இளம் தலைமுறையினர் முதல் பெரியவர்கள் வரை கவலைத் தரக்கூடிய பிரச்னைகளில் ஒன்று முடி கொட்டுவது.
இதற்காக பல்வேறு எண்ணெய்கள், மருந்துகளை பயன்படுத்துவோம், ஆனால் நம் அன்றாட உணவுகளில் ஒரு சில சத்துள்ள பொருட்களை சேர்த்துக் கொள்வதன் மூலமே இப்பிரச்னையை எளிதாக சரிசெய்யலாம்.
சால்மன்
சால்மன் மீனில் வைட்டமின் டி சத்துக்கள் நிறைந்துள்ளன, அதுமட்டுமின்றி முடி வளர்ச்சிக்கு தேவையான கொழுப்பு அமிலங்கள் உள்ளது.
மற்ற பிற கடல் உணவுப் பொருட்களை விட இதில் ஜிங்க் சத்து அதிகம் உள்ளது, சால்மன் மீன்களை உண்பதால் முடி கொட்டும் பிரச்னைக்கு பாதுகாப்பு அளித்து முடிக்கு ஈரப்பதத்தை அளிக்கும்.
சோயா
உடலில் இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கை குறையும் போது முடி கொட்டத் தொடங்கும்.
சோயாவில் சிவப்பணுக்களை உற்பத்தி செய்ய தேவையான தாமிரம் நிறைந்துள்ளது, தினமும் ஒரு கப் சோயா பால் அருந்துவது, சிறிது தயிர் மற்றும் சோயா சீஸ்களை எடுத்துக் கொள்வதால் இப்பிரச்னைக்கு தீர்வு கிடைக்கலாம்.
ப்ளூபெர்ரி
ப்ளூபெர்ரியில் வைட்டமின் சி சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளது, வைட்டமின் சி சத்துக்கள் குறையும் பட்சத்தில் முடியில் வெடிப்புகள் ஏற்பட்டு ஆரோக்கியமற்ற நிலையில் உடைந்து விடும்.
மேலும் உடலுக்கு தேவையான ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் அதிகம் நிறைந்துள்ளதால், தினசரி உணவுகளில் எடுத்துக் கொள்ளலாம்.
வால்நட்
பயோடின், ஒமேகா-3 போன்ற கொழுப்பு அமிலங்களும், வைட்டமின் ஈ, தாமிரம் போன்ற முடி ஆரோக்கியத்திற்கு உகந்த சத்துக்கள் வால்நட்டில் காணப்படுகின்றது.
முடியின் இயற்கையான நிறத்தை காப்பதோடு, வெயிலினால் ஏற்படும் பாதிப்புகளிலிருந்தும் காத்து பொலிவுடன் வைக்கின்றன.
முட்டை
புரோட்டீன் அதிகம் உள்ள முட்டைகளை உட்கொள்வதன் மூலம் முடி கொட்டுவதை தவிர்க்கலாம்.
திசு வளர்ச்சிக்கும், தலைச்சருமத்திற்கும் புரோட்டீன்கள் மிகவும் முக்கிய சத்தாகும்.
இவை முடி உற்பத்தி, இழந்த முடியை ஈடுசெய்தல், முடி வளர்ச்சிக்கு உதவுதல் ஆகியவற்றில் முக்கிய பங்காற்றுகின்றன.
சர்க்கரைவள்ளிக் கிழங்கு
வைட்டமின் ஏ சத்தை உருவாக்குவதில் சர்க்கரைவள்ளிக் கிழங்குகளில் உள்ள பீட்டா கரோட்டின் முக்கிய பங்கு வகிக்கிறது.
தலைச் சருமத்திற்குத் தேவையான அவசியமான எண்ணெய்களை இந்த வைட்டமின்கள் உருவாக்குகின்றன.
இவை இல்லாவிட்டால், உங்கள் தலை அரிப்புடனும் வேதனையுடனும் இருக்கும்.
ஆகவே சர்க்கரைவள்ளிக் கிழங்குகளை வேக வைத்தோ அல்லது அத்துடன் சற்று எலுமிச்சை சாற்றை சேர்த்து உண்ணலாம்.
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக