அழகில் அதிக கவனம் செலுத்தும் பெண்கள் தங்களது முகத்திற்கு எந்த அளவுக்கு மேக்கப் போடுகிறீர்களோ, அந்த அளவுக்கு உங்கள் உதட்டுக்கும் மேக்கப் போடுங்கள்.
அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பது பழமொழி, முகத்தின் அழகு மூக்கில் மட்டுமல்லாமல், உதட்டிலும் தெரியும் என்பது புதுமொழியாகும்.
உண்மையில், முகத்தின் வசீகரத்தை உதடுகள் தான் பிரதிபலிக்கின்றன. ஆதனால், ஆண்கள், பெண்கள் என இருபாலரும் உதடுகள் அழகாகவும், மென்மையாகவும், குறிப்பாக சிவப்பாகவும் இருக்க வேண்டும் என விரும்புகின்றனர்.
உதடுகளை அழகாக வைக்க இதோ சில டிப்ஸ்
பனி மற்றும் குளிர் காலங்களில் உதடுகளில் வெடிப்பு ஏற்படும். அதை தடுக்க வாசலின் தடவி, மிருதுவாக வைத்து கொள்ள வேண்டும். வீட்டில் வெண்ணெய் இருந்தால் அதை தடவலாம். வெயில் காலத்தில் வைட்டமின் "இ', சத்துகள் நிறைந்த, தரமான லோஷன் பயன்படுத்தலாம்.
பெண்கள் தரமான லிப்ஸ்ஸ்டிக் பயன்படுத்த வேண்டும். தரமற்ற மற்றும் தவறான முறையில் பயன்படுத்தப்படும் லிப்ஸ்ஸ்டிக்கால், உதடுகளில் வெடிப்புகள் ஏற்பட்டு, தோல் உரிந்து உதடுகள் அதன் கவர்ச்சியை இழந்து விடும்.
உதடுகள் வறட்சி ஏற்படும் போது, சிலர் அடிக்கடி எச்சிலால் உதட்டை ஈரப்படுத்துகின்றனர். இது தவறான பழக்கமாகும்.
அவ்வாறு செய்யும் போது உதட்டில் உள்ள ஈரப்பதம் குறைவதுடன், உதட்டில் புண்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. சிலர் அடிக்கடி உதட்டை கடிப்பதால், காயம் ஏற்பட்டு தழும்புகள் ஏற்படுகின்றன.
ஆண்கள் சிகரெட் பிடிப்பதால், உதடுகள் இயல்பான அழகை இழந்து, வெள்ளை தழும்புகள் ஏற்படுகின்றன. இதனால் புகைப்பழக்கத்தை விடுவது அவசியம்.
சில ஆண்கள் சிகெரட் குடித்து உதடுகள் கருமையாக இருக்கும் அதனை போக்க பீட்ரூட் சாறு, அல்லது புதினா இலை சாறு, அல்லது மாதுளை சாறு எடுத்து உதடுகளில் பூசி வர உதடுகள் சிகப்பாக மாறிவிடும்.
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக