தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 12 செப்டம்பர், 2014

மொரீசியா (Mauritia)


இந்தியப் பெருங்கடலின் கீழ் ஒரு பண்டைய கண்டம் இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தியா ஒரு காலத்தில் ஆப்பிரிக்காவில் உள்ள மடகாஸ்கருக்கு அருகிலேயே அமைந்திருந்தது. தற்போது சுமார் 5600 கி.மீ. விலகி உள்ளது. இந்த இரண்டு நாடுகளுக்கும் இடையே பெரும் நிலத்துண்டு - குறுங்கண்டம் - ஒன்று இருந்ததற்கான சான்றுகள் கிடைக்கப் பெற்றுள்ளன.
மொரீசியஸ் நாட்டின் கடற்கரைகளில் கிடைக்கக்கூடிய மண் மாதிரிகளை ஆராய்ந்த அறிவியலாளர் குழுவே மேற்கண்ட முடிவுக்கு வந்துள்ளது.
90 லட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த எரிமலை வெடிப்புக்கு முன்னர் இருந்த சிர்க்கான் எனப்படும் கனிமம் அந்த கடற்கரை மண்ணில் அறியப்பட்டுள்ளது. அதன் காலம் மேலும் பழைமையானது எனக் கூறப்படுகிறது.
நோர்வேயின் ஒசுலோ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் ட்ரொண்ட் தோர்சுவிக் என்பவர் தலைமையில் இந்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.
ரொடீனியா கண்டம் புதிய உலகம் தோன்றி தற்போதைய வடிவம் எடுக்கும் முன்னர் இருந்த பெரும் நிலத் துண்டு காலப்போக்கில் சிதறி கடலுக்கடியில் சென்றுள்ளதாக அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலத்துண்டுக்கு அவர்கள் மொரீசியா (Mauritia) எனப் பெயரிட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக