தொலைக்காட்சி!!

Search This Blog

Sunday, January 10, 2016

உங்களுக்கு “M” வடிவிலான ரேகை இருகின்றதா? இதை பாருங்கள்!

ஜோதிடத்தில் பலவகை இருக்கின்றன, நாடி ஜோதிடம், எண் ஜோதிடம், கிளி ஜோதிடம், கை ரேகை ஜோதிடம், குறி சொல்லுதல் என மனிதர்களின் கடந்த காலம், நிகழ் காலம், எதிர் காலம் பற்றி கூற பல முறைகள் கடைபிடிக்கப்படுவதை நாம் நமது ஊர்களில் பார்க்க முடிகிறது.

ஒருவரது கையில் "M" வடிவிலான ரேகை அமைந்திருந்தால் அவரது வாழ்க்கை குணாதிசயங்கள் எப்படி இருக்கும் என்று தெரிந்துகொள்வோம்.
"M" வடிவிலான ரேகை
இந்த "M" வடிவிலான ரேகையானது, மூளை, இதயம், விதி மற்றும் வாழ்க்கை போன்ற ரேகைகளின் கலவை ஆகும். இவை மொத்தமும் சேர்ந்து "M" போன்ற வடிவில் உள்ளங்கையில் சிலருக்கு அமைந்திருப்பதை காண முடியும்.
வலது கை
இதுபோன்று "M" வடிவிலான ரேகை வலது கையில் அமைந்திருந்தால், அவர்களுக்கு செல்வம், பொருள் விடயங்கள் மற்றும் தர்க்கமானவை (Logic)கிடைக்கப்பெறும்.
இடது கை
இதுபோன்று "M" வடிவிலான ரேகை இடது கையில் அமைந்திருந்தால், அவர்களுக்கு தாய், தாரம் மற்றும் உணர்வு ரீதியானவற்றில் நிறைய சிறப்புகள் அமையும்.
சிறப்பு அம்சங்கள்
*உள்ளங்கையில் M வடிவிலான ரேகை அமைந்திருந்தால் அவர்கள் இயற்கையாகவே தலைமை வகிக்கும் குணாதிசயம் பெற்றிருப்பார்கள் என்று பண்டையக் காலத்து பாரம்பரியத்தில் கூறப்பட்டுள்ளது.
*"M" வடிவிலான ரேகை உள்ளவர்களுக்கு வலிமையான உள்ளுணர்வு இருக்குமாம். இவர்களால் வஞ்சகம் செய்வது போன்றவற்றை முன்னரே கண்டறிய முடியும் என்றும், பெண்கள் மத்தியில் இது அதிகமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
*இயற்கையாகவே தலைமை வகிக்கும் தன்மை உள்ள இவர்களுக்கு, வசதி வாய்ப்புகள், நல்ல எதிர்காலம் மற்றும் சிறந்த வாய்ப்புகளும் அமையப் பெறுவார்கள்.
*உள்ளங்கையில் "M" வடிவிலான ரேகை அமைந்திருப்பதும், நல்லுணர்வுக்கும் இணைப்பு உள்ளது என்றும் கூட சிலர் கூறுகிறார்கள்.
- See more at: http://www.manithan.com/news/20160109118307#sthash.LKxhuPsL.dpuf

No comments:

Post a Comment