அப்படி ஒரே மாதிரியான வடிவத்தைக் கொண்டிருப்பவர்களின் குணநலன்களைப் பார்த்தால், சற்று ஒரே மாதிரி இருக்கும். இங்கு அதில் ஒருவரின் நெற்றியின் வடிவம் அவரைப் பற்றி என்ன சொல்கிறது என்பது குறித்து கொடுக்கப்பட்டுள்ளது.
நீங்களும் உங்கள் நெற்றி உங்களைப் பற்றி என்ன சொல்கிறது என்பதைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
பரந்த நெற்றி
பலருக்கும் பரந்த நெற்றி பிடிக்காது. ஏனெனில் இது தலையில் வழுக்கை விழுந்தது போன்ற தோற்றத்தை அளிக்கும். ஆனால் அப்படி பரந்த நெற்றியைக் கொண்டவர்கள் மிகவும் புத்திசாலி. எதையும் அதிவிரைவில் கற்றுக் கொள்ளும் திறன் கொண்டவர்கள். இவர்களால் முன்கூட்டியே நடக்கப் போவதை சரியாக கணிக்க முடியும்.
குறுகிய நெற்றி
குறுகிய நெற்றியைக் கொண்டவர்களும் புத்திக்கூர்மை உள்ளவர்கள். இவர்கள் மிகவும் உணர்ச்சிவசப்படக் கூடியவர்கள். இவர்கள் தன் மனம் என்ன சொல்கிறதோ அதை மட்டுமே செய்பவர்கள். மேலும் எப்போதும் தனிமையை விரும்புபவர்கள், அதற்காக கூட்டத்தைக் கண்டு அஞ்சுபவர்கள் அல்ல.
M வடிவ நெற்றி
இந்த வகை நெற்றியைக் கொண்டவர்கள் மிகுந்த கற்பனை வளம் மற்றும் படைப்பாற்றலைக் கொண்டிருப்பார்கள். மொத்தத்தில் இந்த வகை நெற்றியைக் கொண்டிருப்பவர்கள், படைப்புக் கலைஞர்களாக மற்றும் புதுமையாளர்களாக இருப்பார்கள்.
மலை வடிவ நெற்றி
இந்த மாதிரியான நெற்றியைக் கொண்டவர்கள் மிகவும் அரிது. எனவே இந்த வடிவ நெற்றியைக் கொண்டவர்களை அதிர்ஷ்டசாலி எனலாம். இந்த வகை நெற்றியினர் மிகவும் மென்மையானவர்கள் மற்றம் மிகவும் சிநேகிக்கத்தக்கவர்கள். மிகவும் கருணை உள்ளம் கொண்டவர்கள். தன் குறிக்கோளில் தெளிவாக இருப்பார்கள் மற்றும் நம்பிக்கையுடன் தன் கருத்தை சொல்வார்கள்.
வளைவான நெற்றி
வளைவான நெற்றியைக் கொண்டவர்கள் எப்போதுமே நேர்மறையான உணர்வுகளுடன் மற்றும் சந்தோஷமான மனநிலையுடன் இருப்பவர்கள். மேலும் எப்போதும், எதிலும் முன் நிற்க ஆசைப்படுவார்கள்.
முக்கோண நெற்றி
சிலருக்கு முக்கோண வடிவில் இருக்கும். இந்த வகையான நெற்றியைக் கொண்டவர்கள் எதையும் வெளிப்படையாக பேசுவார்கள். தங்களது தனிப்பட்ட மகிழ்ச்சி மற்றும் தேவைகளுக்கான சமசரம் செய்ய தயாராக இருக்கமாட்டார்கள். இவர்கள் ஒருவரை நேசித்தால், மனதளவில் உண்மையாக நேசிப்பார்கள்.
- See more at: http://www.manithan.com/news/20160114118370#sthash.Aykpk5Ob.dpuf
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக