தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 9 ஜூன், 2014

நாய் படாத பாடு!!


நாய் படாத பாடு,குரங்கு படாத பாடு சிங்கம் படாத பாடு என்று மற்ற விலங்கினங்களை குறித்து சொல்லாமல்
நாய் படாத பாடு என்று மட்டும் ஏன் சொல்லுகிறோம்?

சாதாரணமாக ஒரு விலங்கின் ஏதேனும் ஓர் உறுப்பு செயலிழந்தாலோ அல்லது நாம் அதனை கடுமையாக அடித்துப் போட்டாலோ அது சீக்கிரத்திலேயே இறந்துவிடும்.

ஆனால் நாய்கள் அப்படியில்லை.நான்கு கால்களையும் இழந்த நாய் கூட ஊர்ந்து சென்றாவது தன் உணவைத் தேடிக்கொள்ளும்.

அடிப்பட்டு முகம் சிதைந்த நாய்கள் கூட பல மாதங்கள் உயிர் வாழும் . அதாவது நாய்களுக்கு அடிப்பட்டாலோ அல்லது அவைகளுக்கு உணவே கிடைக்கவில்லை என்றாலும் கூட அவைகள் கஷ்டப் பட்டுக் கொண்டிருக்குமே தவிற சீக்கிரத்தில் சாவதில்லை.

நாய் பட்ட பாடு என்றால் அவை சாகவும் முடியாமல் வாழவும் முடியாமல் துன்பப் படுவதைத்தான் அப்படிச் சொல்கிறார்கள்.
அவைகள் பட்ட துன்பங்களையும் தாண்டி இவர்கள் அவ்வளவு கஷ்டப் பட்டிருக்கிறோம் என குறிப்பிடத்தான் நாய் படாத பாடு என்று சொல்கிறார்கள்.

இணையத்தில் படித்தது / பிடித்தது / சுட்டது 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக