தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 3 ஜனவரி, 2016

நேதாஜி சீனாவில் வாழ்ந்தது உண்மையா? புதிய ஆவணங்கள் வெளியீடு!

இந்திய சுதந்திர போராட்ட தியாகி சுபாஸ் சந்திர போஸ் சீனாவில் வாழ்ந்தது உண்மையா என்பது குறித்த புதிய ஆவணத்தை லண்டனை சேர்ந்த இணையதளம் வெளியிட்டுள்ளது. 
இந்திய சுதந்திர போராட்ட வீரர் நேதாஜி சுபாஸ் சந்திர போஸ் கடந்த 1945ஆம் ஆண்டு தைவானில் நிகழ்ந்த விமான விபத்தில் பலியானதாக கூறப்பட்டுவருகிறது
 எனினும் அவர் அதற்கு பிறகும் வாழ்ந்து வந்தார் என்று பலரும் கூறிவருகின்றனர்.
அவர் சீனாவில் வாழ்ந்ததற்காக புகைப்பட ஆதராங்கள் கூட வெளியிட்டப்பட்டன.
இந்நிலையில் லண்டனை சேர்ந்த போஸ் பைல்ஸ்.இன்போ என்ற இணையதளம் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தொடர்பான புதிய ஆவணங்களை வெளியிட்டுள்ளது.
அதில் கடந்த 1952-ஆம் ஆண்டில், சீனத் தலைநகர் பீஜிங்கில் நேதாஜி வாழ்ந்தார் எனக் கூறப்பட்டு வரும் தகவல் தவறானது என்பதை நிரூபிக்கவே இந்த ஆவணங்களை வெளியிட்டுள்ளதாக அந்த இணையதளம் தெரிவித்துள்ளது.
மேலும் சுபாஷ் சந்திரபோஸ் இடம்பெற்றிருப்பதாக கூறப்படும் புகைப்படத்தில் இருப்பவர், பிகிங் மருத்துவக் கல்லூரியின் கண்காணிப்பாளராக இருந்த லீ கி ஹுங் என்பவர்தான் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக