300 வயது பழமையான ஏசு சிலையில் அமைந்துள்ள மனிதப் பற்கள்! வியப்பூட்டும் தகவல் (வீடியோ இணைப்பு)
வடக்கு மெக்ஸிகோவில் San Bartolo Cuautlalpan-ல் உள்ள தேவாலயம் ஒன்றில், சுமார் 300 வருடங்களுக்கும் மேலாக ஏசு சிலை ஒன்று உள்ளது.
தேவாலய பராமரிப்பு பணியின் போது சிலையில் ஏதும் குறைகள் மற்றும் துளைகள் ஏற்பட்டுள்ளதா என்பதை அறிவதற்காக நிபுணர் குழுவினர் எக்ஸ்-ரே எடுத்துள்ளனர்.
18ம் நூற்றாண்டை சேர்ந்ததாக கருதப்படும் அந்த ஏசு சிலையினை, நிபுணர்கள் எக்ஸ்-ரே எடுத்து பார்த்தபோது பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
ஏனெனில் அந்த ஏசு சிலையில் இருந்த 8 பற்கள் மனிதனின் பற்கள் என்றும் அவை எவ்வித சேதமும் இன்றி நல்ல முறையில் வரிசையாக அமைந்திருந்ததும் தெரியவந்தது.
எப்போதும் செய்யப்படும் சிலைகளில் உள்ள பற்கள் மரங்களாலோ அல்லது எலும்பினாலோ செய்யப்படும் நிலையில், இந்த சிலையில் மனித பற்கள் அமைந்திருந்தது அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அந்த 8 பற்களும் வேர் வரை ஊடுருவி சரியாக அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Unikel என்ற பெண் நிபுணர் இதுபற்றி கூறுகையில், இந்த பற்களை 18ம் நூற்றாண்டை சேர்ந்த பக்தர்கள் யாராவது காணிக்கையாக வழங்கி பொருத்தப்பட்டிருக்கலாம்.
மேலும், 17 மற்றும் 18ம் நூற்றாண்டு காலங்களில் பொதுமக்கள் வேண்டுதலுக்காக உடல் பாகங்களை கொடுப்பதை நாம் கேள்விபட்டிருப்போம். அப்போது அது சாதாராணமான ஒன்று தான் என்றாலும் இது சுத்த மடத்தனம்.
இந்த பற்களை வழங்கியது யார்? என்று சரியாக தெரியவில்லை. அதைபற்றி ஆராய்ச்சி செய்தால் தான் கண்டுபிடிக்க முடியும்.
நாங்கள் முதலில் இதனை பார்த்த போது முற்றிலும் நம்பவில்லை. ஆனால் பின்னர் மனித பற்கள் என்று உறுதியான பிறகு நாங்கள் ஆச்சரியம் அடைந்தோம்.
தற்போது ஆராய்ச்சியாளர்கள், இந்த பற்களை வழங்கிய நபர் யாரென்றும் அது ஆணா? அல்லது பெண்ணா? என்பது பற்றி ஆராயவும் ஆர்வமாக உள்ளனர்.
ஆனால், அந்த பற்கள் அமைந்துள்ள சிலை மதநம்பிக்கை உள்ளது என்பதால் அந்த பற்களை எடுத்து ஆராய்ச்சி செய்ய அனுமதி கிடைக்க வாய்ப்பில்லை.
எனினும் ஆராய்ச்சியாளர்கள் அந்த பற்களை பற்றிய ஆராய்ச்சியை மேற்கொள்வதற்கு ஆர்வமாக உள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த சிலையில் உள்ள மனித பற்கள் பற்றிய மர்மம் இன்னும் விலகாமலே உள்ளதால், இந்த ஏசு சிலையும் தேவாலயமும் நன்கு பிரபலமடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக