தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 10 ஜனவரி, 2016

பறக்கும் விமானத்தில் பயணிகள் செய்யும் மோசமான 10 தவறுகள்: அவசியம் திருத்திக்கொள்ளுங்கள்!

விமான பயணத்தில் ஈடுபடும்போது பயணிகள் அடிக்கடி செய்யும் முக்கிய மிக மோசமான 10 தவறுகள் எவை என்ற ஆய்வுக்கான தகவல்கள் வெளியாகியுள்ளன.
விமான பயணத்தில் ஈடுபடும்போது பயணிகள் அடிக்கடி செய்யும் முக்கிய மிக மோசமான 10 தவறுகள் எவை என்ற ஆய்வுக்கான தகவல்கள் வெளியாகியுள்ளன.
பேருந்து அல்லது ரயில் பயணங்களை விட விமான பயணங்கள் மிக முக்கியமானதாகவும், சில நேரங்களில் மறக்க முடியாத அனுபவங்களையும் ஏற்படுத்தும் என்பதை மறுக்க முடியாது.
அதேசமயம், விமான பயணத்திற்கான ஏற்பாடு முதல் அது நிறைவேறும் வரை பயணிகள் சந்திக்கும் பிரச்சனைகள் ஏராளம்.
விமான நிலையத்தில் வரிசையில் நிற்பது, கடுமையான பரிசோதனைகள், முறையான ஆவணங்களை அளிப்பது உள்ளிட்ட பல பிரச்சனைகளை கடந்து தான் விமானத்தில் அமர முடியும்.
சில நேரங்களில் இது மகிழ்ச்சிகரமான பயணமாக அமையும். ஆனால் பல நேரங்களில் சக பயணிகளிடம் இருந்து ஏற்படும் மிக மோசமான அனுபவங்கள் வாழ்நாளில் மறக்க முடியாத அளவிற்கு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி விடும்.
இதுபோன்று விமான பயணத்தில் ஈடுபடும் பயணிகள் புரியும் மோசமான 10 தவறுகள் எவை என்ற கேள்விக்கு விரிவான தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.
1.விமான ஜன்னல் இருக்கைக்கு போராட்டம்
விமானத்தில் பயணிக்கும்போது ஜன்னல் வழியாக இயற்கை காட்சிகளை ரசிப்பது இயல்பாக அனைவரும் விரும்புவதே. ஆனால், உங்களுக்கு ஜன்னல் இருக்கை கிடைக்காவிட்டாலும், அந்த இருக்கையில் அமரும் பயணி தொந்தரவு செய்யாதவராக இருக்க வேண்டும்.
ஆனால், ஜன்னல் இருக்கையில் அமரும் 19 சதவிகித பயணிகள் அருகில் அமர்ந்திருக்கும் பயணிக்கு இடையூராக அடிக்கடி ஜன்னலை மறைத்துக்கொண்டு அமர்ந்து இருப்பது. அல்லது சக பயணிக்கு தெரியாதவாறு திருப்பி அமர்ந்துக்கொண்டு ஜன்னலை முழுமையாக மறைத்து வருவது பிற பயணிக்கு எரிச்சலை தான் ஏற்படுத்தும்.
2. உரக்க குரலில் கத்தி பேசுவது
நமக்கு அருகில் உறவினர், நமது குழந்தை அல்லது சக பயணி அமர்ந்திருக்கும்போது அவரிடம் மெலிதான குரலில் பேசினால் கூட நன்றாக கேட்கும்.
ஆனால், இந்த அடிப்படை நாகரீகம் இல்லாமல் விமானம் பயணிகள் அனைவருக்கும் கேட்கும் விதத்தில் உரக்க குரலில் கத்தி பேசுவது. சில நேரங்களில் மோசமான வார்த்தைகளை உபயோகித்து உரக்க பேசுவதும் மிகவும் தவறானது ஆகும். எனினும், இந்த தவறில் சுமார் 24 சதவிகித பயணிகள் ஈடுபடுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
3.முன் இருக்கையில் கால்களை தூக்கி வைப்பது
வீடுகளில் அல்லது திரை அரங்குகளில் உள்ள முன் இருக்கைகளில் கால்களை தாராளமாக தூக்கி வைத்துக்கொள்வதுபோன்ற காட்சிகள் விமான பயணத்திலும் காணலாம்.
இது மிகவும் பொறப்பற்ற, அதே சமயம் ஒழக்கம் இல்லாத செயலாகும். இதனால், முன் இருக்கையில் அமர்ந்துள்ள பயணியை அவமதிப்பது மட்டுமின்றி, அவருடன் திட்டமிட்டு பிரச்சனை ஏற்படுத்துவதற்கு நிகரானது.
இந்த ஒழுக்கமற்ற செயலை 33 சதவிகித பயணிகள் செய்துவருவது தெரியவந்துள்ளது.
4.உடமைகளை அடிக்கடி சரிப்பார்ப்பது
விமான பயணிகளின் உடமைகளை பாதுகாப்பாக வைத்துக்கொள்ள இருக்கைகளுக்கு மேல் சிறிய ‘லாக்கர்கள்’ போன்ற பெட்டி ஒதுக்கப்படும். ஆனால், இந்த பெட்டியில் வைக்கப்பட்ட உடமைகளை எடுக்க அல்லது சரி பார்த்துக்கொள்ள அடிக்கடி இருக்கையை விட்டு எழுவது மற்ற பயணிக்கு இடையூராக அமையும். இந்த தவறை 34 சதவிகித பயணிகள் செய்கின்றனர்.
5.யார் முதலில் வரிசையில் நிற்பது?
விமான பயணத்திற்கு முன்னதாக, கடவுச்சீட்டு உள்ளிட்ட ஆவணங்களை சரிப்பார்க்க அமைக்கப்படும் வரிசையில் முதலில் நிற்பதற்கு நாகரீகமின்றி, அவசர அவசரமாக விழுந்தடித்து ஓடி நிற்பது சில நேரங்களில் ஆபத்துக்களை ஏற்படுத்தும். ஆனால், இதன் உண்மையை அறியாமல் 40 சதவிகித பயணிகள் இந்த தவறை செய்கின்றனர்.
6.சக பயணியுடன் இடைவிடாமல் பேசுவது
இருக்கைக்கு அருகில் அமர்ந்துள்ள சக ஆண் அல்லது பெண் பயணியுடன் கண்ணியத்தையும் நாகரீகத்தையும் காக்க வேண்டும். அவர் விரும்பினால், அவருடன் பேச்சு கொடுக்கலாம். ஆனால், அவர் முகம் சுளிக்குமாறு இடைவிடாமல் புராணங்களை பேசுவது, அதுவும் உரத்த குரலில் சிரித்து கத்தி பேசுவது உங்களையே தாழ்த்திக்கொள்வதற்கு சமமானது. இதுபோன்ற தவறுகளில் 43 சதவிகித பயணிகள் ஈடுபடுகின்றனர்.
7.பெரிய அளவுள்ள உடமையை கையில் வைத்திருப்பது
இருக்கைக்கு மேல் உள்ள பெட்டியில் இடம் இல்லாதபோது, அளவில் பெரிய கைப்பை அல்லது வேறு ஒரு உடமையை இருக்கைக்கு அருகில் வைத்துக்கொண்டு சக பயணியின் உடமையை வைக்க விடாமல் சிரமத்தை உண்டாக்குவது. இதனை 49 சதவிகித பயணிகள் செய்து சக பயணியின் வெறுப்பிற்கு ஆளாகின்றனர்.
8.விமான பணிப்பெண்களுக்கு நன்றி தெரிவிக்கலாமே?
இன்றைய நாகரீக காலத்தில் ‘Sorry’ மற்றும் ‘thanks’ என்ற இரண்டு வார்த்தைகள் மிக எளிதாக பகிர்ந்துக்கொள்ளப்படுகிறது. ஆனால், அவசியமான ஒரு இடத்தில் இந்த இரண்டு வார்த்தைகளையும் உபயோகிக்காமல் தவிர்த்து மற்றவர்களை அவமதிக்கிறோம்.
உதாரணத்திற்கு, விமானத்தில் பயணிகளின் தேவைகளை பூர்த்தி செய்யும் பணிப்பெண்களுக்கு சிரித்த முகத்துடன் நன்றி தெரிவிக்க பயணிகள் மறந்துவிடுகின்றனர், அல்லது வேண்டுமென்றே நிராகரித்து விடுகின்றனர்.
பயணிகளின் பசியை போக்கும் பணிப்பெண்களுக்கு ஒரு நன்றி கூறினால் தவறில்லையே? ஆனால், இதனை தவிர்த்து இந்த தவறை செய்பவர்கள் 53 சதவிகித பயணிகள்.
9.இருக்கை பிடிப்பிற்கு நிலவும் போட்டி
விமான இருக்கையில் அமர்ந்தவுடன், தங்களது கைகளை வைத்துக்கொள்ள இருக்கையில் இருக்கும் பிடிப்புகளை பயன்படுத்துவோம். ஆனால், இரண்டு இருக்கைகளுக்கு பொதுவாக இருக்கும் கைப்பிடிக்கு போட்டிகளே அதிகம் நிலவும்.
உங்கள் அருகில் அமர்பவர்கள் அவர்களை கைகளை இருக்கைபிடிகளுக்கு மேல் வைத்துக்கொண்டு உங்களுக்கு இடம் இல்லாமல் செய்துவிடலாம். இந்த தவறை 55 சதவிகித பயணிகள் செய்கின்றனர்.
10.இருக்கையை பின்னோக்கி சாய்ப்பது
இறுதியாக, விமான பயணத்தில் அதிக பயணிகள் அடிக்கடி செய்யும் தவறு, தனது இருக்கையை பின்னோக்கி சாய்த்து பின்னால் அமர்ந்திருக்கும் பயணிக்கு தொந்தரவை ஏற்படுத்துவது.
தூங்கும்போது அல்லது ஓய்வுக்காக இருக்கையை தளர்த்தி விடும்போது ஓரளவிற்கு பின்னோக்கி சாய்த்துக்கொள்ளலாம்.
ஆனால், 63 சதவிகித பயணிகள் தங்களுடைய இருக்கையை அதிகபட்சமாக பின்னோக்கி சாய்த்து பின்னால் அமர்ந்துள்ள பயணியின் மடியில் படுப்பது போன்ற மிக மோசமான தவறினை அதிக பயணிகள் செய்து வருவதாக இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக