தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 3 ஏப்ரல், 2015

10 ஆயிரம் ஆண்டுக்கு முந்திய இளம்பெண்ணின் எலும்புக்கூடு புலத்சிங்களவில்

சிறிலங்காவின் தென்பகுதியில் உள்ள புலத்சிங்கள, பஹியங்கல பகுதியில் மீட்கப்பட்ட ஆதிகால மனித எலும்புக்கூடு, 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்திய, இளம்பெண் ஒருவருடையது என்று, பிரித்தானியாவின் ஒக்ஸ்போட் பல்லைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

2012ம் ஆண்டு ஜூன் மாதம் தொல்பொருள் ஆய்வுத் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வின் போது, வரலாற்றுக்காலத்துக்கு முந்திய இந்த மனித எலும்புக்கூடு முழுமையாக மீட்கப்பட்டது.
இந்த எலும்புக்கூடு தொடர்பாக ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் நடத்திய ஆய்வுகளின் முடிவிலேயே, இது 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்திய பெண்ணினுடையது என்று கண்டறியப்பட்டுள்ளது.
இந்தப் பெண் 18 வயதுக்கும், 22 வயதுக்கும் இடைப்பட்டவர் என்றும், 54 கிலோ எடையையும், 5 அடிக்கும் அதிகமான உயரத்தையும் கொண்டவர் என்றும் கண்டறியப்பட்டுள்ளது.
இவர் பல் நோயால் பாதிக்கப்பட்டிருந்தார் என்றும், எனினும், வேறொரு தொற்று நோயினாலேயே மரணித்துள்ளார் என்றும் தெரியவந்துள்ளது.
மெல்லிய உடல்வாகு கொண்ட இந்தப் பெண், மிகவும் உயரமானவர் என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
வரலாற்றுக்கு முந்திய காலத்தில், ஆசியப் பிராந்தியத்தில் வாழ்ந்த மனிதர்கள் குள்ளமானவர்களாகவே இருந்துள்ளனர் என்றும், ஆனால் இந்தப் பெண் மிகவும் உயரமானவராக இருந்துள்ளார் என்றும் அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்த எலும்புக்கூடு எந்த சேதமும் இன்றி, உடையாமல் மீட்கப்பட்டுள்ளது. இதன் தலை, வடக்கு நோக்கி புதைக்கப்பட்டிருந்ததுடன், அதன் மீது, மூன்று கற்கள் வைக்கப்பட்டிருந்தன.


வரலாற்றுக்கு முந்திய காலத்து மனிதனின் எலும்புக் கூடு ஒன்று எந்த உடைவுகளுமின்றி மீட்கப்பட்டுள்ளது இதுவே முதல் முறை என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.Pahiyangala

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக