தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் உடலுக்கு ஆரோக்கியம் கிடைப்பதால், மருத்துவரை பார்க்க வேண்டிய அவசியமில்லை என்பது பழமொழியாகும்.
ஆனால், தினமும் ஆப்பிள் சாப்பிடுவர்களும், எப்போதாவது மட்டுமே ஆப்பிள் சாப்பிடுபவர்களும் ஒரே அளவுக்குத்தான் மருத்துவரைச் சந்திக்கிறார்கள் என மிக்சிகன் பல்கலைக்கழக நர்சிங் பிரிவு ஆய்வாளர் அன் ஆர்பர்(University of Michigan Division of Nursing - An Arber)மற்றும் அவரது குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இவர்கள், கடந்த 2007-08 மற்றும் 2009-10ம் ஆண்டுகளில் தேசிய சுகாதார மற்றும் ஊட்டச்சத்து ஆய்வு தொடர்பான தரவுகளை ஆய்வு செய்தனர். இதில், 8,399 பேர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். இவர்களில் 753 பேர் மட்டுமே ஆப்பிள் சாப்பிடுபவர்கள், 7,646 பேர் ஆப்பிள் சாப்பிடாதவர்கள்.
இதுதொடர்பான தரவுகளை ஆய்வு செய்ததில், தினமும் ஆப்பிள் சாப்பிடுபவர்களும், எப்போதாவது மட்டுமே ஆப்பிள் சாப்பிடுபவர்களுக்கும் இடையே மன நலம் மற்றும் உடல் நலக் காரணங்களுக்காக மருத்துவரைச் சந்திக்கும் எண்ணிக்கையில் வேறுபாடு இல்லை எனத் தெரியவந்துள்ளது.
இருப்பினும், ஆப்பிள் சாப்பிடுபவர்கள் மற்றவர்களோடு ஒப்பிடுகையில் குறைந்த அளவு மருந்துகளை எடுத்துக் கொள்கின்றனர். இதனால், மருந்துகளுக்குச் செலவிடும் தொகை சற்றுக் குறையும் என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக