காமனக் காலன் தக்கன்மிக் கெச்சன்
படக்கடைக் கணித்தவன் அல்லாப்
பேய்மனம் பிறிந்த தவப்பெருந் தொண்டர்
தொண்டனேன் பெரும்பற்றப் புலியூர்ச்
சேமநற் றில்லை வட்டங்கொண் டாண்ட
செல்வச்சிற் றம்பலக் கூத்தா
பூமல ரடிக்கீழ்ப் புராணபூ தங்கள்
பொறுப்பர்என் புன்சொலின் பொருளே... !!!
பொழிப்புரை :
மன்மதன், இயமன், தக்கன், வேள்வித்தலைவன் இவர்கள் அழியுமாறு கடைக்கண் பார்வையாலே செயற் படுத்திய நின்னை அல்லாத பிற தெய்வங்களைத் தொழும் பேய் போன்ற மனம் பெற்றிலாத மேம்பட்ட தொண்டர்களின் தொண்டன் அடியேன்.
பெரும்பற்றப் புலியூராகிய பாதுகாவலைச் செய்யும் மேம்பட்ட தில்லைப் பகுதியை உனக்கு உகந்தருளியிருக்கும் எல்லையாகக் கொண்டு ஆளுகின்ற செல்வம் மிக்க சிற்றம்பலத்தில் கூத்து நிகழ்த்து பவனே! உன்னுடைய தாமரை மலர் போன்ற திருவடியின் கீழ் உள்ள பழைய சிவகணத்தார்கள் அடியேனுடைய அற்பமான சொற்களின் பொருளைப் பொறுமையோடு ஏற்பார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக