தொலைக்காட்சி!!

Search This Blog

Saturday, January 2, 2016

உடலுக்கு ஆரோக்கியம் தரும் அமிலங்கள் என்னென்ன?

சில வகை அமில குறைபாடுகளால் பல்வேறு வகையான நோயின் தாக்கத்திற்கு ஆளாகிறோம்.
அமிலங்கள் இயற்கையாகவே சுரக்கும் தன்மை கொண்டிருந்தாலும், இவற்றில் சில மாறுபாடுகள் ஏற்படும் போது அதாவது அதிகமாகவோ அல்லது குறைவாகவோ சுரக்கும் போது பாதிப்புகள் ஏற்பட ஆரம்பிக்கிறது.
குழந்தைகள், பெண்கள், கர்ப்பிணிபெண்கள்,நோய் பாதிப்பு உள்ளவர்களுக்கு அமிலத் தேவைகளின் அளவுகள் மாறுபடும்.
எனவே மருத்துவர்களின் ஆலோசனைப்படி அமிலம் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்வது அவசியம்.
நிக்கோடினிக் அமிலம் (Nicotinic Acid)
இரத்தத்தில் சர்க்கரை மற்றும் கொலஸ்ட்ரால் அளவை நிலைப்படுத்த நிக்கோடினிக் அமிலம் பெரிதும் உதவுகிறது. இந்த அமிலத்தின் அளவு குறையும் போது அதிகப்படியான டென்ஷன், சத்துக்குறைபாடு, எரிச்சல், ஞாபகமறதி போன்ற பாதிப்புகள் தாக்ககூடும்.
 கிடைக்கும் உணவுகள்
முட்டையின் மஞ்சள் கரு, ஆட்டு ஈரல், பாதாம் மற்றும் பருப்பு வகைகள், முழு தானியங்கள், போன்ற உணவுகளை அதிகம் சேர்த்துக்கொள்வதால் அமிலத்தின் அளவை அதிகரிக்கலாம். ஒரு மனிதனுக்கு இந்த அமிலத்தின் அளவானது நாள் ஒன்றுக்கு 18மில்லி கிராம் வரை தேவைப்படுகிறது.
பேத்தொடெனிக் அமிலம் (Pantothenic Acid)
உடம்புக்கு தேவையான சத்துக்களை உற்பத்தி செய்ய பேத்தோடெனிக் அமிலம் தேவை. இது மனிதனின் மூளை, நரம்பு மண்டலங்களின் செயல்பாடுகளுக்கு மிகவும் உதவிபுரிகிறது.
கவனமின்மை, பல்வலி, வாந்தி மற்றும் சத்து குறைபாடு, போன்ற பாதிப்புகள் பேத்தொடெனிக் அமிலம் குறைவதனால் ஏற்படுகிறது.
கிடைக்கும் உணவுகள்
முழுதானியங்கள், பருப்பு வகைகள், முட்டை, மஞ்சள் கரு, ஆகிய உணவுகளை உணவில் சேர்த்தால் சரி செய்துவிடலாம். ஒரு மனிதனுக்கு அமிலத்தின் அளவானது நாள் ஒன்றுக்கு 6மில்லி கிராம் வதை தேவைப்படுகிறது.
ஆஸ்கார்பிக் அமிலம் (Ascorbic Acid)
விட்டமின் சி தான் ஆஸ்கார்பிக் அமிலம், விட்டமின்களில் முக்கியமான விட்டமின் இது. இந்த விட்டமின்கள் தசை வளர்ச்சிக்கும், நோய் எதிர்ப்பு சத்தியை உருவாக்குவதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது.
இது இரும்புச்சத்தை உணவிலிருந்து உறிஞ்சுவதற்கும், புற்றுநோய் மற்றும் இதய நோய்களில் இருந்து பாதுகாக்கவும் உதவுகிறது. இந்த அமிலமானது குறையும் போது ஈறுகளில் ரத்தம் வடிதல், இரத்தசோகை, போன்ற பாதிப்புகள் ஏற்படுகிறது.
 கிடைக்கும் உணவுகள்
மிளகை அதிக அளவு உணவில் எடுத்துக்கொண்டால் இந்த பாதிப்பை தவிர்க்கலாம். மேலும் ஆரஞ்சு, எலுமிச்சை, சாத்துக்குடி, முருங்கைக்கீரை, தக்காளி, கிவி பழம், முந்திரி, நெல்லிக்காய், போன்ற உணவுகளிலும் இந்த அமிலமானது நிறைந்து காணப்படுகிறது. ஒரு நாளைக்கு மனிதனுக்கு தேவையான அளவு 40 மில்லி கிராம்.
போலிக் அமிலம் (Polic acid)
இரத்த சிவப்பணுக்களை தூண்டுவதற்க்கும், அவற்றின் முதிர்ச்சித் தன்மைக்கும் போலிக் அமிலம் பயன்படுகிறது. கர்ப்பிணி பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் அவசியம் தேவைப்படக்கூடிய அமிலம் இது. இந்த காலகட்டத்தில் குழந்தையின் வளர்ச்சிக்கு மிகவும் உதவக்கூடியது-. காசநோய், புற்றுநோய் நோய்களுக்கான மருந்து தயாரிப்பிலும், அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது.
 கிடைக்கும் உணவுகள்
பால், முட்டை, ஈரல், ஈஸ்ட், கீரை, ஓட்ஸ், மற்றும் பருப்பு போன்ற உணவின் மூலமும் இந்த அமிலத்தின் உற்பத்தியை அதிகரிக்க முடியும். சாதாரண மனிதனுக்கு நாள் ஒன்றுக்கு 200மைக்ரோகிராம் தேவை. கர்ப்பிணிபெண்களுக்கு 500 கிராம் வரை தேவைப்படும்.
ஹைட்ரோகுளோரிக் அமிலம் (Hydrochloric acid)
இந்த அமிலம் மட்டும்தான் நம் வயிற்றிலே சுரக்கக்கூடியது. இரைப்பையில் அமில காரத்தன்மையை நிலைநிறுத்தி உணவைச் செரிமானம் செய்வதற்கு உதவுகிறது.
அமிலம் இரைப்பையில் குறைந்தால் செரிமானக்கோளாறுகள் வயிறு உப்புசம், அதீத தூக்கம், அடிக்கடி பசி, தொற்றுநோய், போன்றவை ஏற்படும்.
அமிலம் இரைப்பையில் அதிகமானால் வயிற்றுபுண், ஆரோக்கிய பிரச்சனைகள் ஏற்படும். இந்த அமிலம் நிலைத்தன்மையில் இருப்பது- அவசியம்.
 கிடைக்கும் உணவுகள்
மிளகு, மினிகர் ஆகியவற்றை உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் நிலைப்படுத்தமுடியும். சிலருக்கு இயல்பாகவே இந்த அமிலம் குறைவாக இருக்கும். அவர்கள் மருத்துவரின் ஆலோசனைப்படி மருந்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

No comments:

Post a Comment