கற்றாழையின் மருத்துவத்தன்மையை பற்றி அறியாதவர் எவரும் இருக்க முடியாது.
அந்த வகையில் கற்றாழை மருத்துவ குணங்களை தன்னுள் அடக்கி வைத்துள்ளது. கிட்டதட்ட அனைத்து வகையான மருந்துப்பொருட்களிலும் இந்தக் கற்றாழையின் பங்கு இருக்கும்.
இது ஒரு கசப்புத் தன்மையைக் கொண்டதால் கூடுதல் பலன் அளிக்கும் இயற்கை மருந்துப்பொருளாக உள்ளது.
பொதுவாக சோற்றுக் கற்றாழை மடல்களைப் பிளந்து நுங்குச் சுளைப் போல உள்ள சதைப் பகுதியை, சின்னச் சிறு துண்டுகளாக வெட்டி தூய தண்ணீரில் 7 முதல் 10 முறை நன்றாகக் கழுவி எடுத்துக் கொண்டு மருந்தாகப் பயன்படுத்த வேண்டும்.
கற்றாழையின் கசப்புத் தன்மையும், குமட்டுதலும் நீங்க அதனை நன்றாக கழுவ வேண்டியது அவசியமாகும்.
கற்றாழை குணப்படுத்தும் நோய்கள்:
· தீராத வயிற்றுப் புண்கள் குணப்படுத்துகிறது.
· சிறுநீர் குழாய்களிலும், பிறப்பு உறுப்புக்களிலுமுள்ள நோய்களை சோற்றுக் கற்றாழை நன்கு செயல்பட்டு முழுமையாக நிவர்த்தி செய்கிறது.
· வயிற்றின் சூட்டைத் தணிக்க.
· வாய்வுத் தொல்லைகளை நீக்க.
· நீடித்த மலச்சிக்கலைப் போக்க.
பயன்படுத்தும் முறை:
கழுவிச் சுத்தம் செய்த சோற்றுக் கற்றாழையை அரைக்கிலோ எடுத்துக்கொள்ளுங்கள். இதில் விளக்கெண்ணெய் ஒரு கிலோவும், பனங்கற்கண்டு அரைக்கிலோவும், வெள்ளை வெங்காயச் சாறு கால் கிலோவும் சேர்த்து, ஒரு பாத்திரத்தில் வைத்து அடுப்பில் சிறு தீயாக எரிக்க வேண்டும்.
பின் சாறுகள் சுண்டியபின் இந்த நெய்யை எடுத்து வதக்கிக்கொண்டு, நோயாளிகள் ஒரு தேக்கரண்டி வீதம், காலை, மாலை சாப்பிட்டு வந்தால், தீராத வயிற்று வலியும், வயிற்றுப் புண்ணும் சூன்மக் கட்டிகளும் குணமாகும்.
பெண்களின் வெள்ளைப்படுதல்(LEUCORRHEA) நோய் குணமாக:
பெரிய கற்றாழை மடலை நீளவாக்கில் கீறிப் பிளந்து இதில் மூன்று தேக்கரண்டியளவு வெந்தயத்தைப் பதித்து மூடி, நூலால் கட்டி இரவு கூரைமேல் வைத்து எடுத்தால், மூன்றாவது நாளில் பிரித்துப் பார்க்கும் போது வெந்தயம் முளை கட்டியிருக்கும். இந்த வெந்தயத்தை மூன்று பாகமாக்கி மூன்று தினங்கள் சாப்பிட்டால் பெண்களுக்கு ஏற்பட்ட வெள்ளைப்படுதல் நோய் குணமாகும்.
தாம்பத்திய உறவு மேம்பட: (Improve sexual)
சோற்றுக் கற்றாழை வேர்களை வெட்டி, சிறிய துண்டுகளாகச் செய்து சுத்தம் செய்து, இட்லிப் பானையில் பால்விட்டு வேர்களைத் தட்டில் வைத்துப் பால் ஆவியில் வேகவைத்து எடுத்து, நன்கு காயவைத்துப் பொடி செய்து வைத்துக் கொண்டு, தினசரி ஒரு தேக்கரண்டி பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால், தாம்பத்திய உறவு மேம்படும். தாம்பத்திய உறவுக்கு நிகரற்ற மருந்தாகும்.
கூந்தல் வளர(Hair grow):
சதைப்பிடிப்புள்ள மூன்று கற்றாழையின் சதைப் பகுதியைச் சேகரித்து ஒரு பாத்திரத்தில் வைத்து, இதில் சிறிது படிக்காரத் தூளைத் தூவி வைத்திருந்தால், சோற்றுப் பகுதியில் உள்ள சதையின் நீர் பிரிந்து விடும். இந்த நீருக்குச் சமமாக நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் கலந்து நீர் சுண்டக் காய்ச்சி எடுத்து வைத்துக்கொண்டு, தினசரி தலைக்குத் தடவி வந்தால் கூந்தல் நன்றாக வளரும். நல்ல தூக்கம் வரும்.
கண்களில் அடிபட்டால் செய்ய வேண்டியது:
கண்களில் அடிபட்டதாலோ, இதர காரணங்களாலோ கண் சிவந்து வீங்கியிருந்தால் கற்றாழைச் சோற்றை வைத்துக் கட்டி இரவு தூங்கினால் வேதனை குறையும். மூன்று தினங்களில் நோய் குணமாகும். கற்றாழைச் சோற்றில் சிறிது படிக்காரத்தூள் சேர்த்து, ஒரு துணியில் முடிச்சுக் கட்டி, தொங்க விட்டு ஒரு பாத்திரத்தை வைத்து நீர்சொட்டுவதைச் சேகரம் செய்து எடுத்துக்கொண்டு, இதைச் சொட்டு மருந்தாக கண்களில் விட்டு வந்தால், கண்நோய்கள், கண்களில் அரிப்பு, கண் சிவப்பு மாறும்.
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக