தனது முன்னோர்களை போலவே நல்லாட்சியும், பல சாதனைகளையும், போரில் பல வெற்றிகளையும் பெற்றுவந்த அசோகர் புகழ்பெற்ற கலிங்க போரினை எதிர்கொண்டார்.
மிகப்பெரும் சாம்ராஜ்யமாக விளங்கிய கலிங்கத்தை எதிர்த்து போரிட்ட அசோகர் அந்த போரில் வரலாற்று சிறப்புமிக்க வெற்றி பெற்றார்.
ஆனால் இந்த போரின் முடிவு அசோகரின் மனதில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது.
இந்த போரில் கலிங்கத்தை சேர்ந்தவர்கள் சுமார் 1 லட்சம் பேர், அசோகரின் படையினை எதிர்த்து போரிட்டு தங்கள் இன்னுயிரை இழந்தனர்.
இந்த படுகொலைகளை பார்த்து மனம் வெதும்பிய அசோகர் பின்னர், இனி போரே வேண்டாம் என்ற முடிவுக்கு வந்ததும், புத்த மதத்திற்கு மாறியதும், பின்னர் புத்த மதத்தை இந்தியா மட்டுமல்லாது உலகம் முழுவதும் பரப்புவதில் ஈடுபட்டதும் நாம் நன்கறிந்த தகவல்களே!
ஆனால் அவரை பற்றி தெரியாத சுவாரஸ்யமான மர்ம தகவல் ஒன்று உள்ளது. அதனை பற்றி இப்போது பார்ப்போம்..
போரினால் வரும் இன்னல்களை உணர்ந்து அஹிம்சைக்கு மனம் மாறிய அசோகர், போரினால் ஏற்படும் அறிவு சார்ந்த அழிவுகளையும், அறிவு மற்றும் தொழிநுட்பம் சார்ந்த விடயங்கள் தீயவர்களின் கைகளில் சென்றடைந்தால் உலகம் எத்தகைய ஆபத்தில் சென்று முடியும் எனவும் யோசித்துள்ளார்.
இதையடுத்து அவருக்கு ஒரு அபூர்வ யோசனை தோன்றியுள்ளது. உலகில் உள்ள அறிவு சார்ந்த விடயங்கள் அனைத்தையும் துறைவாரியாக புத்தகமாக அவர் மாற்றினார்.
இவ்வாறு மொத்தம் 9 துறைகளும், அதற்கான 9 புத்தகங்களையும் தயாரித்த அவர், அந்த 9 புத்தகங்களையும், தான் ரகசியமாக தெரிவு செய்த 9 ஆண் நபர்களை கொண்ட ரகசிய குழுவிடம் ஒப்படைத்தார்.
மேலும், அந்த 9 நபர்கள் யாரென்று தன்னை தவிர யாருக்கும் தெரியாமல் அசோகர் ரகசியமாக வைத்திருந்ததாக நம்பப்படுகிறது.
அசோகர் தெரிவு செய்த 9 புத்தகங்களின் பெயர்கள், உளவியல் போர் (psychological warfare), உடலியல் (physiology), நுண்ணுயிரியல் (microbiology), தகவல் தொடர்பு மற்றும் வேற்றுக் கிரகவாசிகளுடனான தொடர்பு (communication), புவியீர்ப்பு மற்றும் எதிர்ப்பு ஈர்ப்புவிசை (gravitation, anti gravity), அண்டவியல் மற்றும் நேரப்பயணம் (Cosmology including hyperspace and time-travel), ரசவாதம் (alchemy), ஒளி (light) மற்றும் சமூகவியல் (sociology) ஆகும்.
ஆனால், பல நூற்றாண்டுகளை கடந்தும் இந்த 9 நபர்கள் என்ன ஆனார்கள், அந்த புத்தகங்கள் என்ன ஆனது என்ற கேள்விகள் விடை தெரியாமல் மர்மம் அகலாமலேயே உள்ளது.
மேலும், இவையெல்லாம் உண்மை தானா அல்லது வெறும் கட்டுக்கதைகள் தானா என்ற சந்தேகத்திற்கும் பல்லாண்டுகளாக தெளிவான விடை எதுவும் கிடைக்கவில்லை.
1923ம் ஆண்டில் Talbot Mundy என்பவரால் எழுதப்பட்ட The Nine Unknown என்ற நாவலில், இந்தியாவை ஆட்சி செய்த அசோக பேரரசரின் 9 ரகசிய நபர்கள் பற்றியும் அந்த 9 புத்தகங்கள் பற்றியும் விவரிக்கப்பட்டுள்ளது.
இந்த மர்மங்கள் பற்றிய குழப்பங்கள் தீருவதற்கு அசோக பேரரசரே, காலப் பயணம் செய்து வந்து தெளிவை ஏற்படுத்தினால் ஒழிய இந்த 9 நபர்கள் யாரென்று அறிவதற்கு நமக்கு வேறு வழி இல்லை.
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக