இன்றைய இளைய தலைமுறைகளை பாதிக்கும் பெரிய பிரச்சனை அவர்களுக்கு முதுமை தோற்றத்தை தரும் இளநரை தான்.
நமது வாழ்க்கை முறை, ஒழுங்கற்ற தன்மை, வாழ்க்கையில் அவர்களுக்கு ஏற்படும் மன அழுத்தம் ஆகிய காரணங்களால் அவர்களின் தலைமுடி பாதிப்புக்கு உள்ளாகிறது.
காரணங்கள்
மன கவலைகள்:
மன அழுத்தம் ஏற்பட்டால், தலை சருமம் கடுமையான டென்ஷனுக்கு உள்ளாகும். அது நல்ல முடி வளர்ச்சிக்கு அளித்து வரும் ஊட்டச்சத்திற்கு தடையாக நிற்கும்.
இதுபோக மன அழுத்தம், இரத்த சோகை, ஆரோக்கியமற்ற தலை சருமம், தலை முடியை சரிவர பராமரிக்காமல் இருப்பது மற்றும் மரபியல் பிரச்சனைகளாலும் இளநரை உண்டாகிறது.
எலெக்ட்ரிக் ட்ரையர்:
எலெக்ட்ரிக் ட்ரையர் மற்றும் கடுமையான முடி சாயம் பயன்படுத்துவது, மரபியல் சார்ந்த கோளாறு, ஹீமோதெரபி, கதிர்வீச்சு என பல காரணங்களால் இந்த பிரச்சனை உண்டாகிறது.
சில நேரங்களில் 8 வயதான சிறுவர்களுக்கு கூட, லேசாக முடி நரைப்பதுண்டு. பின் அவர்கள் வளர வளர நரை முடியும் அதிகரிக்கும்.
உணவில் சத்துக்கள் குறைபாடு:
முதல் காரணம் தவறான உணவு பழக்கங்கள். உணவில் சில வைட்டமின் பி, இரும்புச்சத்து, தாமிரம் மற்றும் அயோடின் போன்றவற்றில் குறைபாடுகள் இருந்தால், இந்த பிரச்சனை ஏற்படும்.
நரைத்த முடியை மீண்டும் பழைய நிலைக்கு மாற்ற முடியாமல் போனாலும், உணவு பழக்கத்தை மாற்றி, தேவையான ஊட்டச்சத்துக்களை பெற்று, தலைமுடி மேலும் நரைக்காமல் தடுக்கலாம்.
தடுக்க வழிமுறைகள்
மருதாணி:
முடிக்கு மருதாணி தடவினால், அது தற்காலக தீர்வாகும். சந்தையில் உள்ள ஹேர் டையை வாங்கி முடிக்கு தடவினால், அது பாதி நிலை தீர்வாக விளங்கும்.
அதிலும் அது அம்மோனியா கலக்காத டையாக இருக்க வேண்டும். தலைக்கு பிரிங்ராஜ் எண்ணெயை தடவ வேண்டும்.
கிரீன் டீ:
காபிக்கு பதிலாக கிரீன் டீயை பருக வேண்டும். அதேப்போல் போலிக் அமிலம் அடங்கிய உணவுகளை உட்கொள்ள வேண்டும்.
மேலும் புகைப்பிடிக்கும் பழக்கத்தை விட்டு, மன அழுத்தத்தை நீக்கி, ஒழுக்கமில்லாத வாழ்வு முறையை கைவிட வேண்டும்.
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக