உடல் எடையை குறைக்க விரும்புவர்கள் இயற்கையான வழிமுறைகளை பின்பற்றுங்கள்.
ஏனெனில் அவைகள் தான் எவ்வித பக்கவிளைகளையும் ஏற்படுத்தாமல், உடல் எடையை குறைக்க உதவும்.
எலுமிச்சை மற்றும் உப்பு
தினமும் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாறு மற்றும் உப்பு சேர்த்து குடித்து வர, உடல் எடை குறைய ஆரம்பிக்கும்.
பூண்டு பால்
பூண்டை ஒரு டம்ளர் பாலில் போட்டு பாதியாக சுண்டும் வரை கொதிக்க வைத்து இறக்கி, பாலுடன் பூண்டை சாப்பிட வேண்டும். இதனால் பூண்டு உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புக்களை கரைத்து வெளியேற்றும்.
புடலங்காய்
புடலங்காயில் நிறைந்துள்ள நார்ச்சத்து, உடல் எடையை குறைக்க உதவும், இதில் அதிகம் நீர்ச்சத்து இருப்பதனால் உடலில் உள்ள தேவையற்ற உப்பு நீரை வியர்வை, சிறுநீர் மூலம் வெளியேற்றும் தன்மை இதற்கு உண்டு.
காய்கறி சூப்
சூப் உடல் எடையை வேகமாக குறைக்க நினைத்தால், 2-3 மாதங்களுக்கு தினமும் இரவில் காய்கறி சூப் செய்து குடித்து வாருங்கள்.
இதனால் உங்கள் உடலில் கொழுப்புக்கள் சேர்வது கட்டுப்படுத்தப்பட்டு, உடலுக்கு ஆரோக்கியம் கிடைக்கும்.
துளசி பானம்
துளசி பானம் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் 1/2 டீஸ்பூன் துளசியை அரைத்து, அத்துடன் தேன் கலந்து காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இப்படி செய்வதால், உடலில் உள்ள நச்சுக்கள் மற்றும் தேவையற்ற கொழுப்புக்கள் கரைக்கப்பட்டு வெளியேற்றப்படும்.
கொள்ளு
எலும்புகளுக்கு வலிமை தரும் கொள்ளுவில், கால்சியம் மற்றும் இரும்புச்சத்துக்கள் அதிகமாக உள்ளன.
கொள்ளு உடல் எடையைக் குறைக்க உதவும் உணவுப் பொருட்களில் ஒன்று கொள்ளு. அத்தகைய கொள்ளுவை 1-2 டேபிள் ஸ்பூன் எடுத்துக் கொண்டு, 1 டம்ளர் நீரில் இரவில் படுக்கும் போது ஊற வைத்து, மறுநாள் காலையில் அந்த நீரைப் பருக வேண்டும். இப்படி தினமும் பின்பற்றி வர, உங்கள் உடல் எடை குறைந்திருப்பதை நீங்கள் காண்பீர்கள்.
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக