அசைவ உணவுகளை விட சைவ உணவுகளான காய்கறியில் அதிக சத்துக்கள் நிறைந்துள்ளன.
இதோ, சில காய்களின் சத்துக்களும், அதன் மருத்துவ குணங்களும்
முள்ளங்கி
நீர்ச்சத்து, கால்சியம் (calcium) , பொட்டாசியம், சுண்ணாம்பு, இரும்புச் சத்து உள்ளது. சிறுநீரகக் கல் அடைப்பு, பித்தப்பை கல் உள்ளவர்கள் வாரம் இரண்டு நாள் சாப்பிட்டுவர, கல் கரைந்து வெளியேறும்.
இவை அதிகம் குளிர்ச்சி தரும். வாயுவை வெளியேற்றும்.
காலிஃபிளவர்
இதில், பொட்டாசியம், சோடியம், இரும்பு, பாஸ்பரஸ், மெக்னீசியம், விட்டமின் ஏ, இ உள்ளது. புற்றுநோயால் அவதிப்படுபவர்களுக்கு எதிர்ப்பு சக்தியைத் தரும். புற்றுநோய் வளர்ச்சியை கட்டுப்படுத்தும்.
மலச்சிக்கலை போக்கும். உடலை இளைக்கச் செய்யும்.
முட்டைக்கோஸ்
சோடியம் (sodium), இரும்பு பாஸ்பரஸ், கால்சியம், விட்டமின் ஏ, இ உள்ளது. சர்க்கரை நோயாளிகளுக்கு மிக நல்லது.
இதனை, பனிக்காலத்தில் ஆஸ்துமா நோயாளிகள் சாப்பிடக்கூடாது.
நார்த்தங்காய்
அஜீரண கோளாறு உள்ளவர்கள் இதனை சாப்பிடலாம். மேலும், வயிற்றுப்புண் அல்சர் நோயாளிகள் சாப்பிடக்கூடாது.
வாயுத் தொல்லையை விலக்கி நெஞ்சுக் கரிப்பை நீக்கும். அதிகப்படியான அமில சுரப்பை கட்டுப்படுத்தும்
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக