காளான் இரத்தத்தில் கலந்துள்ள அதிகப்படியான கொழுப்பைக் கரைத்து இரத்தத்தைச் சுத்தப்படுத்தும் தன்மை கொண்டது.
இதனால் உயர் இரத்த அழுத்தம் மற்றும் இரத்த நாளங்களின் உட்பரப்பில் உண்டாகும் கொழுப்பு அடைப்பைத் தடுக்கிறது.
காளானில் உள்ள லென்ட்டைசின், எரிட்டிடைனின் என்ற வேதிப் பொருட்கள் இரத்தத்தில் கலந்துள்ள ட்ரை கிளிசஸ்ரைடு பாஸ்போலிட் போன்றவற்றை வெகுவாகக் குறைக்கிறது.
இதயத்தை பாதுகாப்பதில் காளானின் பங்கு அதிகம். மேலும் காளானில் உள்ள இரத்த நாளங்களில் ஏற்படும் பாதிப்பை சீர்செய்யும். காளான் மூட்டு வாதம் உடையவர்களுக்கு சிறந்த நிவாரணியாகும்.
மலட்டுத்தன்மை, பெண்களுக்கு உண்டாகும் கருப்பை நோய்கள் போன்றவற்றைக் குணப்படுத்துகிறது.
இவ்வளவு ஆரோக்கியத்தை வழங்கும் காளானில் சாதம் செய்து சாப்பிட்டு பாருங்கள்.
தேவையான பொருட்கள்
உதிராக வடித்து வைத்துள்ள சாதம்- 3 கப்
பெரிய வெங்காயம்-2
வெங்காய தாள்- கொஞ்சம்
இஞ்சி - பொடியாக நறுக்கியது- 1/2 ஸ்பூன்
பூண்டு - பொடியாக நறுக்கியது- 1 ஸ்பூன்
பச்சை மிளகாய்-5
மிளகுதூள்- கொஞ்சம்
அஜினமோட்டோ- கொஞ்சம்
உப்பு - தேவையானவை
நெய் அல்லது எண்ணெய்- 3 ஸ்பூன்
காளான் - 200 கிராம்
செய்முறை:
கெட்டியான வாணலியில் கொஞ்சம் எண்ணெய் அல்லது நெய் ஊற்றி வெங்காயத்தை மெல்லியதாக நறுக்கி வதக்கவும்.
அதனுடன் பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டை சேர்த்து வதக்கவும்.
காளானை தேவையான அளவில் கட் செய்து நன்கு நீரில் கழுவி கைகளால் அழுத்தி பிழிந்தால் அதில் நீர் எல்லாம் வந்து விடும்.
அதை வெங்காயத்தில் சேர்த்து வதக்கவும். மிளகுதூள், அஜினமோட்டோ, உப்பு சேர்த்து வதக்கவும்.
அடுப்பை சிம்மில் எரிய விட்டு வதக்கவும். நன்கு சுண்டியபின் 1 ஸ்பூன் நெய் ஊற்றி சாதத்தை போட்டு கிளறி இறக்கும் போது வெங்காயதாளை பொடியாக நறுக்கி மேலே தூவி இறக்கவும். காளான் சாதம் தயார்.
மசாலா வாசனை வேண்டும் என்றால் காளானை போடும் போது 1 ஸ்பூன்அஜினமோட்டோ தூவி கொள்ளலாம்.
இப்போது சுவையான காளான் சாதம் ரெடி!
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக