1. இனிப்பு பண்டங்களை முதலில் சாப்பிடுவதை நிறுத்திக்கொள்வது நல்லது. உடலில் உள்ள கொழுப்பை கரைக்கும் தன்மை தண்ணீருக்கு உண்டு. ஆனால் அது ஒரு காம்பினேஷனாகவே வேலைசெய்கிறது. நாம் உடல் பருமனை குறைக்கவேண்டும் என்று நடப்பது உண்டு. ஆனால் நாம் மெதுவாக நடந்தால் அதனால் எந்த ஒரு பயனும் கிடையாது. நடக்கும்போது எமது வேகத்தை கூட்டி, வியர்வை வெளியாகும் வரை நடப்பது நல்லது. அந்த வேளையில் நாம் அருந்தும் நீர், உடலில் உள்ள கொழுப்பு சத்தை கரைக்க பெரிதும் உதவும்.
2. சில பழவகைகள். அன்னாசி, பப்பாளி, மாதுளை, போன்ற பழவகைகளில் அன்ரி -ஆக்சிடன் அதிகமாக காணப்படுகிறது. இதனை நாம் அன்றாடம் உண்டு வந்தால், மலச் சிக்கல் இருக்காது. மலச் சிக்கல் இல்லை என்றாலே பெரும்பாலான கழிவுப் பொருட்கள் எமது உடலில் இருந்து நீங்கிவிடும். இதனால் எடை குறைய அதிக வாய்ப்புகள் உண்டு.
3. கோழி, ஆட்டிறைச்சி, மற்றும் மாட்டு இறைச்சி வகைகளை தவிர்பது நல்லது. அதற்கு பதிலாக மீன், நண்டு, சோயா போன்ற உணவுகளை உட்கொள்ளலாம். பொதுவாக நாம் உண்ணும் உணவின் மூலமே நாம் 60 சதவீதமான கொழுப்பை கட்டுப்படுத்த முடிகிறது. உணவுப் பழக்கத்தை மாற்றி அமைத்தாலே போதும், நாம் எடை குறைய ஆரம்பித்துவிடுவோம்.
4. சாதம் . அதாவது வெள்ளை சாதத்தில்(பாஸ்மதி) அதிக அளவு காபோ உள்ளது. இது பின்னர் செரிக்கும்பொது சக்கரையாக மாறி எமது உடலில் படிகிறது. நார் சத்து மிகவும் உள்ள சிவப்பு அரிசி, அல்லது சிவப்பு சாதத்தை உண்பது மிகவும் ஆரோக்கியமானது. நார் சத்து உடலில் சக்கரை சேரும் அளவை குறைப்பது மட்டுமல்லாது, உடலில் கொழும்பு சத்து உள்வாங்கப்படும் அளவையும் குறைக்கிறது.
5. சலாட் வகைகள். குறிப்பாக கூக்கும்பார், வெள்ளரிக்காய், தக்காளி, மணத் தக்காளி, போன்றவற்றை சலாட்டாக செய்து உட்கொண்டு வந்தால் எடையைக் குறைக்கலாம். அத்தோடு தக்காளியில் பல விசேட குணங்கள் உள்ளது. கான்சர் உண்டாவதை தக்களி தடுக்கிறது. அதுமட்டும் அல்ல, தக்காளியை சாப்பிட்டால் பசி எடுப்பது சற்று குறைகிறது. இதனால் நாம் அடிக்கடி சாப்பிடத் தேவையில்லை.
6. தேகப் பயிற்சி. குறைந்தது ஒரு நாளைக்கு 20 நிமிடங்களாவது நாம் முறையான தேகப் பயிற்சியில் ஈடுபடவேண்டும். அதுவும் வியர்வை சிந்தும் அளவுக்கு அது இருக்கவேண்டும். அப்படி என்றால் தான் எமது உடல் உஷ்னமடைகிறது என்று அர்த்தம். அப்படி உஷ்னமடைந்தால் தான் கொழுப்பு கரையும் .
http://www.athirvu.com/newsdetail/11.html
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக