தொலைக்காட்சி!!

Search This Blog

Sunday, January 3, 2016

கொக்குவில்


கொக்குவில் (Kokkuvil) இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள வலிகாமப் பிரிவில் உள்ள ஒரு ஊர் ஆகும். யாழ்ப்பாணம் -காங்கேசந்துறை வீதியில் யாழ்ப்பாண நகரில் இருந்து கிட்டத்தட்ட 2 மைல்கள் தொலைவில் அமைந்துள்ளது இந்த ஊர். இவ்வூருக்கு தெற்கு எல்லையில் யாழ்ப்பாண நகரும், வடக்கில் கோண்டாவிலும் உள்ளன. கிழக்குத் திசையில் திருநெல்வேலி அமைந்துள்ளது. காங்கேசன்துறை வீதி இவ்வூரைக் கொக்குவில் கிழக்கு, கொக்குவில் மேற்கு என இரண்டு பகுதிகளாகப் பிரிக்கின்றது.

திருநெல்வேலிச் சந்தியில் இருந்து மேற்கு நோக்கி வரும் வீதி, காங்கேசந்துறை வீதியைச் சந்திக்கும் இடமான கொக்குவில் சந்தி இவ்வூரின் மைய இடமாகும். யாழ்ப்பாண மாவட்டத்தின் முக்கியமான பாடசாலைகளில் ஒன்றான கொக்குவில் இந்துக் கல்லூரி இச் சந்திக்கு அண்மையிலேயே அமைந்துள்ளது.

பெயர்க்காரணம்

கொக்கு என்றால் கரும்பு. இதனால் கொக்குவில் கரும்பு வில் என்று பொருள் படும். இரண்டாம் பொருள் வில் என்பது சங்க காலத்தில் குளம் என்று பொருள். கொக்குவில் கொக்குகள் நிறைந்த குளம் உடைய ஊர் என்று பொருள் படும்

கிராம சேவையாளர் பிரிவுகள்

J/121 கொக்குவில் வடகிழக்கு
J/122 கொக்குவில் கிழக்கு
J/123 கொக்குவில் தென்கிழக்கு
J/124 கொக்குவில் வடமேற்கு
J/125 கொக்குவில் மேற்கு
J/126 கொக்குவில் மத்திகிழக்கு
J/127 கொக்குவில் தென்மேற்கு
J/128 கொக்குவில் மத்திமேற்கு

கோயில்கள்

இந்து சமயத்தவர்களை பெரும்பான்மையாகக் கொண்ட இவ்வூரில், மஞ்சவனப்பதி முருகன் கோயில், மணியர்பதி சிவசுப்பிரமணியர் கோயில், நந்தாவில் கற்புலத்து மனோன்மணி அம்மாள் கோயில், கிருபாகர சிவசுப்பிரமணிய சுவாமி கோயில், பொற்பதி விநாயகர் கோயில், தலையாழி ஸ்ரீ ஞான வைரவர் கோயில் போன்ற பல இந்துக் கோயில்கள் உள்ளன.

No comments:

Post a Comment