தொலைக்காட்சி!!

Search This Blog

Monday, January 11, 2016

இதற்குப் பெயர் குமட்டிக்காய்.

இறைவனின் படைப்புகள் அனைத்துமே அதிசயம் தான். வார இறுதிகளில் பாலைவனத்தில் வண்டி இயக்கி விளையாடுவது எங்களது வாடிக்கை. இந்த வாரம் ஆங்காங்கே படர்ந்து கிடக்கும் செடிகளில் ஒரு சிறிய தர்பூசணி போல் தென்பட்டது. "ஹய்! தர்பூசணி" என்று அருகில் சென்றேன். "பாலைவனத்தில் எப்படி தர்பூசணி வரும்?" என்றார் கணவர். நான் அதைப் படமெடுத்து, ஒரு காயை பறித்தும் வந்தேன். என் சிரியா நண்பரிடம் காட்டினேன். பார்த்தவுடன் 'இது எங்குக் கிடைத்தது? இதன் பெயர் 'ஹந்தல்' என்றார். கூகிள் செய்து அதன் பெயர் ஆங்கிலத்தில் 'desert gourd' (Citrullus colocynthis) என்றார். அதற்கு நிறைய மருத்துவ குணங்கள் உண்டாம். இரண்டு மாதங்கள் இந்தக் காயை தொடர்ச்சியாக உட்கொண்டால் நீரழிவு நோய் கட்டுப்பாட்டுக்கு வருமாம். கெட்ட கொழுப்புகள் சாகடிக்கப்படுமாம். இதில் அதிக அளவு கசப்புணர்வு உள்ளது. இதை வைத்து மருந்துகளும் தயாரித்து வருகிறார்களாம். எங்கு கொண்டு போய் மருந்தை வைத்திருக்கிறான் பாருங்க!!


இதற்குப் பெயர் குமட்டிக்காய். மருத்துவ குணங்கள் மிகுந்த இக்கொடி, தமிழகக்கடற்கரைக் கிராமங்களில் காணக்கிடைக்கும்.நீரழிவு மற்றும் தோல் ஒவ்வாமை போன்றவற்றிற்கு சிறந்த மருந்து!

No comments:

Post a Comment