தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 8 ஜூன், 2014

வெயிலினால் சருமம் கறுக்கிறதா?

வெயில் காலம் வந்துவிட்டாலே, ஆகா சருமம் கறுத்து விடப் போகிறது என்ற கவலையும் வந்துவிடுகிறது.
வெயிலின் தன்மை அதிகம் இருக்கும் போது சருமம் வாடுகிறது. இதனால் கறுமையான நிறமும் தோன்றுகிறது. இந்த பிரச்சனைக்கு தீர்வு இருக்கும் போது எதற்காக கவலைப்பட வேண்டும்.
வெயிலினால் தொடரும் அச்சத்தை துரத்துங்கள். இதோ இதற்கு மூன்று தீர்வுகள் உள்ளன.
ஒன்று- மாறிவரும் உலகில் பெண்கள் வெளியில் செல்லாமல் இருப்பது கடினம். இருப்பினும் காலை பத்து மணி முதல் பிற்பகல் நான்கு மணி வரை வெளியில் செல்லாமல் இருப்பது சருமத்தை வெயிலின் தாக்கத்தில் இருந்து பாதுகாக்கும்.
இரண்டு- வெயில் நேரடியாக சருமத்தில்படாத அளவுக்கு குடை பிடிப்பது.
மூன்று- சூரிய கதிர்களின் தாக்குதலால் சருமம் கறுத்துப்போகாமல் இருக்க சன் ஸ்கீரிம் உபயோகப்படுத்தும் பெண்கள் முதலில் தங்கள் சருமம் எந்த வகையானது என்பதை உறுதி செய்து பின் அதற்கு ஏற்ற சன் ஸ்கிரீனை தேர்ந்தெடுத்து பயன்படுத்தவேண்டும்.
உதாரணமாக எண்ணெய் தன்மை கொண்ட சருமம் என்றால் ஜெல் வடிவிலான சன் ஸ்கிரீனை பயன்படுத்துங்கள். பொதுவான வகை சருமம் கொண்டவர்கள் ‘மேட் பினிஷ்’ வகையை உபயோகப்படுத்தவேண்டும்.
இதனை பயன்படுத்துவதில் கூடுதல் சவுகரியம் என்னவென்றால், வியர்த்தாலும் இது உடலில் இருந்து நீங்காது. வறண்ட சருமம் கொண்ட பெண்கள் ஜெல் அல்லது திரவ வடிவிலான சன் ஸ்கிரீனை பயன்படுத்தலாம்.
தற்போது உஷ்ணம் மிக அதிகமாக இருப்பதால் பெண்கள் வெளியே செல்வதற்கு பத்து நிமிடங்களுக்கு முன்பே சன் ஸ்கிரீனை முகத்தில் பூசிக்கொள்ளவேண்டும்.
அவசர அவசரமாக பூசிவிட்டு வெளியே சென்றால், அதிகம் வியர்க்கும்போது பெரும்பாலும் சன் ஸ்கீரிம் நீங்கிவிடும்.
அதனால் வெளியில் செல்வதற்கு 10-15 நிமிடங்களுக்கு முன்பே பூசிவிடுவது நல்லது. சருமம் முழுவதற்கும் இதனை பூசிக்கொண்டு வெயிலில் எவ்வளவு நேரமும் நடக்கலாம் என்று கருதிவிடாதீர்கள்.
அதிக பட்சம் இரண்டு மணி நேரமே இது சக்தியளிக்கும். அதன் பின்பு முகத்தை கழுவி நன்றாக துடைத்து விட்டு மீண்டும் ஒருமுறை பூசிக்கொள்ள வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக