தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 8 ஜனவரி, 2016

காதற்ற ஊசியும் வாராது காணுங் கடைவழிக்கே.


ஓட்டை ஒடிந்த தையல் ஊசிகூட உன்மரணத்தில் உன்னுடன் வராது
வேதத்தின் உட்பொருள் மண்ணாசை மங்கையை விட்டுவிடப்
போதித்த வன்மொழி கேட்டிலையோ செய்த புண்ணியத்தான்
ஆதித்தன் சந்திரன் போலே வெளிச்சம தாம் பொழுது
காதற்ற ஊசியும் வாராது காணுங் கடைவழிக்கே.


 1.நான்கு வேதங்களின் உட்பொருட்கள் நமக்கு எத்தனையோ உபதேசங்களைச் சொல்லி வைத்திருக்கின்றன; எதைத்தான் கேட்டு அதன் வழி நடந்தோம்? நான்கு வேதங்கள் கூறுகின்ற நற்கருத்துக்களைக் கேட்டுப் பின்பற்றினோமா? இல்லை, மண்ணாசையை, பெண்மீதான ஆசையை,மண் எனும் பெண்மீதான ஆசையை விட்டுவிடு என்றார்கள் சிவ நேசச் செல்வர்கள், அவற்றை விட்டுத் தொலைத்தோமா?

 இல்லையே!

ஏதோ நல்ல காலம், முற்பிறப்பு நற்பயன்களின் படி பெற்றது. இந்த உயிர் உடலை விட்டு நீங்கும் வேளை. ஏய் மானிடா பயன் படுத்தமுடியாத தையலூசி, காதான ஓட்டை தூர்ந்த தையல் ஊசியும் உன்னுடன் கூடவராது. யோசித்துப்பார் நீ கொண்டு போகப்போவது என்ன?

மக்காள் " காதற்ற ஊசியும் வாராது நின் கடைவழிக்கே"


தேடு செல்வம், வீடு, வளவு, காணி, பிள்ளை குட்டி எல்லாத்தையும் தேடு ஆனால் ஒட்டை இழந்த தூர்ந்த தையல் ஊசியும் நீ செத்தபோது உன்னுடன் வராது. இவ்வளவுதான் வாழ்க்கை புரிந்து கொள். சரி இனியாவது புரிந்து கொள்செய்த புண்ணியங்களின் பலனாக நம்முடைய ஆன்மா இவ்வுடலை விட்டு நீங்கிச் செல்லுங்கால், சூரியனும் சந்திரனும் போல ஒளிபடைத்ததாக வெளியேறும், அப்படி வெளியேறிய ஆன்மா செல்ல வேண்டிய மார்க்கத்தில் வேறெதுவும், ஒரு காதற்ற ஊசியும் கூட அதன் கூட வராது என்பதை உணர்வாயாக.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக