தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 15 ஜனவரி, 2016

இயற்கை தாயின் மடியில்! உலகெங்கும் கொண்டாடப்படும் அறுவடை திருவிழாக்கள் (வீடியோ இணைப்பு)

தமிழர் திருநாளான பொங்கல் சங்க காலத்திலிருந்தே கொண்டாடப்பட்டு வருகின்றது.
தமிழர்களின் கலாச்சார அடையாளமான இந்த விழா இந்தியா, இலங்கை மட்டுமின்றி பல்வேறு நாடுகளில் அறுவடை திருநாளாக கொண்டாடப்பட்டு வருகிறது.
ஆதிகாலம் முதலே தொன்றுதொட்ட அறுவிடை விழாவை விவசாயிகள் கொண்டாடி வந்துள்ளனர்.
ஒவ்வொரு பயிருக்கும் ஒவ்வொரு காவல் தேவதை இருப்பதாகவும், அதனிடம் வேண்டி பயிர்களை விளைவித்தால் அறுவடை சிறப்பாக இருக்கும் என்றும் நம்பினர்.
நிலத்தில் பாடுபட்ட விவசாயி, தன் நிலத்திற்கும், உழைப்புக்கும் துணை இயற்கைக்கும் நன்றி தெரிவிக்கும் விதம் கொண்டாடும் பண்டிகைதான் அறுவடைத் திருநாள்.
இந்த நாள் ஒவ்வொரு நாடுகளில் ஒவ்வொரு விதமாக கொண்டாடப்பட்டு வருகின்றது.
அமெரிக்கா
Green Corn Festival என்ற பெயரில் சோளம் அறுவடைக்கு தயாரான போது, வரும் பௌர்ணமியன்று இந்த விழா கொண்டாடப்படும்.
இந்நாளில் தலையில் இறகுகள் மணிகள் ஆகியவற்றைச் சூடிக்கொண்டு பாரம்பரிய முறையில் அலங்கரிக்கப்பட்ட வண்ணமயமான உடைகளுடன் ஆடிப்பாடி மகிழ்ந்து உற்சாகமாக அறுவடையை கொண்டாடுகின்றனர்.
கொரியா
எட்டாவது சந்திர மாதத்தின் 15வது நாளில் கொரியாவில் கொண்டாடப்படும் விழா Chuseok.
இந்த விழாவின் புதிதாக விளைந்த உணவுப் பொருட்களுடன் கொரியர்கள், தங்களது மூதாதையர்கள் பிறந்த இடங்களுக்கு செல்கின்றனர்.
அதுமட்டுமின்றி அவர்களது பாரம்பரிய உணவான songpyeon என்ற உணவை உண்டு மகிழ்கின்றனர்.
விழாக் கோலம் பூண்டிருக்கும் கொரியாவில் மூன்று நாட்கள் அரசு விடுமுறை வழங்கப்படுகிறது.
ஜப்பான்
பாரம்பரிய ஜப்பான் காலண்டரின்படி, எட்டாவது மாதத்தின் 15வது நாளில் கொண்டாடப்படும் விழாவே Tsukimi.
அன்றைய தினம் முழு நிலவு தோன்ற, மக்கள் ஆட்டம் பாட்டத்துடன் விழாவை கொண்டாடி மகிழ்கின்றனர்.
விசேஷ நிகழ்ச்சி நடைபெறும்வரை புதிதாக விளைந்த அரிசியை யாரும் உண்ணக்கூடாது.
சீனா
சீனர்களின் காலண்டர்படி ஆண்டின் எட்டாவது மாதத்தின் 15வது நாள் அறுவடை விழாவாகக் கொண்டாடப்படுகிறது.
இந்த விழாவின் குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள் அனைவரும் ஒன்றிணைவதுடன் சிறப்பான அறுவடைக்காக நன்றி செலுத்துகிறார்கள்.
அடுத்ததாக ‘Moon Cake’ என்னும் பாரம்பரியமான பலகாரத்தை உண்ணுகிறார்கள்.
குடும்பத்தோடு ’நிலவைப் பார்த்தல்’ சடங்கும் இரவில் நடைபெறும்.
ஆப்பிரிக்கா
ஆப்ரிக்கா நாடுகளில் Yam என்ற பெயரில் அறுவடை திருநாள் கொண்டாடப்படுகிறது.
இந்த விழா ஆப்பிரிக்காவில் சில பகுதிகளில் மூன்று நாட்கள் நடக்கிறது.
ஆடல் பாடல்களுடன், பல்வேறு கதைகளை சொல்லும் விதவிதமான நடனங்கள் அப்போது இடம்பெறும்.
இந்த விழாவின் விளைந்த உணவுகளை கொண்டு முன்னோர்களுக்கும், கடவுளுக்கும் முதலில் படைக்கின்றனர்.
ரோமர்கள் தங்களுக்கு நல்ல விளைச்சலைக் கொடுத்ததற்காக சோளப் பயிரின் பெண் தெய்வமான சீரஸ் என்பவருக்கு நன்றி செலுத்தும் விழா வாக கொண்டாடுகின்றனர்.
அக்டோபர் நான்காம் நாள் செரிலியா என்ற பெயரில் இந்த விழா கொண்டாடப்படுகிறது.
தங்கள் தெய்வத்துக்கு புதிய காய்கறிகள், பழங்கள் , பன்றி போன்றவற்றைப் படைத்து, இசை, விளையாட்டு, நடனம் என விழாவை கொண்டாடுகிறார்கள்.
இவ்வாறு உலகெங்கும் கொண்டாடப்படும் அறுவடை விழாக்கள் மனிதனுக்கும், இயற்கைக்கும் இடையேயான தொடர்பை வெளிப்படுத்துகின்றன.
தொழில்நுட்பத்தின் பின்னால் ஓடிக் கொண்டிருக்காமல், இயற்கை தாயை பாதுகாத்தால் மட்டுமே இந்த உலகில் நீண்ட நாட்கள் மனிதன் சந்தோஷமாக வாழ முடியும் என்பது நிதர்சனமான உண்மை!!!
http://www.newsonews.com/view.php?22AMC203lOe4e2BnBcb280Mdd308sbc3nBJe43OlR023qAy3

1 கருத்து: