தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 3 ஏப்ரல், 2015

100 அடி நீள ஆபத்தான தொங்கு பாலத்தில் சைக்கிள் பயணம்: கல்வி கற்பதற்காக சவாலை சந்திக்கும் இந்தோனேசிய மாணவர்கள்


கல்வி கற்பதே சவாலான விஷயம் என்று இன்றைய மாணவ செல்வங்கள் சிந்திக்கும் நிலையில், இந்தோனேசியாவில் பள்ளிக்கு செல்லும் பாதையே சவாலாக இருப்பது தற்போது வெளி உலகிற்கு தெரிய வந்துள்ளது.

அந்நாட்டில் உள்ள ஜாவா காடுகளில் 100 அடி நீள தொங்கு பாலம் ஒன்று உள்ளது. இந்த தொங்கு பாலத்தில் ஒரு அடி அகலத்திற்கு குறுகிய மரப்பலகை காணப்படுகிறது. இந்த பாலத்தை கடந்து தான் அப்பகுதியில் உள்ள மாணவர்கள் தங்கள் பள்ளிக்கு செல்லவேண்டும். தினமும் இரு வேளைகளில் தங்கள் உயிரை பயணம் வைத்தே மாணவ செல்வங்கள் பாலத்தை கடந்து சென்று கல்வி கற்று வருகின்றனர்.

ஒரே சமயத்தில் இரு முனைகளில் இருந்து யாரும் புறப்பட முடியாத வகையில் இந்த பாலமானது ஒரு வழி பாதையாக அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆபத்தான பாலத்தின் பக்கவாட்டில் உள்ள இரும்பு கம்பியை பிடித்தவாறே மாணவர்கள் தங்கள் சைக்கிள்களை ஓட்டி செல்கின்றனர். நிலையான பாலம் என்றால் கூட கொஞ்சம் துணிச்சலாக சைக்கிளை ஓட்டிச்சென்று விடலாம். ஆனால் இது தொங்கு பாலமாக இருப்பதால் ஆபத்து மேலும் அதிகம். எனினும் துணிச்சலுடன் பயணிக்கும் மாணவர்கள் பாலத்தை கடந்து சென்று தினமும் கல்வி பயின்று வருவது குறிப்பிடத்தக்கது.






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக