுயநலத்திற்காகப்பயன்படுத்திக் கொள்வார்.
சரியான ஆலோசகர் ஒருவரைத்தேர்ந்தெடுத்த பின்பு, அவரின் ஆலோசனைப்படியே தங்களின்காரியங்களைச் செய்து வரவேண்டும். இதனால் மனதில்தன்னம்பிக்கையும், திட்டமிட்டபடி செயல்களும் உருவாகும்.வெற்றிகள் தொடரும். ஆலோசகர் கிடைக்காவிட்டால் அவரவர்களின்இஷ்டப்பட்ட இறைவனின் சன்னிதானம் சென்று (தட்சிணாமூர்த்திமுன்பு சிறப்பானது) உங்களது பிரச்சினைகளைச் சொல்லிஇறைவனிடம் பிரார்த்தியுங்கள். உங்களுக்கு இறைவனின் கருணைஇயற்கையிலேயே மிக உண்டு. இதன் மூலம் நல்ல வழித்தூண்டுதலும், செயல் முன்னேற்றமும் உங்களுக்கு நிச்சயம்கிடைக்கும்.
திரவ உணவுகளே இவர்களுக்கு மிகவும் பிடித்தமானது. டீ, காபி,பானங்கள் ஆகியவற்றை விரும்பி அருந்துவார்கள். மதுப்பழக்கத்திற்கு அடிமையாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.இல்லையெனில் இவர்களது வாழ்க்கை மதுவாலேயே அழிந்துவிடும்.
குடும்ப வாழ்க்கை
இந்த எண்காரர்களுக்குக் குடும்ப வாழ்க்கை சிறப்பாகச்செல்லப்படவில்லை. சிறிய பிரச்சினைகளையும் கூடப்பெரிதுபடுத்திக் கொண்டு, மனைவிடம் சண்டை போடுவார்கள்.குடம்பத்தில் நிம்மதியற்ற சூழ்நிலை உருவாகும். குழந்தைகளாலும்நிம்மதி குறைவு. எனவே, தங்களுக்கு வரும் மனைவியின் பிறந்தஎண்களை முன்பே நன்முறையில் தேர்வு செய்து கொண்டு, திருமணம்செய்து கொள்ள வேண்டும். இப்படிச் செய்தால், இவர்களும்ஆனந்தமான வாழ்க்கை வாழலாம். இவர்கள் தங்களது குடுத்பத்தில்உள்ள மனைவி, குழந்தைகளை நம்ப வேண்டும். அவர்களுடன்ஒத்துழைத்து, அவர்களிடம் அன்பு காட்டினால், பின்னர் அவர்களால்நல்ல இன்பமான வாழக்கை அடையலாம். எந்த நிலையிலும், குடும்பநிர்வாகத்தைத் தங்களிடமே வைத்துக் கொள்ளலாமல், மனைவிஅல்லது தாயாரிடம் ஒப்படைத்துவிட்டால், பாதிக் குழப்பங்கள்வராமல் தடுத்துவிடலாம்.
உடல் அமைப்பு
இவர்கள் உயரமானவர்களாக இருப்பார்கள். சந்திரனின் வலிமைகுறைந்தால், நடுத்தர உயரமாக அல்லது குள்ளமாக இருப்பார்கள்.நல்ல சதைப் பற்றுள்ள உடம்பை உடையவர்கள். உடல் பலம் இராது.உருண்டையான முகமும், அகன்ற கண்களும், கனத்த இமைகளும்உண்டு. பற்கள் சீராக இருக்கா. நொந்தி விழுவதை எதிர்பார்க்கலாம்.
அதிர்ஷ்ட நாட்கள்
ஒவ்வொரு மாதத்திலும் 7, 16, 25 ஆகிய தேதிகளும், எண் 7 வரும்தினங்களும் மிகவும் அதிர்ஷ்டமானவை.
2, 11, 20, 29 தேதிகளிலும் நடுத்தரமான நன்மையே நடக்கும். 1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் சாதமான பலன்கள் நடைபெறும். 8 மற்றும்9 எண்கள் இவர்களுக்கு கெடுதல் செய்பவையே. ஒவ்வொருமாதத்திலும் 8, 9, 18, 26, 17, 27 ஆகிய தேதிகள் துரதிர்ஷ்டமானவை.புதிய முயற்சிகளைத் தவிர்க்க வேண்டும்.
அதிர்ஷ்ட இரத்தினம், உலோகம்
வெள்ளி நன்மை தரும். வெள்ளியுடன் தங்கத்தையும் சேர்த்துக்கொண்டால் நல்ல பலன்களை அடையலாம்.
முத்து, சந்திர காந்தக்கல் வைடூர்யம் ஆகியவை அணிந்தால் அதிர்ஷ்டபலன்களை அடையலாம்.
பச்சை இரத்தினக்கல் ஜேட் என்னும் கற்களையும் அணியலாம். நல்லபலன்களைக் கொடுக்கும்.
அதிர்ஷ்ட நிறங்கள்
1. பச்சை கலந்த வர்ணங்களும், லேசான பச்சை, மஞ்சள், வெண்மைநிறங்களும் அதிர்ஷ்டகரமானவை.
2. கருப்பு, சிவப்பு, ஆழ்ந்த நீலம் ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும்.
இப்போது 2ம் எண் குறிக்கும் தேதிகளில் பிறந்தவர்களின் பலன்களைஅறியலாம்.
2ம் தேதி பிறந்தவர்கள்
உயர்ந்த இலட்சியத்தை ஏற்றுச் செயல்படுவார்கள். கற்பனைச்சக்தியும் அதிகம் உடையவர்கள். சாந்தமும், அமைதியும்உடையவர்கள். மக்கள் சிர் திருத்த எண்ணங்கள் உருவாகும். பேச்சுவார்த்தைகள் மூலமே பிரச்சினைகளைத் தீர்க்க விரும்புவார்கள்.எழுத்தாளர்கள், கவிஞர்கள், நடிகர்கள் போன்றோர் உருவாகும் நாள்இது. 2ம் எண்ணின் முழு ஆதிக்கமும் கொண்டது.
11ம் தேதி பிறந்தவர்கள்
விளையாட்டில் மிகுந்த ஈடுபாடு உடையவர்கள். தன்னம்பிக்கையுடன்முன்னேறுவார்கள். தெய்வீக ஆற்றல் உண்டு. வாக்கு பலிதமும்உண்டு. பொது நலத்திற்காகத் தங்களது அறிவைப்பயன்படுத்துவார்கள். இதனால் பல சோதனைகளும் உண்டாகும்.தேவைக்கு ஏற்ற பொருளாதாரம் நிச்சயம் உண்டு. நிம்மதியானவாழக்கை உண்டு. தங்களது திறமைகளைச் சுயநலத்திற்காகப்பயன்படுத்திக் கொண்டால், பொருளாதார நிலையை மிகவும்உயர்த்திக் கொள்ளலாம். ஆனாலும் மனம் வராமல், தயங்கிநிற்பார்கள்.
20ம் தேதி பிறந்தவர்கள்
மற்ற மக்களுக்காக உரிமையுடன போராடுவார்கள் இவர்களே,ஆனாலும், பேராசை இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.சுயநலத்தை விட்டுவிட்டால், பெரும் புகழும், செல்வமும் வந்து சேரும்.பல மக்களுக்கு வழிகாட்டியாக இருப்பார்கள். கற்பனை வளம்நிறைந்தவர்கள். தங்களது உணர்ச்சிகரமான பேச்சினால், மக்களைவசியம் பண்ணும் ஆற்றல் உண்டு. தன்னம்பிக்கை அதிகம் உண்டு.அது ஆணவமாக மாறாமல் பார்த்துக் கொண்டால் வாழ்க்கை நன்குஅமையும்.
29ம் தேதி பிறந்தவர்கள்
2ம் எண்ணின் ஆதிக்கம் மிகவும் குறைந்த எண் இது. இதனால்இவர்கள் போராடும் மனோபலம் உடையவர்கள். பிரச்சினைகளைவாய்ச் சமர்த்தினாலும், தேவைப்பட்டால் வன்முறையில் கூடஇறங்கிச் சமாளிக்கத் தயங்க மாட்டார்கள். திருமண வாழக்கை பலபிரச்சினைகள் உடையதாக இருக்கும்.
பஞ்சாயத்து வரை சென்று,குடும்பப் பிரச்சினைகள் தீரும். தங்கள் ஆற்றலை நல்லகாரியங்களுக்காகச் செலவிடவில்லையென்றால், இவர்கள் சமூகவிரோதியாக மாறவும் வாய்ப்பு உண்டு. சமுதாயத்திற்கே இவர்களால்தொந்தரவு ஏற்படலாம். சர்வாதிகாரிகள் பலர் இந்த எண்ணில்பிறந்தவர்கள். கடத்தல், கள்ளச் சந்தை போன்றவற்றில் கூட ஈடுபடத்தயங்க மாட்டார்கள்.
அதிகாரிகளாக இரந்தால் லஞ்சம், கள்ளக்கையெழுத்து (போர்ஜரி) போன்றவற்றில் ஈடுபடவும் துணிவார்கள்.29ந் தேதியில் பிறந்த நல்லவார்களால், பல அரிய சாதனைகளும்உலகில் நிகழ்ந்துள்ளன. தங்களுடைய வாழ்க்கைப் பாதையைச்சரியான பாதையில், விடாப்பிடியாக நடந்தால் இவர்கள் மனிதர்களில்மாணிக்கமாவார்கள்.
எதிரி மிஞ்சினால் கெஞ்சுவதும், கெஞ்சினால்மிஞ்சுவதும் இவர்களின் சுபாவமாகும். வீறாப்புப் பேச்சும், நல்லவர்போன்ற நடிப்பும் உண்டு. எதற்கும் ஆட்சேபணை எழுப்பும்பிடிவாதமும் உண்டு.
கூட்டு எண்ணைப் பொறுத்து வாழ்க்கையின் முடிவு அமையும்.
முக்கிய குறிப்பு
சந்தர்ப்பங்கள் இவர்களைத் தேடி வரவேண்டும் என்றுஎதிர்பார்ப்பார்கள். இதைவிட்டு விட்டு இவ்ரகள் சந்தர்ப்பங்களைஏற்படுத்தி, முழு மனதுடன் செயலாற்றினால் எளிதில் இவர்களைவெற்றி மகள் தேடி வருவாள்.
2ஆம் எண் ஆதிக்கத்திற்கான தொழில்கள்
இவர்கள் கலை மற்றும் தண்ணீர் தொடர்புள்ள தொழில்களைச்செய்பவர்களாக இருப்பார்கள். திரைப்படம் தயாரிப்பது, பத்திரிகைநடத்துதல் மற்றும் எழுதுதல் ஆகியவையும் ஒத்து வரம். பேச்சாளர்கள்,கலைஞர்கள், ஓவியர்கள், பாடல் எழுதுபவர்கள் போன்றவர்களாகவும்இருப்பார்கள்.
விவசாயம், ஜவுளி வியாபாரம், நகை, வெள்ளி ஆபரணங்கள்விற்பனை, புகைப்படத் தொழில் ஆகிய தொழில்களும் நன்குஅமையும்.
துணி தைத்தல், துணி வெளுத்தல், மர வியாபாரம், வாசனைத்திரவியங்கள், காய்கறிகள் விற்பனையும் இவர்களுக்கானதொழில்கள். கற்பனை சக்தி அதிகம் உள்ளதால், மனோ வேகம்அதிகமாக இருக்கும்.
இவர்கள் பேச்சில் வல்லவர்களாக இருப்பதால் வக்கீல் தொழில்,வாக்குவாதம் செய்தல் போன்றவையும் ஒத்து வரும். மனத்தில்சந்தேகமும், அதைரியமும் எப்போதும் இவர்களை வாட்டி வரும்.அவற்றை தகுந்த குருவின் மூலம் ஆலோசனைகள் பெற்று நீக்கிக்கொள்ள வேண்டும். தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ளவேண்டும்.
நவக்கிரக மந்திரங்கள் – சந்திரன்
சந்திரன் தொடர்பான பிரச்சனைகள் மற்றும் சந்திர தசை அல்லதுசந்திர அந்தர் தசையின் போது: சந்திரனின் கடவுளான கௌரியைத்தினமும் வழிபடவேண்டும். தினசரி அன்னப்பூர்ணா சோஸ்திரம்படிக்க வேண்டும்.
சந்திர மூல மந்திர ஜபம்:
“ஓம் ஸ்ரம் ஸ் ரீம் ஸ்ரௌம் ஷக் சந்திராய நமஹ”,
48 நாட்களில் 10000 முறை சொல்ல வேண்டும்.
சந்திர ஸ்தோத்திரம் படிக்க வேண்டும்.
ததி சங்க துஷாராபம்
ஷீரோதார்ணவஸம்பவம்!
நமாமி சசினம் ஸோமம்
சம்போர் மகுடபூஷணம்!!
தமிழில்,
எங்கள் குறைகள் எல்லாம் தீர்க்கும்
திங்களே போற்றி!, திருவருள் தருவாய்
சந்திரா போற்றி!, சத்குரு போற்றி!
சங்கடந் தீர்ப்பாய் சதுர போற்றி!
48 நாட்களில் 7000 முறை சொல்ல வேண்டும்.
தொண்டு: திங்களன்று நன்கொடையாக மாட்டுப்பால் அல்லது அரிசிகொடுக்க வேண்டும்.
நோன்பு நாள்: திங்கள்.
பூஜை: தேவி பூஜை.
ருத்ராட்சம்: 2 முக ருத்ராட்சம் அணிய வேண்டும்.
சந்திர காயத்ரி மந்திரம்
பத்மத்வஜாய வித்மஹே ஹேமரூபாய தீமஹி |
தந்நோ ஸோம: ப்ரசோதயாத் ||
சந்திர தசையின்போது வால்மீகி ராமாயணத்தில் சுந்தர காண்டத்தின்,5 வது அத்தியாயம் தினமும் படிக்க வேண்டும்.
சந்திர பகவானுக்கு உரியவையும், பிரீத்தியானவையும்
ராசி கடகம் திக்கு தென்கிழக்கு
அதி தேவதை நீர் ப்ரத்யதி தேவதை கௌரி
தலம் திருப்பதி, திங்களூர் வாகனம் வெள்ளை குதிரை
நிறம் வெண்மை உலோகம் ஈயம்
தானியம் நெல், பச்சரிசி மலர் வெள்ளை அலரி, அல்லி
வஸ்திரம் வெள்ளை ஆடைகள் ரத்தினம் முத்து
நைவேத்யம் தயிர் அன்னம் சமித்து ருக்கஞ்சமித்து
சங்கீத முமூர்த்திகளில் ஓருவரும், வேத விற்பன்னருமான ஸ்ரீ மான் முத்துசாமி தக்ஷிதர் அருளியது.
சந்திர பகவான் கீர்தனைகளை அசாவேரி ராகத்திலும்
சந்திர பகவான் : கீர்த்தனம் – பல்லவி
சந்த்ரம் பஜமானஸ ஸாது ஹ்ருதய ஸத்ருஸம்
அனு பல்லவி
இந்த்ராதி லோக பாலேடித தாரேஸம் இந்தும்
ஷோடச கலாதரம் நிஸாகரம் இந்த்ரா ஸஹோதம் ஸூதாகரம்அனிஸம்
சரணம்
விதும் குமுதமித்ரம் விதி குரு குஹவ்க்த்ரம்
சசாங்கம் சீஷ்பதி ஸாபானுக்ரஹ பாத்ரம் ஸரத்சந்த்ரிகாதவல
ப்ரகாச காத்ரம் கங்கண கேயூரஹார மகுடாதிதரம்
பங்கஜரிபும் ரோஹிணீ ப்ரியகர சதுரம் “சந்த்ரம்”
சாதுக்களின் மனம் போன்றவரே, லோக பாலகர்களால்போற்றப்படுபவரே, தாரைக்கும் , ஈசனுக்கும் சந்தோஷம் தருபவரே,16 கலைகளை உடையவரே, லஷ்மியுடன் பிறந்தவரே, இரவினைஉண்டு பண்ணுபவரே, சிவனது தலையை அலங்கரிப்பவரே,திருவேங்கடனுக்கு கண்ணாய் உள்ளவரே,
நான்கு கரமுடையவரே, பிரம்மனின் குருவான குஹனின் முகமாய்உள்ளவரே, கங்கணம் முதலிய ஆபரணம் அணிந்துள்ளவரே,மன்மதனுக்கு குடையாக இருப்பவரே, முயலை அடையாளமாககொண்டுள்ளவரே, ரோஹிணிக்கு பிரயத்தை அளிப்பவரே, இதகையகீர்த்தி கொண்ட சந்திர பகவானை துதிப்போமாக.
சந்திர பகவான் தோஷங்கள் நீங்கிட
சந்திர பகவானுக்கு, திங்கட் கிழமைகளில் அபிஷேகம் செய்து,வெள்ளை வஸ்திரம் உடுத்தி, முத்து மாலை அணிவித்து, வெண்ணிறமலர்களால் அலங்காரம் செய்து, முருக்கஞ் சமித்தினால் யாஹம்செய்து, சந்திர மந்திரங்கள் ஓதி, பச்சரிசியால் செய்த பாலன்னம்நைவேத்யம் வைத்து, அசாவேரி ராகத்தில் சந்திர கீர்த்தனைகள்இசைத்து, தீப தூபம் காட்டி வழிபட வேண்டும்.
சந்திர பகவான் சம்பத்து விருத்தி, தாயார் உடல் நலம், கற்பனை,பெரியோரின் ஆசி, சரீர ஆரோக்யம், பால்பாக்ய விருத்தி, சுபகாரியங்கள் போன்றவற்றின் காரண கர்த்தா. சந்திர தோஷத்தால்வீண் விரோதம், இருதய நோய்கள், சூதில் நஷ்டம் போன்றவைஉண்டாகும்.
சந்திர தோஷம் நீங்க வெண்ணிற ஆடைகள் அணிவதும், பௌர்ணமிவிரதம் இருப்பதும், முத்தாபரணங்கள் அணிந்து கொள்வதும்,வெண்ணிற ஆடைகள் மற்றும் அரிசி தானம் செய்வதும் சிறந்தபலன்களை தரும்.
சந்திர பகவான் ஸ்தோத்ரம்
ரோஹிணீச: ஸூதாமூர்த்தி: ஸூதாகாத்ர: ஸூதர்சன:
விஷமஸ்தான ஸம்பூதாம் பீடாம் ஹரது மே விது:
ரோஹிணி நாதனும், அம்ருத மூர்த்தியின் அமிர்தத்தினைஅருந்துபவருமாகிய சந்திர பகவானே, எனது ஜாதகத்தில் உமது கிரகஇருப்பிட தகாத ஸ்தானத்தால் விளைந்துள்ள என்னுடையதோஷங்களை போக்கியருள வேண்டும்
வெண்மை நிற மலர்களை கொண்டு அர்ச்சிப்பதாலும், வெண்மை நிறஆடைகள் உடுத்திக் கொள்வதாலும், முத்தினால் செய்த ஆபரணங்கள்அணிந்துகொள்வதாலும், பௌர்ணமி விரதம் இருப்பதாலும்,வெண்மை நிற வஸ்திரங்கள் மற்றும் அரிசி தானம் செய்வதாலும் சந்திர கிரக தோஷ நிவர்த்தி பெறலாம்.
சிறப்பான சில குறிப்புகள்
எண் : 2
எண்ணுக்குறிய கிரஹம் : சந்திரன்
அதிர்ஷ்ட தேதிகள் : 7, 16, 25
அதிர்ஷ்ட கிழமை : திங்கள், ஞாயிறு, வெள்ளி
அதிர்ஷ்ட மாதங்கள் : பிப்ரவரி, ஜுலை, நவம்பர்
அதிர்ஷ்ட ரத்தினங்கள் : முத்து, வைடூர்யம்
அதிஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட நிறங்கள் : வெண்மை, வெளிர்பச்சை, மஞ்சள்இவைகளும் ஏற்றவை
அதிர்ஷ்ட தெய்வங்கள் : அம்பாள், வேங்கடாஜலபதி, பைரவி
அதிர்ஷ்ட மலர்கள் : வெள்ளை அல்லி, ஜாதிப்பூ
அதிர்ஷ்ட தூப, தீபம் : சாம்பிராணி தூபம் மற்றும் தீபம்
அதிர்ஷ்ட சின்னங்கள் : நரி, மான், பசு, கப்பல், நீர்நிலைகள்,பிறைநிலா, ராணி, சங்கு
அதிர்ஷ்ட மூலிகைகள் : நத்தைசூரி, வெள்ளெருக்கு
அதிர்ஷ்ட யந்திரங்கள் : துர்கா யந்திரம்
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட உலோகம் : வெள்ளி
ஆகாத எண் மற்றும் கூட்டுத்தொகை : 8,9
ஆகாத தேதிகள் : 08, 09,17,18, 26, 27
ஆகாத நிறம் : கருப்பு,சிகப்பு,அடர்நீலம்
ஆகாத கிழமை : செவ்வாய், சனி
http://www.newlanka.lk/3901

No comments:

Post a Comment