தொலைக்காட்சி!!

Search This Blog

Thursday, January 21, 2016

ஆயிரம் ஆண்டுகளை கடந்தும் துருப்பிடிக்காமல் இருக்கும் தூண்


இந்தியர்கள் பண்பாடு, கலாச்சாரம்,போன்றவற்றில் மட்டுமில்லாது கட்டடக்கலையிலும் சிறந்து விளங்கினார்கள் என்பதற்கு சான்றாக பல்வேறு சின்னங்கள் இப்போதும் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. 
டெல்லி குதுப்மினார் வளாகத்தில் உள்ள இரும்பு தூணும் அப்படிப்பட்ட ஒரு நினைவு சின்னம் தான்.
குப்தர்கள் ஆட்சியின் போது உருவாக்கப்பட்டதாக கூறப்படும் இந்த தூண் முதலில் எங்கு நிறுவப்பட்டிருந்தது என்பது தொடர்பாக இன்று வரை விவாதங்கள் நடைபெற்று வருகின்றன ஆனால் விடைதான் கிடைக்கவில்லை.
அப்போதைய டெல்லியின் மன்னராக இருந்த இல்தூமிஸ் போரில் வெற்றி பெற்றதின் நினைவாக கி.பி.1233ஆம் ஆண்டு தற்போது அமைந்துள்ள இடத்துக்கு இந்த தூணை எடுத்து வந்திருக்கலாம் என்ற தகவலும் கூறப்படுகிறது.
இந்த தூணில் பிராமி எழுத்துகள் பொறிக்கப்பட்டுள்ளன. இந்த தூணின் முக்கிய சிறப்பே துருப்பிடிக்காத அதன் தன்மைதான்.
உலகளவில் மிகவும் மாசு நிறைந்த நகரங்களில் டெல்லியும் ஒன்று அப்படிப்பட்ட டெல்லியில் 1000 ஆண்டுகளுக்கு மேலாக அமைந்திருந்தும் இந்த தூண் துருப்பிடிக்காமல் இருப்பது என்பது சாதாரண நிகழ்வா?
மழை, மாசு, வெயில் என்ன அனைத்தையும் தாண்டி கம்பீரமாக இந்த தூண் நிற்பதற்கு காரணம் அதன் கட்டுமானத்தில் ஒளிந்துள்ள ரகசியமே காரணம் என்று வல்லுனர்கள் கூறுகின்றனர்.
அதாவது, தூண் அமைக்க பயன்படுத்தப்பட்ட இரும்பின் நுண்ணிய அமைப்பில் உள்ள கசடு மற்றும் இரும்பு ஆக்சைடுகள் ,உலோகத்தில் அதிகளவு பாஸ்பரஸ் உள்ளது மற்றும் சுற்றுச்சூழலுக்கு ஏற்றவாறு உலர்தல் மற்றும் ஈராமாகும் தன்மை ஆகியவை இந்த தூண் துருபிடிக்காமல் இருப்பதற்கு முக்கிய காரணங்களாக கூறப்படுகின்றன.
ஒருவர் இந்த தூணுடன் தனது முதுகை இணைத்து பின்பக்கமாக தனது கைகளை கோர்க்க முடிந்தால் அவர்கள் நினைப்பதுநடக்கும் என்பது நீண்டகால ஐதீகமாகும்.
ஆனால் அதிகளவு மக்கள் இவ்வாறு செய்வதால் அவர்களது வேர்கையின் காரணமாக தூண் துரு பிடிக்கலாம் என்பதால் தற்போது இந்த தூணை சுற்று பாதுகாப்பு வேலி அமைக்கப்பட்டுள்ளது.
பண்டைய கால இந்தியர்கள் உலோகவியலில் சிறந்து விளங்கினார்கள் என்பதற்கு சான்றாக பல ராஜ்யங்களை கடந்து இன்றும் கம்பீரமாகவே நிற்கிறது இந்த தூண்.

No comments:

Post a Comment