வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் கடந்த 1ம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. உற்சவத்தின் 17ம் நாளான இன்றைய தினம் கார்த்திகை திருவிழா நடைபெற்றிருந்தது.
மாலை 5.30மணிக்கு வசந்தமண்டப பூஜைகள் நிறைவடைந்த பின்னர் வள்ளி தேவசேனா சமேதராக முருகப்பெருமான் பூஞ்சப்பறத்தில் வெளிவீதியுலா வந்து அடியார்களுக்கு காட்சியளித்தார்.
இன்றைய நாளில் விசேடமான கார்த்திகைத் திருவிழா என்பதால், அதிகளவான பக்தர்கள் கலந்துகொண்டு, எம்பெருமானின் அருட்கடாட்சத்தை பெற்றுய்ந்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக