நமது முன்னோர்கள் நமக்கு அளித்த பாரம்பரியங்கள் அனைத்திலும் ஏதோ ஒரு
அர்த்தம் இருக்கும் .தேவையா ? வேண்டாமா ...?. ..கழுத்தில் இருக்கட்டுமா
...? கழற்றி ஆணியில் மாட்டிவிடலாமா ...? என பல விவாதங்களுக்கு உள்ளாகும்
தாலிக்கான விஞ்ஞான விளக்கம் இதோ .....
தாலி என்ன சாதாரணமா...
சரி நாம் நம் முன்னோர்களின்
அறிவியலை பார்போம்..
பெண்ணுக்கு மார்பு குழியில் ஒரு நரம்பு
முடிச்சு இருக்கிறது இது ஆணுக்கு இல்லை..
இந்த நரம்பு முடிச்சு மூளையில் பேசல் ரீஜன்
பகுதியோடு தொடர்பு ஏற்படுத்தும் வேலை
செய்யும். இது பெண்ணுக்கு இரண்டு
நரம்புகள் கொண்ட பாதையாகவும்,
ஆணுக்கு ஒரு நரம்பு கொண்ட
பாதையாகவும் இருக்கிறது. இதனால்
ஆணை விட பெண்ணுக்கு அதிக நியாபக
சக்தியை உண்டாக்குகிறது.. இந்த அதிக
நியாபக சக்தியால் ஆணை விட
பெண்ணுக்கு சில குழப்பங்களையும்
கொடுக்கிறது. ஒரு பெண் ஒரு விசயத்தில்
ஒரு முடிவு எடுத்துட்டு பின் அதனால்
குழப்பம் அடைவதற்குக்கு இதுதான்
காரணம்..... இதை கண்டறிந்த ஒரு ஞானி
ராஜராஜ சோழன் இடம் சொல்ல அதற்கு
மருந்து கண்டு பிடிக்க முடிவு செய்து அதன்
படி ஒவ்வொரு உலோகத்துக்கும் ஒரு மருத்து
குணம் உண்டு அதன்படி தங்கத்திற்கு
இருக்கும் மருத்துவ குணத்தை கண்டறிந்து,
அந்த தங்கம் பெண்ணுடைய மார்பு
குழியில் எப்போதும் உரச உரச
பெண்ணிற்கு நன்மை தரும் என்று இந்த
தாலி முறைய கொண்டு வந்தாங்க. அது
சரியாக மார்புகுழி இடத்தில் வரவேண்டும்
என்று மூன்று முடிச்சு போட்டால் மார்பு
குழியில் வரும் என்று ஒரு கணக்கு
போட்டார்கள். இந்த தாலி முறையைத்தான்
இப்போது வரை நாம் பயன்படுத்துவது .
Arul Krishnan :தாலம் பனை என்ற பனை ஓலையினால் செய்த ஒன்றையே பண்டைக்காலத்தில் மணமகன் மணமகள் கழுத்தில் கட்டி வந்தபடியால் இதற்குத் தாலி என்ற பெயர் வந்தது. தாலமாகிய பனை ஓலையினால் செய்தது என்பது இதன் பொருள். பனை ஓலைத் தாலி அடிக்கடி பழுதுபட்டதால் நிரந்தரமாக இருக்க உலோகத்தால் ஆன தாலி செய்து பயன்படுத்தினர். பின்னாளில் அதனைப் பொன்னால் செய்து பொற்றாலி ஆக்கினர். ஆயின் தாலியின் உண்மையான அடையாளம் பொன்னில் செய்வதால் அல்ல. வெறுமே ஒரு விரலி மஞ்சளை எடுத்துக் கயிற்றால் கட்டி கழுத்தில் முடிச்சுப் போடுவது கூடத் தாலி தான். (இயல் மஞ்சளை எடுத்து, வெய்யிலில் காயவைத்து, நீரில்லாமல் வற்றவைத்த மஞ்சளுக்குத் தான் விரலி மஞ்சள் என்று பெயர். விரல் விரலாய் இருக்கும் மஞ்சள் விரலி மஞ்சள். மஞ்சள் கட்டும் கயிற்றுக்கும் மஞ்சள் நிறம் ஏற்றுவார்கள்.) தாலியின் சூழ்க்குமம் “மஞ்சள், கயிறு, கட்டுதல்” ஆகியவற்றில் அடங்கி இருக்கிறதே ஒழிய, பொன், பணம், சங்கிலி என்பதில் இல்லை.
இன்னார் மகன், இன்னார் மகளை இன்னார் சம்மதத்துடன் இன்னார் முன்னிலையில் இந்த நேரத்தில் இந்நாளில் கல்யாணம் செய்துகொள்வதாக அனைவரும் கையொப்பமிட அந்த தாளினை கயிற்றில் கோர்த்து மணமகளின் கழுத்தில் மணமகன் கட்டியதாக ஆய்வு சொல்கிறது. சுத்துரு, சுத்திரி, மாங்களியம், மங்கலியம், மங்கலவணி என சொல்லும் தாலியை - மண அடையாள வில்லையைக் குறிக்கும்
தால் என்ற சொல் தால் என்னும் இயல்பையும் (மஞ்சள் நிறம்), தால் என்னும் இயற்பொருளையும் (மஞ்சள் பொருள், பொன் போன்றவை) குறிக்கலாம். இனி, வேலால் ஆனது வேலி என்பது போலத் தாலால் ஆனது தாலி. இந்தத் தாலி பொன்னால் இருக்க வேண்டியது அல்ல. ஒளி நிறைந்த மஞ்சளால் கூட ஆகியிருக்கலாம்.
அகநானூறு
இந்தக் காலத்தில் மாப்பிள்ளை பொண்ணுக்குத் தாலிகட்டுவது தான் கல்யாணம் என்று நாம் நினைத்துக் கொண்டு இருக்கிறோம். ஆனால், சங்க காலத்தில், அப்படி இல்லை; தாலியைப் பற்றிய பேச்சு அங்கு இல்லை. (பேச்சு இல்லை என்றவுடன், பழக்கம் இல்லையென்று கூறிவிட முடியாது. நம்மால் உறுதியாய்ச் சொல்ல முடியவில்லை என்று மட்டுமே சொல்லலாம். ஆனால் சங்கம் மருவிய காலத்தில் சிலம்பின் காலத்தில் தாலி உறுதியாய் இருந்திருக்கிறது.
அகநானூறு 86-ல் ஒரு திருமணக் காட்சி வருகிறது.
Jay Muni Jayamuniesvaran ஆமாம் இதிலென்ன் தவறு
தாலி களபிரர் ஆட்சியிலும் , தெலுங்கர் , கன்ன்டர் . துளுவர்
ஆகியோரால் வந்ததே
தமிழன் மாலை மாற்றினான் அணிகலன் பூட்டினான் அவ்வளவே தாலி யும் ஓர் அணி கலன் ஆனதால இண்று பயன்படுத்திகிறான்
ரிக் வேதத்தில் காணப்படும் ஒரு திருமணத்தின் மந்திர பாகத்தை எடுத்து ‘ஆபஸ்தம்பர்’ என்பவர் திருமண மந்திரங்களையும் சடங்குகளையும் வரிசைப்படுத்தி எழுதினார். அதன்பெயர் “கிருஹ்ய சூத்ரம்”. அந்தத் திருமண மந்திரங்களுக்கு உரை எழுதி ஒரு நூல் வெளியிடப்பட்டது. அதன்பெயர் ‘விவாஹ மந்த்ரார்த்தங்கள்’. இந்நூல் காஞ்சி காமகோடி மடத்தால் வெளியிடப்பட்டது. காமகோடி மட வெளியீடு மட்டுமல்ல; ‘மந்த்ர ப்ரச்னம்’ என்ற கடலங்குடி பப்ளிகேஷன் வெளியிட்ட நூலும் இதை அப்படியே உறுதி செய்கிறது. காமகோடி மடம் வெளியிட்ட ‘விவாஹ மந்த்ரார்த்தங்கள்’ என்ற நூலில் உள்ள பகுதியை இங்கே காண்போம்:
“இந்தப் பாணிக்கிரகணத்துக்கு முன்னால் வெகு நாளைய சம்ப்ரதாயப்படி மாங்கல்ய தாரணம் என்ற சுபகர்மம் அனுஷ்டிக்கப்படுகிறது. மாங்கல்ய தாரணத்துக்கான வேத மந்திரம் ஒன்றும் இல்லாதபடியால் சூத்ரகாரர் அதைப்பற்றி இங்கே சொல்லவில்லை என்றே நாம் நினைக்க வேண்டி இருக்கிறது”. (பக்கம் 86; ‘விவாஹ மந்த்ரார்த்தங்கள்’)

தெலுங்குப்பொய்யர் எழுத்தில்.....
தாலி - இந்துக்களின் பண்பாடா?
இந்துமத சாஸ்திரங்களிலோ, ஆரியவேதங்களிலோ தாலி பற்றிய எவ்விதக்
குறிப்புகளும் கிடையாது. இந்திய அரசியல் சட்டத்தில் இடம்பெற்றுள்ள இந்துத்
திருமணச் சட்டத்திலும் தாலி பற்றியோ, தாலி இந்துக்களின்
பண்பாடு என்பது பற்றியோ எந்தக் குறிப்புகளும்,
விதிகளும் கிடையாது. இந்துத் திருமண மந்திரங்களிலும் தாலி கட்டுவதற்கென்று
எந்த மந்திரமும் கிடையாது. வடஇந்தியாவிலும் இந்து மக்களிடையே தாலி கட்டுவது
முக்கியப் பண்பாடாகவும் இல்லை. இந்து மக்களிடையே மிகவும் பிற்காலத்தில்
புகுந்ததுதான் இந்தத் தாலி. விளக்கமாகக்
காண்போம்.
ரிக் வேதத்தில் காணப்படும் ஒரு திருமணத்தின் மந்திர பாகத்தை எடுத்து ‘ஆபஸ்தம்பர்’ என்பவர் திருமண மந்திரங்களையும் சடங்குகளையும் வரிசைப்படுத்தி எழுதினார். அதன்பெயர் “கிருஹ்ய சூத்ரம்”. அந்தத் திருமண மந்திரங்களுக்கு உரை எழுதி ஒரு நூல் வெளியிடப்பட்டது. அதன்பெயர் ‘விவாஹ மந்த்ரார்த்தங்கள்’. இந்நூல் காஞ்சி காமகோடி மடத்தால் வெளியிடப்பட்டது. காமகோடி மட வெளியீடு மட்டுமல்ல; ‘மந்த்ர ப்ரச்னம்’ என்ற கடலங்குடி பப்ளிகேஷன் வெளியிட்ட நூலும் இதை அப்படியே உறுதி செய்கிறது. காமகோடி மடம் வெளியிட்ட ‘விவாஹ மந்த்ரார்த்தங்கள்’ என்ற நூலில் உள்ள பகுதியை இங்கே காண்போம்:
“இந்தப் பாணிக்கிரகணத்துக்கு முன்னால் வெகு நாளைய சம்ப்ரதாயப்படி மாங்கல்ய தாரணம் என்ற சுபகர்மம் அனுஷ்டிக்கப்படுகிறது. மாங்கல்ய தாரணத்துக்கான வேத மந்திரம் ஒன்றும் இல்லாதபடியால் சூத்ரகாரர் அதைப்பற்றி இங்கே சொல்லவில்லை என்றே நாம் நினைக்க வேண்டி இருக்கிறது”. (பக்கம் 86; ‘விவாஹ மந்த்ரார்த்தங்கள்’)
“இதுவே பாணிக்கிரஹணம் என்றதாலும்
குறிக்கப்படுகின்றது. இந்தப் பாணிக் கிரஹணத்திற்கு முன்னால் ‘மாங்கல்ய தாரணம்’ என்றதொரு காரியம் நமது சம்பிரதாயத்தில் நடைபெறுகிறது. சாஸ்திரப் பயிற்சி
அற்றவர்கள் அதையே பிரதான கார்யமாகக் கருதி லக்னம் முதலியன தவறாவண்ணம் மிக்க
ஜாக்கிரதையுடன் நடத்தி வருகின்றனர் என்பது உண்மையே. ஆயினும் கிருஹ்ய
சூத்திரங்களிலோ, மந்திரங்களிலோ
இவ்விஷயத்தைப் பற்றிக் கொஞ்சமேனும் கூறவில்லை. பாணிக்கிரஹணம், சப்தபதி முதலியனவே பிரதானமாய் உபதேசிக்கப்பட்டிருக்
கின்றன. இக்கார்யங்களுள் ஒன்றான பாணிக்கிரஹத்தைத் தான் நல்ல லக்னத்தில் தவறா
வண்ணம் நடத்த வேண்டும் என்று சாஸ்திர மூலம் வெளியாகின்றது.” - மந்த்ரப் ப்ரச்னம் - தமிழுரையுடன் - பக்கம் 34, 35)
இந்துவேத முறைப்படி செய்யும்
திருமணச் சடங்குகளில் தாலி கட்டும் சடங்கே இல்லை என்று மேற்கண்ட நூல்களில்
தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்து மத வேத மந்திரங்களிலோ, வேத மந்திரங்களின் அடிப்படையில் திருமணச்
சடங்குகளைத் தொகுத்த கிருஹ்ய சூத்திரத்திலோ தாலி கட்டும் பேச்சோ, அதற்குரிய மந்திரமோ இல்லை. இதனால்தான் பிராம்மண
புரோகிதர்களிடையே மாங்கல்யம் கட்டும் போது ஒரே வகையான சுலோகம் பின்பற்றப்படாமல்
ஒருவர் ‘மாங்கல்யம் தந்து
நானே’ என்றும், ஒருவர் ‘சர்வ மங்கள
மாங்கல்யே’ என்றும் மாறி மாறி
ஓதுகிறார்கள். வேத மந்திரம் என்று ஒன்று இருக்குமானால் அதையே எல்லோரும் ஒரே
மாதிரி ஓதும் வழக்கம் வந்திருக்கும்.
இந்திய அரசியல்
சட்டத்திலுள்ள இந்துத் திருமணச்சட்டத்திலும் ‘சப்தபதி’ என்னும் சடங்குதான் கூறப்படுகிறதே ஒழிய தாலி பற்றி
எங்கும் குறிப்புகளோ, விதிகளோ இல்லை. ஆக, தாலி என்பது சட்டப்படியோ, இந்துமதசாஸ்திரப்படியோ, இந்துமதவிதிகளின் படியோ இந்துக்களின் பண்பாடு அல்ல
தெளிவாகிறது.
தாலி - தமிழர்களின் பண்பாடா?
தாலியின் சரித்திரம் என்ற தலைப்பில் ஆய்வறிஞர் பேராசிரியர் முனைவர்
தொ.பரமசிவன் அவர்கள் உண்மை ஏட்டில் எழுதியுள்ள கட்டுரையிலிருந்து:
“கி.பி.10ஆம் நூற்றாண்டுவரை தமிழ்நாட்டில் தாலி என்ற பேச்சே
கிடையாது என்கிறார் கா.
அப்பாத்துரையார். பெரும்புலவர் மதுரை முதலியாரும், தமிழ் ஆய்வறிஞர் மா. இராசமாணிக்கனாரும் பழந்தமிழர்களிடத்தில் மங்கலத்தாலி
வழக்கு கிடையாது என உறுதியுடன் எடுத்துக் கூறினர்.
தொல் பழங்குடி மக்கள்
பிள்ளைகளைத் தீயவை அணுகாமல் காப்பதற்குப் பிள்ளைகளின் இடுப்பில் அரைஞாண் கயிற்றில்
சில பொருள்களைக் கட்டும் வழக்கம் இருந்தது. அவ்வழக்கம் மிக அண்மைக் காலம்வரை கூட
நீடித்தது. இவ்வாறு அய்ந்து பொருள்களைப் பிள்ளைகளின் அரைஞாண் கயிற்றில் கட்டுவதை
சங்க இலக்கியங்கள் அய்ம்படைத் தாலி என்று குறிப்பிடுகின்றன. மிக அண்மைக்காலம்
வரையிலும்கூட கிராமப்புறங்களில் குழந்தைகளின் அரைஞாண் கயிற்றில் நாய், சாவி, தாயத்து ஆகிய
உருவங்களைச் செய்து கட்டுவது வழக்கமாயிருந்தது.
நந்தனின் சேரிக்குழந்தைகள்
அரைஞாண் கயிற்றில் இரும்பு மணி கட்டியிருந்ததாகக் குறிப்பு பெரிய புராணத்தில்
உள்ளது. எனவே, தாலி என்னும் சொல்
கழுத்துத்தாலியைத் தொடக்க காலத்தில் குறிப்பிடவில்லை என்பது தெளிவாகிறது.
சங்க இலக்கியங்களில் தாலி
மட்டுமல்ல, பெண்ணுக்குரிய
மங்கலப் பொருள்களாக இன்று கருதப்படும் மஞ்சள்,
குங்குமம் ஆகியவையும்கூட பேசப்படவே இல்லை.
கி.பி. 7ஆம் நூற்றாண்டில் திருமணச் சடங்குகளை ஒவ்வொன்றாகப்
பாடுகின்ற ஆண்டாளின் பாடல்களில் தாலி பற்றிய பேச்சே கிடையாது. மாறாக, தான் கொன்ற புலியின் பல்லை எடுத்து வீரத்தின்
சின்னமாக ஆண் தன் கழுத்தில் கோர்த்துக் கட்டிக் கொண்டால் அதைப் புலிப்பல் தாலி
என்று குறிப்பிட்டுள்ளனர்.
தமிழ்நாட்டில் ஆதிச்சநல்லூர்
உள்பட பல்வேறு இடங்களில் தோண்டி எடுக்கப்பட்ட புதை பொருள்களில் இதுவரை தாலி
எதுவும் கிடைக்கவில்லை. கி.பி. 10 ஆம் நூற்றாண்டு
முதலே தமிழகத்தில் பெண்ணின் கழுத்துத்தாலி புனிதப் பொருளாகக் கருதப்பட்டு
வந்துள்ளதாகக் கொள்ளலாம். அதன் பின்னரே, கோவில்களிலும் பெண்
தெய்வங்களுக்குத் தாலி அணிவிக்கப்பட்டது. திருக்கல்யாண விழாக்களும் நடத்தப்பட்டன.
நாளடைவில் தாலி மறுப்பு அல்லது நிராகரிப்பு என்பது கனவிலும் நினைத்துப் பார்க்க
முடியாத ஒன்றாக மாறிவிட்டது. இந்தியச் சிந்தனையாளர்களில் தந்தை பெரியார்தான்
முதன்முதலில் தாலியை நிராகரித்துப் பேசவும் எழுதவும் தொடங்கினார். அவரது
தலைமையில் தாலி இல்லாத் திருமணங்கள் நடைபெறத் தொடங்கின. ஆணுக்குப் பெண் தாலி
கட்டும் அதிர்ச்சி மதிப்பீட்டு நிகழ்ச்சிகளும் சில இடங்களில் நடந்தன. பின்னர், 1967 இல் அறிஞர் அண்ணா காலத்தில் நிறைவேற்றப்பட்ட
சுயமரியாதைத் திருமணச் சட்டம் தாலி இல்லாத் திருமணத்தைச் சட்டபூர்வமாக
அங்கீகரித்தது.
தொகுப்பு - அதி அசுரன்
“கலியாண காலத்தில்
பெண்ணுக்கு மாப்பிள்ளை தாலி என்னும் ஒரு கயிற்றைக் கழுத்தில் கட்டித் தனக்கு அடிமை
என்று நினைத்து கேவலமாக கடித்து வருவதானது எருமை மாடுகளை விலைக்கு வாங்கி அதன்
கழுத்தில் ஒரு கயிற்றைக் கட்டி இழுத்து வந்து நடத்துவது போலவேதானாகும்.
பெண்களுக்குக் கழுத்தில் தாலி கட்டுவதின் கருத்து.
கலியாணம் ஆனது ஆகாதது என்ற
அடையாளத்தைக் காட்டு வதற்கும் இன்னான் பெண்டாட்டி என்ற உரிமையை நிலை நாட்டு
வதற்கும் பிறத்தியான் அப்பெண்ணைக் காதலிக்கா திருப்பதற்கு மென்றே கருதப்பட்டு
வருகிறது. அப்படியானால் ஆண்களில் கலியாணம் ஆனவன் ஆகாதவன் என்பதற்கும், இன்னாளுடைய புருஷன் என்பதற்கும், பிற மாதர் காதலிக்கா திருக்கும் பொருட்டு அடையாளம்
வேண்டியதவசியமல்லவா? அதற்காக கல்யாண
காலத்தில் ஆண்கள் கழுத்திலும் ஒரு தாலி
கயிறு கட்ட வேண்டும். அப்படியல்லாமல் பெண்களை மட்டும் ஏமாற்றிக் கழுத்தில் தாலிக்
கயிற்றைக் கட்டி அடிமைப்படுத்தி வருவது கண்டித்து ஒழிக்கத் தகுந்ததோர் சடங்காகும்
என்பதில் கடுகளவும் சந்தேகமில்லை.”
தோழர் பெரியார் - குடி அரசு
11.05.1930
ஆதாரம் – தெய்முரசு, உண்மை
http://suyamariyathai.org/indexnews.php?nid=161#.VRzxN-FsPhW
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக