தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 12 செப்டம்பர், 2014

முருங்கையில் இவ்வளவு சத்துக்களா? அந்த விஷயத்திலும் டாப் தான்

முருங்கையில் நாம் நினைப்பதை விட எண்ணற்ற சத்துக்கள் கொட்டிக் கிடக்கின்றன.
முருங்கை கீரையில் கால்சியம், இரும்புசத்து, வைட்டமின் பி, பி-2, வைட்டமின் -சி ஆகிய சத்துகள் அதிகம் உள்ளன.
பூக்களை அதில் உள்ள பருப்புடன் சேர்த்து சமைத்து சாப்பிட்டால் உடலுக்கு பலன் கிடைக்கும். காய்களை அன்றாட உணவில் சேர்த்துக்கொண்டால் சளி குறையும்.
சிறுநீரை பெருக்கவும், மலமிளக்கவும் முருங்கை பயன்படுகிறது. முருங்கை கீரை தலை நோய்க்கு நல்ல மருந்தாகும். பூக்கள் கண்களுக்கு நல்ல குளிர்ச்சி தரும். நாக்கு சுவையின்மையை குணமாக்கும்.
முருங்கை இலைகளில் இரும்பு, தாமிரம், சுண்ணாம்பு சத்து இவை இருக்கின்றன. இந்த இலைகளை நெய்யில் பொரித்துச் சாப்பிட்டால், ரத்த சோகை உள்ளவர்களின் உடம்பில் நல்ல ரத்தம் ஊறும், தோல் வியாதிகள் தீரும்.
முருங்கைப் பட்டை, உலோகச் சத்துக்கள் நிறைந்தது. உணவில் கலந்து விஷத்துக்கும் நரம்புக் கோளாறுக்கும் ஒரு நல்ல மருந்து.
கடுமையான ரத்த, சீதபேதி, வயிற்றுப் புண், தலைவலி, வாய்ப்புண் இந்த வியாதிகளுக்கெல்லாம் முருங்கைக் காய் கை கண்ட மருந்து.
ஆரஞ்சை போல் 7 மடங்கு வைட்டமின் சி அடங்கியது . பாலில் இருப்பதை போல் 4 மடங்கு சுண்ணாம்பு சத்து அடங்கியது.
காரட்டில் இருப்பதைப் போல் 4 மடங்கு வைட்டமின் A அடங்கியது. வாழை பழத்தை போல் 3 மடங்கு பொட்டாசியம் அடங்கியது.
தயிரில் இருப்பதை விட 2 மடங்கு புரோட்டின் அடங்கியது. இரும்பு சத்து அமரிமிதமாக உள்ளது. எந்த கீரையையும் விட 75 மடங்கு இரும்பு சத்து அதிகம்.
முருங்கைகாய் குழம்பு
முதலில் வாணலியை அடுப்பில் வைத்து, எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, வெந்தயம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
பின்னர் இதில் தக்காளியை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும், இதில் நறுக்கி வைத்துள்ள முருங்கைகாயை சேர்த்து மிளகாய் தூள், மஞ்சள் தூள் சேர்த்து கிளறி விட வேண்டும்.
பின் இதில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி காயை நன்றாக வேக விட வேண்டும்.
காய் வெந்தவுடன், புளிக்கரைசலை ஊற்றி கொதிக்க விட்டால் சுவையான குழம்பு ரெடி.
முருங்கைகீரை பொரியல்
முருங்கைகீரையை சுத்தம் செய்து உருவி வைத்து கொள்ளவும், சின்ன வெங்காயத்தை பொடி பொடியாக நறுக்கி வைக்கவும்.
பின் ஒரு வாணலியில் எண்ணெ விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, மிளகாய், வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் முருங்கைகீரை, சிறிது தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும், அதிகநேரம் வதக்க தேவையில்லை உடனே வேந்துவிடும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக