தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 10 செப்டம்பர், 2014

"கடவுளின் துகள்" என்றால் என்ன ? அப்படி என்றால் கடவுள் என்று ஒரு சக்தி இந்த பிரபஞ்சத்தில் உள்ளதா ?


உலகிலும் சரி அண்டவெளியிலும் சரி எந்த ஒரு பொருளை எடுத்துக்கொண்டாலும் அதில் "அணு" என்னும் கடைசி மூலக் கூறு இருக்கிறது. அதாவது சுருக்கமாக்ச் சொல்லப்போனால் ஒரு கல்லை சிறிய சிறிய துகள்களாக உடைத்துக்கொண்டு போனால், இறுதியில் (கண்ணுக்கு புலப்படாத) ஒரு சிறிய துகளே மிஞ்சும். இதனை தான் நாம் "அணு" என்கிறோம். இந்த அணுவின் ஒன்று சேரல் தான் ஒரு வடிவத்தை கொடுக்கிறது. இந்த அணுவை பிளக்க முடியாது என்று பலர் முன்னைய காலங்களில் நம்பினார்கள். ஆனால் பின்னர் அணுவை பிளக்க முடியும் என்றும், பிளந்தால் அதில், புரோட்டான், நியூட்ரான், எலெக்ட்ரான் ஆகிய துகள்கள் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.
இதில் ஒரு புரோட்டான் என்பது "குவார்க்", "பெர்மியான்", "குளுயான்ஸ்" ஆகிய துணை அணுத் துகள்களால் (சப்-அடாமிக் பார்ட்டிகிள்கள்) ஆனது. ஒரு புரோட்டானின் நிறை என்பது இந்த துணை அணுத் துகள்களின் நிறை தான்
ஆனால், உண்மையில் புரோட்டானின் நிறை, இந்த 3 துணை அணுத் துகள்களின் நிறையை விட, மிக மிக அதிகமாகவே உள்ளது. இதனால், புரோட்டானில் இன்னும் ஏதோ ஒரு கண்ணுக்கு புலப்படாத, ஆனால் நிறைகூடிய ஒரு துகள் உள்ளது என்பது விஞ்ஞானிகளின் கருத்து. இவை கண்ணுக்கு மட்டும் அல்ல, எந்த ஒரு சக்திவாய்ந்த கருவிக்கும் தென்படுவதும் இல்லை. பார்கவும் முடியவில்லை.
அது என்னவாக இருக்கும் என்ற ஆராய்ச்சியில் உதித்த விஷயம் தான் 'ஹிக்ஸ் போஸன்'. இதுவரை உறுதிப்படுத்தப்படாத இந்த 'ஹிக்ஸ் போஸன்' தான், உண்மையிலேயே பிரபஞ்சத்தின் அடிப்படையாக இருக்க முடியும் என்கின்றனர் விஞ்ஞானிகள். இதனையே இவர்கள் கடவுளின் துகள் என்கிறார்கள். பிரபஞ்சத்தின் அடிப்படை என்பது கடவுள் மாதிரி என்பதால் அதற்கு 'கடவுளின் அணுத் துகள்' (God's particle) என்று பெயரிடப்பட்டது. இதையடுத்து இந்தத் துகளைத் தேடி பயணத்தை ஆரம்பித்தனர்.

கடவுளைத் தேடி பயணம்: 
விஞ்ஞானிகள் டிரில்லியன் கணக்கிலான புரோட்டான்களை ஒளியின் வேகத்தில் எதிரெதிரே மோதவிட்டு உடைத்து சிதறடித்தால் குவார்க், பெர்மியான், குளுயான்ஸ், மின் காந்த கதிர்வீச்சு, வெப்பம் என்று அது சிதறும். கூடவே, 'ஹிக்ஸ் போஸன்' துகளும் புரோட்டானிலிருந்து வெளியே வரும் என்ற நம்பிக்கையில் தான் ஜெனீவா அருகே பூமிக்கு அடியில், Large Hadron Collider என்ற அதிநவீன கருவியை பெரும் செலவில் அமைத்தனர். இங்கு அட்லஸ், சி.எம்.எஸ் ஆகிய குழுக்கள் நடத்திய தனித்தனி சோதனைகளில் 'ஹிக்ஸ் போஸன்' என்ற ஒரு விஷயம் இருப்பது உண்மை தான் என்று தெரியவந்துள்ளது. நேரடியாக இந்தத் துகள் வெளிப்படாவிட்டாலும், அது இருப்பதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. இதன் எடை 126 பில்லியன் எலெக்ட்ரான் வோல்ட்ஸ் (electron volts) என்றும், இது புரோட்டானை விட 250,000 மடங்கு அதிக எடை கொண்டது என்றும் தெரியவந்துள்ளது. அதாவது பிரபஞ்சத்தின் பெரும் பாரம் 'ஹிக்ஸ் போஸன்' தான்.

கவலைக்குரிய கடவுள் துகள்:
ஹிக்ஸ் போஸன் என்று அழைக்கப்படும் கடவுள் துகளில் கவலைக்குரிய அம்சம் ஒன்று உள்ளது. அதனை தனியாக உடைத்து பிரித்து எடுக்க முற்பட்டல் ,அதாவது 100 பில்லியன் கிகா-எலக்ட்ரான் - வோல்ட்டிற்கும் அதிகமான ஆற்றலில் அது, "அதி நிலைத்தன்மை" பெறலாம் என்கிறார் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங். அப்படி என்றால் என்ன என்று நீங்கள் நினைப்பீர்கள். ஜெனீவாவில் சுமார் 170 மீட்டர் பூமிக்கு அடியில் இந்த பாரிய வளையம் உருவாக்கப்பட்டது. இதன் சுற்றளவு 27 கிலோமீட்டர் ஆகும். இது ஒரு வட்டவடிவிலான சுரங்கப்பாதைபோன்றது. இதனுள் ஒளியின் வேகத்தில் புரோட்டோன்கள் பயணம் செய்யும். ஒரு பக்கம் இருந்து வரும் புரோட்டோன்கள், மறு பக்கத்தில் இருந்து வரும் புரோட்டோன்களோடு நேருக்கு நேர் மோதும். அப்படி செய்யும்வேளை 100 பில்லியன் கிகா- வோல்ட்ஸ் ஆற்றல் தோன்றலாம். இதனால் வெற்றிடக் குமிழ் ஒன்று நமது சூரிய குடும்பத்தில் உருவாகும்.
காலம், நேரம், எடை என்பன அதனுள் கொண்டுசெல்லப்படும். சுருக்கமாகச் சொல்லப்போனால் பூமியே இருக்காது. நமது சூரிய குடும்பத்தில் உள்ள 9 கிரகம் உற்பட , அதற்கும் அப்பால் சென்று பால்வெளி நட்சத்திரங்கள் அனைத்துமே ஒரு வெற்றிடத்தினுள் சென்றுவிடும் என்று எச்சரித்துள்ளார், விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங். பிரித்தானியாவைச் சேர்ந்த விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் என்றால் தெரியாதவர்கள் இருக்கவே முடியாது. இவர் சக்கர நாற்காலியில் தான் உட்காந்து இருப்பார். ஆனால் இவர் சொல்லும் அனைத்தும் அதிசயமாக இருக்கும். ஆனால் உண்மை. இவர் தற்போது தெரிவித்துள்ள கருத்தால் நூற்றுக்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள், தமது இந்த ஆராட்சியைக் கைவிட்டு உள்ளார்கள். முற்றுமுழுதாக கைவிடவில்லை என்றாலும், விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் சொல்வதில் ஏதோ ஒரு உண்மை இருக்கிறது என்று அறிந்துகொண்டார்கள்.

அப்படி என்றால் இந்த "கடவுளின் துகள்" தான் உண்மையான கடவுளா ? அதனை நாம் கண்டறிய முற்பட்டால் பாரிய சக்தி ஒன்று தோன்றி அண்டத்தில் உள்ள அனைத்தையும் ஒரு இருட்டு இடத்திற்கு எடுத்துச் சென்றுவிடுமா ? நாம் எல்லாம் அதனை பார்க உயிரோடு இருக்க மாட்டோமா ? என்ன கொடுமை இது ? கடவுளை காண முடியாது போல உள்ளதே. இதனை தான் சைவ சமயத்தில், “கடவுள் தூணிலும் இருப்பார் … துறும்பிலும் இருப்பார் ! …..என்று கூறினார்களா ?
அதிர்வுக்காக,
கண்ணன்.

அதிர்வுக்காக,
கண்ணன்.
http://www.athirvu.com/newsdetail/969.html

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக