தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 3 ஏப்ரல், 2015

உருளைக்கிழங்கு சாப்பிட்டால் என்ன நன்மை?

அனைவரும் விரும்பி சாப்பிடும் உருகைக்கிழங்கில் அதிகமான சத்துக்கள் அடங்கியுள்ளன.
ஆனால் இதை அதிக அளவில் சாப்பிட்டால் உடலுக்கு தீங்கு விளைவிக்கும்.
எனினும் இதை அளவாய் உட்கொண்டு வருவதன் மூலம் நம் உடலில் அதிகமாய் உள்ள புளித்த அமிலங்களைச் வெளியேற்றி உடலை ஆரோக்கியமாகப் பாதுகாக்கிறது.
இதில் மாவுச்சத்து, உயிர்ச்சத்து, இரும்பு மற்றும் புரதச்சத்தும் காணப்படுகின்றன.
உருளைக்கிழங்கை மசித்து உணவுடன் சாப்பிடுவது உடல் ஆரோக்கியதிற்கு மிகவும் நல்லது.
உருளைக்கிழங்கின் மகத்துவங்கள்
· உருளைக்கிழங்கில் கார்போஹைட்ரேட் அதிகமாகவும் மற்றும் சிறிதளவு புரதமும் நிறைந்துள்ளது. ஆகவே ஒல்லியாக இருப்பவர்களின் எடையை அதிகரிப்பதற்கு, உருளைக்கிழங்கு உறுதுணையாக இருக்கும்.
· கார்போஹைட்ரேட் அதிகம் இருப்பதால், அது சுலபமான செரிமானத்திற்கு உதவியாக இருக்கும்.
· பச்சை உருளைக்கிழங்கை அரைத்து எடுத்த பேஸ்ட்டை தேனுடன் கலந்து சருமத்தில் தடவினால் சருமம் மிளிரும்
· வேக வைத்த உருளைக்கிழங்குகளின் தண்ணீர் கீழ்வாதத்திற்கு நிவாரணியாக இருக்கிறது.
·உடலின் வீக்கம் மற்றும் அலர்ஜிக்கு ஏற்ற மருந்தாக விளங்குகிறது.
· பச்சை உருளையை அரைத்து வாய் புண்களின் மேல் தடவினால் நல்ல பலன் கிடைக்கும்.
· உருளைக்கிழங்கை சாப்பிடுவது இதயம் மற்றும் உட்புற உறுப்புகளுக்கும் மிகவும் நல்லது.
· மூளையின் செயல்பாட்டிற்கு பெரிதும் உதவுகிறது.
· வயிற்றுப் போக்கினால் அவதிப்படுவோருக்கு இது ஒரு வளமான ஆற்றல் கொண்ட உணவாகும்
· உருளைக்கிழங்கின் சாறை, எரிகாயம், சிராய்ப்புகள், சுளுக்கு போன்றவற்றிற்கு சிகிச்சை அளிக்க உபயோகிக்கலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக