அலுவலக நேரத்தில் எவ்வளவு தான் கடினமாக உழைத்தாலும் மேலதிகாரிகளும், சக ஊழியர்களும் உங்களை மதிக்கவிலையா? கவலைப்படாமல் கீழ்க்காணும் வழிமுறைகளைக் கடைபிடித்துத்தான் பாருங்கள்.
1) உங்களுடைய அலுவலகத்துக்கு சற்று முன்கூட்டியே போவது நல்லது. அன்றைய தினம் செய்ய வேண்டிய வேலைகளை ஒரு சிறிய காகிதத்தில் குறித்து வைத்துக் கொள்ளுங்கள். பிறகு முக்கியமானதை முதலில் தொடங்குங்கள்.
2) ஒவ்வொரு வேலையையும் அதை எப்போது முடிக்க வேண்டும் என்பதை தீர்மானம் செய்து கொள்ளுங்கள். எவ்வளவு கடினமாக இருந்தாலும் அதன்படி முடிக்க உறுதிகொள்ளுங்கள்.
3) மேசையை ஒழுங்குபடுத்துவது, பென்சில் சீவுவது, தினசரித் தாளைப் புரட்டுவது, ஒரு கப் காபி அருந்துவது இதுபோன்றவைகளில் ஈடுபட்டுவிட்டு, எப்படி இவ்வவளவு நேரம் ஓடிவிட்டது என்று வியப்படையாதீர்கள்.
4) உங்கள் அலுவலகத்தில் டெலிபோனை தேவையான அளவு பயன்படுத்துங்கள். உங்களுடைய டெலிபோன் பேச்சு அளவாகவும்,பயனுள்ளதாகவும் இருக்கட்டும். முக்கியமான விடயமாகயிருந்தாலும், முதலில் அதை காகிதத்தில் குறித்துக் கொண்டு பேசுவது நல்லது. டெலிபோனில் உங்களோடு உரையாடிக் கொண்டிருப்பவர்கள் சொல்லும் பதிலை அந்தக் காகிதத்திலேயே குறித்துக் கொள்வது நல்லது.
5) வேலையை செய்து முடிக்க பழைய முறை ஒன்றிருந்தாலும் நீங்களே சிந்தித்து நன்மை பயக்கும் புதிய முறையை கணடுபிடியுங்கள். ஆழ்ந்து சிந்தித்தால் நிச்சயம் நன்மை கிடைக்கும்.
6) உங்களுக்கு வரும் மின்னஞ்சல்களை படிக்கும் போதே ஒரு குறிப்பேட்டில் எழுத வேண்டிய பதிலை எழுதி வையுங்கள். பின்னர் அதைப் பார்த்து பதில் எழுத வசதியாக இருக்கும்.
7) உங்களுடைய நேரத்தை முழுமையாக பயன்படுத்துங்கள். ரயிலுக்காக காத்திருக்கும் நேரத்தை முழுமையாக பயன்படுத்துங்கள். ரயிலுக்காக காத்திருக்கும் நேரம், ரயில் பயண நேரம், தனியாக உண்ணும் நேரம். இவைகளின் போது உங்களுடைய பிரச்சனைகளின் தீர்வுகளைப் பற்றி சிந்திக்கலாம்.
8) எவ்வளவு நேரம் எந்த விடயத்தில் வீணாக்கினீர்கள் என்று தினமும் மாலை உங்கள் தனிப்பட்ட குறிப்பேட்டில் எழுதிக்கொள்ளுங்கள். மீண்டும் அவ்வாறு வீணாக்காமலிருக்க அது உதவும்.
9) ஒரு வேலையைத் தொடங்கும் பொழுது, அதன் தகுதியை பண அடிப்படையில் ஒப்பிட்டுப் பார்த்து ஆரம்பியுங்ள். உங்களுக்கு ஒரு மணி நேர வேலைக்கு எவ்வளவு ஊதியம் தரப்படுகிறது என்பதைக் கணக்கிட்டால் தெரிந்து விடுகிறது.
10) சக ஊழியர்களிடம் கண்ணியமாகப் பழகுங்கள். அவர்களுக்கு மரியாதை கொடுத்து நீங்கள் மரியாதையைப் பெற்றுக்கொள்ளுங்கள்.
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக