தொலைக்காட்சி!!

Search This Blog

Sunday, January 17, 2016

பூவுலகில் மாயம் நிகழ்த்திய மாயவனுக்கு உளியால் மாயம் நிகழ்த்திய அந்த கலைஞனை எப்படி கொண்டாட !


கண்ணன் என்றால் தான் என்ன? கிருஷ்ணன் என்றால் தான் என்ன ? அந்த பெயரை ஆழ்ந்து உச்சரிக்கும் போது அவனுடைய அத்தனை திருவிளையாடல்களும் மனதுக்குள் படமாகி இதழோரம் ஒரு குறுநகையை தவழ விடுமே.வாழ்வையே விளையாட்டாக வாழ்ந்து பார்த்தவனல்லவா அவன் ? ஒரு போரையே விளையாட்டாக நடத்திய சூத்திரதாரி .எவ்வளவு விஷயங்களை சாதாரணமாக நிகழ்த்தி சென்றிருக்கிறான் அவன்.
காதலில் மட்டும் சளைத்தவனா ? கண்ணன் தீராத விளையாட்டு பிள்ளை அல்லவா ?
ஒருவர் அறியாமல் ஒருவர் என இருவரையும் மணந்த மங்கையர் உள்ளம் கவர்ந்த கள்வன்.ஒரு சிற்பிக்கு சவாலாக நின்ற கண்ணனை சிற்பத்தின் மூலம் விடை கூறிய அந்த கலைஞனின் விரல்களில் மட்டுமா அந்த கலைத்திறன் ? எவ்வளவு கூரிய மதிநுட்பமும் காட்சிப்படுத்தும் யோசனையும் இருந்திருக்கிறது .மாயவனை கல்லிலே கட்டி வைத்து விட்டானல்லவா ? எவ்வளவு பேரிடம் அகப்படாமல் ஆடிக்களித்த மாதவன் அந்த நாயக்கர் கால கலைஞனுக்கு தன்னை ஒப்புக்கொடுத்த பேரழகை காண குடந்தை இராமசாமி கோவிலுக்கு செல்ல வேண்டும் .
ஒரு புறமிருந்து பார்த்தால் ருக்மிணி தேவியை மட்டும் அணைத்திருப்பதாய் தோன்றும் .
மறுபுறம் பார்த்தால் தேவி சத்யபாமாவை மட்டும் கைபிடித்திருப்பதாய் தோன்றும் .தூணின் கோண பகுதியில் நின்று கண்டால் மட்டுமே கண்ணன் கைப்பிடித்த மனைவியர் இருவரையும் காண இயலும்.இப்பூவுலகில் மாயம் நிகழ்த்திய மாயவனுக்கு உளியால் மாயம் நிகழ்த்திய அந்த கலைஞனை எப்படி கொண்டாட !

No comments:

Post a Comment