தொலைக்காட்சி!!

Search This Blog

Monday, January 11, 2016

விஷ்ணுவின் தசாவதாரம்!தசாவதாரம் என்பது விஷ்ணுவின் பத்து அவதாரங்களை குறிப்பதாகும். இறைவன் பூமியில் பிறப்பெடுப்பதை அவதாரம் என்று இந்துகள் குறிப்பிடுகின்றார்கள். வைணவ சமயத்தின் முழுபெரும் கடவுளான பெருமாள் உலகில் அதர்மம் ஓங்குகின்ற போது, பக்தர்களை காக்கவும், தர்மத்தினை நிலை நாட்டவும், அரகக்கர்களை அழிக்கவும் அவதாரம் எடுப்பதாக வைணவர்கள் நம்புகின்றார்கள். அவ்வாறு பெருமாள் எடுத்த அவதாரங்களில் பத்து அவதாரங்கள் தச அவதாரங்கள் என்று வழங்கப்படுகின்றன. தசம் என்றால் பத்து என்று பொருள். மோகினி, வெங்கடாஜலபதி, ஹயக்ரீவர் என இந்த தசவதாரப் பட்டியலில் இடம் பெறாத பெருமாளின் அவதாரங்களும் உள்ளன.
1. மச்ச அவதாரம்
2. கூர்ம அவதாரம்
3. வராக அவதாரம்
4. நரசிம்ம அவதாரம்
5. வாமண அவதாரம்
6. பரசுராம அவதாரம்
7. ராம அவதாரம்
8. பலராம அவதாரம்
9. கிருஷ்ண அவதாரம்
10.கல்கி அவதாரம் என்பது இந்து சமயத்தின் கூற்றுப்படி விஷ்ணு பகவானின் பத்தாவதும் இறுதியுமான மகா அவதாரமாகும். கல்கி பகவான் கலி யுகத்தில் தோன்றி அனைத்து தீயவைகளையும் அழிப்பாராவார் என்பது ஒரு கூற்று. கல்கி என்பதன் பொருள் காலம் அல்லது முடிவில் ஆகும்


மோகினி  என்ற  பெண்  அவதாரத்தை  மறைத்து  ஆதிசேஷனின் அவதாரம்  என்ற ராமருடன்  இலக்குவனனாக வந்த  பலராமனை விஷ்ணுவின்  அவதாரம்  என்னும்  பொய்மையின்  நோக்கம்  என்னவோ!இதே  போல  தசாவதாரம்  படத்தில் புத்தரும்  விஷ்ணுவின்  அவதாரம்  என்று  திரிபு  சொல்லியுள்ளார்களே!தற்கு??யாரை  ஏமாற்ற???

No comments:

Post a Comment