தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 3 ஆகஸ்ட், 2015

அண்டவெளியில் சித்தர்.




அண்டவெளியில் சித்தர். அற்புதத் தகவல்கள்.
ஆதாரப் பாடல்கள்.
------------------------------------------------------------------------

திருமுல நாயனாருக்கு யோகமுறைகளைப்பற்றி உபதேசம் அருளிய நந்தி தேவன் இந்த புவனமெங்கிலும் சுற்றி வரும்படி சொல்லி அனுப்பினார். திருமூலரும் கிளம்பினார். நம் பூமியானது ஒரு அண்டம். இதைப்போல 1008 அண்டங்கள் சேர்ந்தது ஒரு பேரண்டம். 1008 பேரண்டங்கள் சேர்ந்தது ஒரு புவனம். திருமூலரும் தான் பல ஆண்டுகள் கஷ்டப்பட்டு செய்து வைத்திருந்த சொரூபக் குளிகை ஒன்றை வாயில் அடக்கிக் கொண்டும் கமலி என்கிற குளிகையை உடலில் அணிந்து கொண்டும் வானவெளியில் பாய்ந்தார். ஆச்சர்யமடையும் படியான காட்சிகளைக் கண்டார். பல அண்டங்களையும், அவற்றில் காயகல்பமுண்டு சித்தியடைந்த யோகிகளும், ஞானிகளும் நிறைய இருப்பதைக் கண்ணுற்றார். இந்த உண்மையை அவர் தன்னுடைய நூலான ''கருக்கிடை -600'' என்ற நூலில் எழுதியுள்ளார். அதாவது...

''அண்டம் இருந்த அடவு சொன்னார் நந்தி
தண்டியது அஞ்சும் தனித்த அடுக்காக
ஒண்டி நின்று ஓடி நுழை என்றார்
கண்டிக் கமலினி காணீர் சொரூபமே...

சொரூபத்தை வாய்வைத்துச் சூட்டிக் கமலினி
அரூபத்தைச் சோதிபோல் அண்ட நுழைந்திட்டேன்
நிருபத்த கற்பம் நிலையான யோகியும்
தருவொத்த ஞானச் சதகோடி சித்தரே. பாடல் 353, 354.

ஒரு அண்டத்தில் பல யோகிகளையும் ஞானிகளையும் கண்டு அவர்கள் பாதங்களில் வீழ்ந்து வணங்கினாராம். அவர்கள் உனக்கு என்னென்ன சித்திகள் தெரியும் என்று கேட்டார்களாம். திருமூலரும் நந்தி அருளால் தனக்கு அறுபது கோடி சித்துக்களும், வாத வித்தைகளும் சித்தியாயிற்று என்று சொன்னாராம். அவர்களும் நீ சிறுவன் இன்னும் சீ பார்க்க வேண்டியவை நிறைய இருக்கின்றன . அவற்றையெல்லாம் பார்த்துவிட்டு வா எனச் சொல்லி அனுப்பி வைத்தார்களாம். அடுத்த அண்டத்துக்குள் நுழைந்தால் அங்கே கல்சிலை போல அசைவற்று மௌன சமாதியில் பல சித்தர்கள் அமர்ந்திருக்கக் கண்டு அவர்களை பல முறை வலம் வந்து வணங்கியும் அவர்கள் அசைவற்ற நிலையிலேயே இருந்ததினால் அடுத்த அண்டத்துக்குச் சென்றாராம். இது குறித்த பாடலைப் பாருங்கள்.

''சித்தரைக் கண்டேன் தெவிட்டாதே பாவித்தேன்
ஒத்திய சித்து உனக்கென்ன ஆச்சென்றார்
அத்திய கோடி அறுபது ஆச்சென்றேன்
எத்தி இளஞ்சித்து இன்னம்பார் என்றாரே
என்றே நுழைந்தேன் அடுத்தொரு அண்டத்தில்
கண்டேன் சித்தரைக் கடிபதுமைப் போல
தண்டேன் கைகூப்பினேன் தடாவினேன் தட்டாது
அண்ட நிராகரித்து அடைந்த பெரியோரை
பெரியோர் தனைக்கண்டேன் பேராய் வலம் வந்தேன்
தரியோ மவுனமென்று அப்பால் நுழைந்திட்டேன்
பரிவாய் அடுக்கொண்டு பாய்ந்து முடியேறி
விரிவாம் அடுக்கில் விரைந்து நுழைந்தேனே. பாடல் -355,356,357.

இன்றைய விஞ்ஞானிகள் பலவாறு முயன்று பார்க்கிறார்கள் வேற்று கிரகத்தில் உயிரினங்கள் வாழுகின்றனவா ? என்று . ஆனால் இதுவரை நிரூபிக்கப் படவில்லை. என்றாவது அது நிரூபிக்கப்படும் போது
நம் சித்தர்களின் ஆற்றலை உலகம் உணர்ந்துகொள்ளும். அடுத்த அண்டத்தில் நிறைய சித்தர்களையும் அவர்கள் முன்னிலையில் நிறைய சாஸ்த்திர நூல்கள் குவிந்திருப்பதையும் கண்டார். அவர்களை வணங்கி அவர்களிடம் வினவினார், இவையெல்லாம் என்ன விதமான நூல்கள் என்று, அவர்களும் இது சிவபெருமானால் பார்வதி தேவிக்கு உபதேசிக்கப்பட்ட 7 இலட்சம் கிரந்தங்களாகும். இவற்றையெல்லாம் நாங்கள் முழுவதும் படித்துவிட்டோம் என்றனர்.

''நுழைந்திடில் அண்டத்தில் நூல்பார்த்த சித்தர்கள்
அழைந்திடு நூல் சொன்னது ஆர்தான் எனக்கேட்டேன்
தனஞ்செய ஈசன்தாய் கண்டு சொன்னது
களைந்தேழு லட்சம் கரை கண்டு பார்த்தோமே.'' பாடல் -358.

நம் திருமூலரும் அவர்களிடம் பரமாய் நின்ற சித்தர்களே இவற்றை முழுவதுமாக படித்த நீங்கள் இவற்றைச் சுருக்கி ஒரே நூலாய் ஏன் எழுதவில்லை ? என்று கேட்டார். அவர்களோ இம்மகா நூலை சுருக்கி எழுத சிவனாலும் ஆகாது என்றனர். மேலும் உங்களால் முடியும் என்றால் நீங்கள் அதை எங்களுக்கு சுருக்கி கூறுமாறு கேட்டுக் கொண்டனர்.அதற்கு திருமூலர் ஞான நிலையில் நிற்கின்ற சித்தர்களே கேளுங்கள், இந்த 7 இலட்சம் கிரந்தத்தின் சுருக்கத்தை எனக்கு என்னுடைய குருவான நந்தி உபதேசித்தார். அதை நான் ஆயிரம் பாடல்களில் நூலாக எழுதி இந்த அண்டத்தின தென்பகுதியிலுள்ள நூற்றுஅறுபதாவது அண்டத்தில் வைத்துள்ளேன். நீங்கள் அதைப்படிப்பதனால் இன்னும் பல அரிய விஷயங்களையெல்லாம் தெரிந்து கொள்ள முடியும் என்று கூறி அதன் பெருமைகளையெல்லாம் கூறி அவர்களிடமிருந்து விடைபெற்றுக் கொண்டு அடுத்த அண்டத்துக்குள் நுழைந்தார்.
இதன் பாடல் இதோ..

''பார்த்தோம் என்றீரே பராபரச் சித்தர்களே
கார்த்தே இந்நூல்தன்னைக் கண்டுசுருக் காததேன்
சேர்த்ததே சுருக்கச் சிவனாலுங் கூடாதே
மார்த்ததே உண்டாகில் மகத்துவம் சொல்வீரே''. பாடல்- 359
'' சொல்லிடும் என்றீர் சுகஞான சித்தர்கள்
மல்லிய நந்திதான் வைத்தார்கேள் ஆயிரம்
பல்லுயிர் காக்க பகர்ந்தேழு லட்சமும்
கல்லுயிர் வெட்டு போல் காட்டினார் பார்த்திடே
பார்த்திடு என்றீரே பார்க்கும்நூல் எங்குண்டு
தேர்த்து மடக்குந் தெட்சண பாகத்தில்
ஆர்த்திடு ஒருநூற்று அறுபதம் அண்டத்தில்
கோர்த்திடும் சித்தர் குலாவிப் படிப்பதே.'' பாடல் - 360, 361.

அடுத்த அண்டத்தில் நம்பூமியைப்போல பேராசைக்காரர் ஒருவரிடம் ஏமாந்து மீண்ட பாடல்களை திருமூலர் சொல்லியிருக்கிறார். அதை பார்ப்போமா ?

''வாருங்காண் என்று வளமாய் மறுவண்டம்
கூறுங்காண் ஓடிக் கொடுந்தீயால் வேகுற்று
தாருங்காண் தப்பி தனியண்டம் விட்டுநான்
பாருங்காண் பாரென்று பாரென்று பாரீர்
அடுக்கொன்றே அடுக்கைக் கடந்து அதுமேலே
தான்தோற்ற ஒடுக்கிய பாயில் உலாவுறு சித்தர்கள்
தடுக்கிய மேன்தான் தங்கமும் ஒவ்வாது
மடுக்கியே பார்த்தென்னை வாவென்றார் சித்தரே
சித்தரே இவ்விடம் சேர்ந்து இருப்பது பத்தித்த
சித்தாலே பாய்ந்தீரோ அண்டங்கள்
புத்திக்கு முத்திக்கு முன்காய சித்திக்கும்
எத்திக்கும் நூல் உமக்கு ஏது என்றாரே.'' பாடல் -373, 374, 375.

அடுத்த அண்டத்தில் நுழைந்த அது திருமூலர் கொடுந்தீயாய் பற்றி
எரிவது கண்டு அங்கிருந்து தப்பித்து மற்றொரு அண்டத்திற்குள் நுழைகிறார். தங்கமாய் ஜொலிக்கும் உடலைப்பெற்றிருந்த அங்குள்ள சித்தர்கள் திருமூலரிடம் ஞானவழியில் நின்று இப்படி அண்டம் விட்டு அண்டம் வருவதற்கும், அழிவில்லாத உடலைப் பெறுவதற்கும் உதவிய நூல் எதுவோ ? என்று கேட்டார்கள்.
திருமூலரும் சிவனால் பார்வதிக்கு கூறப்பட்ட 7 இலட்சம் கிரந்தங்களைப் படித்துதான் அனைத்து சித்திகளையும் பெற்று இங்கே வந்தேன். அண்டங்கள் பல சுற்றினேன். உயிர் நிலையின் 17 சூட்சுமங்களையும் அறிந்து கொண்டேன் என்றார். அவர்களோ அந்த அண்டத்தில் உள்ள கிரந்தங்களில் 16 சூட்சுமங்களே காணப்படுகிறது, தாங்கள் 17 சூட்சுமங்கள் என்று கூறுவதெப்படி ? என்று கேட்க,

'' என்றநல் சித்தர்கள் எய்திய நூல்கேளு
பண்டசிவன் சொல் பராரபி என்தாய்க்கு
கண்டே கடந்தேன் கவனித்தேன் இவ்வண்டம்
உண்டே பதினேழரை எல்லாம் பார்த்தேனே.
பார்க்க முறைதான் பதினாறல்லோ நூலில்
ஏர்க்க ஒன்றேது என்னையா சொல்லென்றார்
சேர்க்கவே பாருங்கள் சேர்ஏழு இலட்சமும்
ஆர்க்கவே பார்த்தோம் அதிலொன்றைக் காணோமே'' பாடல் - 376, 377.

திருமூலரும் 17 வது நிலை உங்களால் அறியப்படாதது. அது ஆதிசிவனுக்கு ஒப்பானது. அது சொரூபக் குளிகையாகும். அதன்மூலம் அழியாத உடலைப் பெறலாம். மேலும் உயிரின் உண்மை நிலையை அறியலாம். உருவமற்ற நிலையில், வேதாந்தத்தின் உண்மைப் பொருளையும் உணரமுடியும் என்றார். அதில் ஒருவர் அதைக் கொடுங்கள் பார்ப்போம் என்று கேட்க, திருமூலரோ அதை எடுத்துக் கொண்டு ஓடிவிட்டால் என்ன செய்வது என்று மறுக்கிறார். அவரோ அவ்வாறு செய்ய நான் என்ன ஆடா, மாடா, எனக்கென்ன அறிவில்லையா ? பயப்படாமல் தாருங்கள். சோதித்துப் பார்த்துவிட்டு தந்துவிடுகிறேன் என்று விடாப்பிடியாகக் கேட்க திருமூலரும் நம்பிக் கொடுக்கிறார்.

''ஒன்றே குளிகையை உத்தமமாய் நான் பார்த்துக்
கண்டே களிக்கக் கரத்திலே தாராயோ
பண்டே குளிகையைப் பார்த்து நீ சோபித்தால்
இண்டே என் அண்டம் ஏறவும் கூடாதே
கூடாதே போகக் குளிகையை எடுப்பாரோ
ஆடோ மாடோநான் அறிவற்ற ஜென்மமோ
நாடாங் குளிகையை நானிட்டுத் தாரேன்காண்
தேடாங் குளிகையின் சித்தியைப் பார்த்தென்றான்.'' பாடல் - 379, 380.

வாங்கியவன் பறந்து மறைந்து போக திருமூலரும் கமலினிக் குளிகையின் உதவியால் அவனைப் பின் தொடர்ந்தார். சொரூபக் குளிகையின் வேகம் அதிகமாதலால் அண்ட, பேரண்டங்கள்1008 ம் கடந்து புவனுமும் கடந்து போகிறான் அவன். திருமூலரும் விடாமல் பின்தொடரந்து சென்று அவனைப் பிடித்தார். இந்த விண்வெளிப் பயணம் நம் சித்தர்களின் விண் ஞானத்தை நமக்கு படம் பிடித்துக் காட்டி, பிரமிக்க வைக்கிறது. அதோடு விட்டானா மீண்டும் திருமூலரிடம் தப்பித்து புவனம் கடந்து பால்வெளியையும் கடந்து ஒளிமண்டலத்துக்குள் நுழைந்து மனம் மயங்கி திகைத்து நின்றுவிட்டான். விடாமல் துரத்தி வந்த திருமூலரும் அவனிடமிருந்த குளிகையைப் பிடுங்கிக் கொண்டு, அவனிடம் இவ்வளவு அண்டங்களிலும் நீ வசிக்கும் அண்டமே மோசமானதாகும். உன்னைவிட மோசமானவர்கள் அங்கிருப்பார்களோ என்னவோ ? உன் செயலுக்கு தண்டனையாக நீ இங்கேயே கிட என்று சொல்லி தன் பயணத்தை தொடர்கிறார். மேலும் பல அதிசயமான அண்டங்களை எல்லாம் பார்த்து மனநிறைவடைந்து பூமிக்கு வந்து நீண்டகாலம் தவமியற்றி சமாதியில் பலகாலம் இருந்ததாக தன் நூலில் சொல்லியிருக்கிறார்.

''என்றவன் வாயில் இட்டேன் குளிகையை
இன்றிய பூரணம் மார்க்கத்தில் போய்விட்டார்
நன்றே அருந்து அளவினேன் காணாது
தாண்டி கமலிணித் தன்னால் தொடர்ந்தேன்'' - 381.
''தொடர்ந்து அண்டந்தோறுந் துரத்தியே யான்செல்லக்
கடந்தானே அண்டபே ரண்டமா யிரத்தெட்டும்
நடந்தானே புவனமும் நானும் பின்சென்றிட
வடந்தான் பதந்தாண்டி அப்பால் பிடித்தேனே.'' -382.
''பிடிக்கில் பிரிந்தான் பெரிய வெளியூடே
அடக்கிய முப்பாழும் அப்புறந் தாண்டினான்
நடக்கும் மனோன்மணி நாயகி வாசலில்
இடுக்கிப் பிடிக்கையில் ஏகினான் சித்தனே. '' -383
''ஏகினான் நிஷ்களங்க ஏக வெளியிலே
ஆகினான் மட்டும் அவன்பின்னே கத்தினேன்
மாகி இளைத்தான் அவள்மாய்கை சிக்கினான்
பாகியா வென்கை பறித்தேன் குளிகையை.'' -384.
''குறியேது உனக்கு குறிகெட்ட சித்தர்நீர்
பறியாச்சோ அண்டத்தில் பார்த்தோர் சிறியோர்
அறிவாட்சி யில்லாத அறிவிதுகாண் யான்தந்தேன்
நெறியாச்சுது என்று நிமிஷத்தில் வந்தேனே.'' -386.

ஒன்று மட்டும் தோன்றுகிறது என்றாவது ஒருநாள் நம் விஞ்ஞானிகள் இந்த சித்தர்களை காண்பார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக