தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 1 ஏப்ரல், 2015

கோபக்கார மாமியாரை வசியப்படுத்த...மருமகளே கண்டிப்பா இதப் படிங்க!


திருமணத்திற்கு பின்னர் புகுந்த வீட்டிற்கு காலடி எடுத்து வைக்கும் பெண்கள் ஒரு வித எதிர்பார்ப்போடு தான் செல்வார்கள்.
தாய் வீட்டில் செல்லமகளாக வளர்ந்துவிட்டு, புகுந்த வீட்டிற்கு செல்லும்போது, சந்திக்கும் புது உறவுகளை எவ்வாறு எதிர்கொள்ளப்போகிறோம் என்ற தயக்கம் இருக்கும்.
கணவன்மார்களுக்கும் தங்கள் துணையின் மேல் ஒருவித எதிர்பார்ப்பு இருக்கும்.
அதே போன்று, வீட்டிற்கு வரும் மருமகள் புகுந்த வீட்டில் நல்லுறவை ஏற்படுத்துவாள் என்று ஒவ்வொரு மாமியாரும் நம்புவார்கள்.
ஆனால், ஒரு சில வீட்டில் ஒற்றுமை இருந்தாலும், பலரது வீட்டில் வேற்றுமையே மேலோங்கும்.
ஒரு நல்ல மருமகள் வீட்டை சரிசமமாக கையாண்டு சிறந்த வழியில் கொண்டு செல்லலாம். வேறொரு குடும்பத்தில் இருந்து வந்து, புதிய மனிதர்களிடமும், புதிய குடும்பத்திலும் அனுசரித்து போவதற்கு சில காலம் தேவைப்படும்.
நமது குடும்பத்தை சரிசமமாகவும், நல்முறையில் வழிநடத்தவும், நாம் புகுந்த வீட்டில் சண்டைகளை தவிர்க்க வேண்டும்.
அதனால் அந்த சந்தர்ப்பத்தை புரிந்து கொண்டு நடப்பதால், வாழ்க்கையை நல்ல முறையில் வாழலாம்.
சந்தர்ப்பங்களை புரிந்து கொள்ளாமல், கோபமாக கையாண்டால் மாமியார், மருமகள் உறவில் விரிசல் ஏற்படலாம்.
உங்கள் கணவரை நல்ல ஒரு மனிதராக வளர்த்ததற்காக அவரது பெற்றோர்களை பாராட்டுங்கள்.
அவர்கள் உங்கள் கணவரை வளர்ப்பதற்காக பட்ட கஷ்டங்களை ஏற்றுகொள்ளுங்கள். இது அவர்களுக்கு நிச்சயமாக ஒரு இனிமையான உணர்வை கொண்டு வரலாம்.
திருமண வாழ்க்கையில் சண்டைகள் வருவது பொதுவான ஒன்றாகும். உங்கள் கணவரிடம் சண்டை ஏற்பட்டால் தேவை இல்லாமல் அவர்களது பெற்றோரை இழுக்கக்கூடாது.
இதுவே அவர்களோடு சண்டை ஏற்படுவதை தவிர்க்கும். ஒரு நல்ல மருமகளாக அவர்களின் உணர்ச்சிகளையும் பாதுகாப்பையும் புரிந்து கொள்ள வேண்டும்.
ஒரு நல்ல மருமகள் தனது மாமியாருக்கு எப்பொழுதுமே நல்ல தோழியாகவே இருப்பார். எனவே உங்கள் மாமியாரை தோழியாக ஏற்றுக்கொண்டு வாழ்க்கையை சந்தோஷமாக வாழுங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக