தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 8 ஜனவரி, 2016

அழகிய முத்துக்கள் எவ்வாறு உருவாகின்றன? ரகசியம் அறிந்துகொள்ளுங்கள்!


பார்ப்பதற்கு அழகாக இருக்கும் முத்துக்கள், பெண்களை வர்ணிப்பதற்கும் அவர்களின் கழுத்து, காது, இடுப்பு போன்றவற்றினை அலங்கரிப்பதற்கும் பயன்படுத்தப்படுகின்றன.
முத்துப்போன்று பற்கள், முத்துச்சிரிப்பு என்று வர்ணிக்க பயன்படும் இந்த முத்துக்கள் இயற்கையின் சிறந்த படைப்புகளுன் ஒன்று.
முத்துக்கள் உருவாவது எப்படி?
சிப்பிக்குள் தோன்றும் கெட்டியான பொருளே முத்து எனப்படுகிறது. கடலில் காணப்படும் முத்துச் சிப்பியினுள் சிறிய திண்மப் பொருளொன்று புகுந்து கொண்டால் உயிருள்ள அந்தச் சிப்பி தன் புறத்தோல் அடுக்காகிய எபிதீலியம் என்னும் படலத்தால் அதை நன்கு பொதிகின்றது.
நாளடைவில் அச்சிப்பியில் சுரக்கும் திரவம் மெல்லிய அடுக்குகளாக அதன் மீது படிந்து முத்தாக மாறுகிறது.
முத்து உருவாகும் போது மெல்லிய அடுக்குகள் பொதியப்படுவதினால் அது ஒளியை உட்பிரவேசிக்கவும் பிரதிபலிக்கவும் ஏற்ற தன்மையுடையதாகக் காணப்படுகின்றது.
இதனால் சாதாரண முத்துக்கள் கூட பார்ப்பதற்கு மிகவும் ஒளிர்வுடையதாகத் தோன்றுகின்றன. கறுப்பு நிறமான முத்துக்களும் மிக அருமையாகக் காணப்படுகின்றன.
முத்துக்களின் வகைகள்
முத்துக்கள் நன்னீரில் உருவானவையா, கடல் நீரில் உருவானவையா, அவற்றை உருவாக்கிய முத்துச்சிப்பி வகை, உருவான பிரதேசம் என்பவற்றைப் பொறுத்து முத்துக்களின் இயல்புகள் வேறுபடுகின்றன.
முத்துக்களில் அக்கோயா முத்து,தென்கடல் முத்து, தகித்தியன் முத்து, நன்னீர் முத்து போன்ற வகைகள் உள்ளன.
சிலவகைகள் அரிதாகவே கிடைக்கின்றன, இதனால் முத்துக்களின் மதிப்பும் அதிகம்.
சிப்பியிலிருந்து முத்தை பிரித்தல் முட்டை வடிவிலான முத்துக்கள் பொதுவாகத் தென்பட்டாலும் உருண்டையான தோற்றமுடைய முத்துக்களுக்கே (Pearls) மதிப்பு அதிகம்.
தூசி, மிதமிஞ்சிய வெப்பம், ஈரலிப்புத்தன்மை போன்றவற்றினால் முத்து பழுதுறும் வாய்ப்பு ஏற்படலாம்.
இயற்கை முத்துக்கள்
அவிகுலிடி சிப்பிகளிலும், யூனியனி என்னும் மட்டிகளிலும் உற்பத்தியாகும் முத்துக்கள் இயற்கை முத்துக்கள் ஆகும்.
செயற்கை முத்துக்கள்
சிப்பியின் உட்புறம் முத்துப்போல் அழகான மெல்லிய பொருள் ஒன்றினால் மூடியிருக்கும். இதை நேக்கர் என்பர்.
அந்த நேக்கரினால் உருவாக்கிய மணியை உயிருள்ள முத்துச் சிப்பியின் திசுவிற்கும் சிப்பிக்குமிடையே கவனமாக திணிப்பார்கள். அவ்வாறு திணிக்கப்பட்ட சிப்பிகளை கூண்டு ஒன்றினுள் வைத்து நீரில் பாதுகாப்பாக அமிழ்த்திவிடுவார்கள்.
நாளடைவில் மணிகள் பொதிக்கப்பட்டு முத்துக்கள் உருவாகும். தோற்றத்தில் பெரிய முத்துக்கள் பெறுவதற்கு பல ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்.
இவ்வாறு பெறப்படும் முத்துக்கள் செயற்கை முத்துக்கள் எனப்படும். இந்த அரிய முறையை ஜப்பானியர் ஒருவர் 1804 ஆம் ஆண்டு கண்டுபிடித்தார்.
முத்துக்களின் தரத்தை எக்ஸ்-கதிர் எண்டாஸ் கோப் என்னும் கருவியின் மூலம் துல்லியமாகக் கண்டுபிடித்துவிடலாம்.சில வகை மீன்களின் செதில்களைக் கொண்டு முத்துச்சாறு (Pearlessence) உற்பத்தி செய்யப்படுகின்றது.
ஊன் பசையுடன் கலந்து கண்ணாடி மணிகள் மீது அவற்றைப் பூசி முத்துக்கள் தயாரிக்கின்றனர்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக