மனிதர்கள் உட்கொள்ளும் மதுவை மீன்களுக்கு கொடுத்தால் என்ன ஆகும் என விஞ்ஞானிகள் புதிய ஆய்வு ஒன்றை மேற்கொண்டுள்ளனர்.
மீன்களுக்கு மது கொடுக்கும் போது அவை வேகமாக நீந்துகின்றன என ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பொதுவாக மனிதர்கள் மது எடுத்துக் கொள்ளும் போது அவர்கள் கட்டுக்கடங்காத காளை போல் துள்ளிக் குதிப்பர்.அதேபோல் தான் மீன்களும் வேகமாக நீந்துகின்றன.
நியூயார்க் உள்ள பாலிடெக்னிக் ஸ்கூல் ஆஃப் என்ஜினியரிங்கை சேர்ந்த விஞ்ஞானிகள் மீன்களை வைத்து புதிய ஆராய்ச்சியை மேற்கொண்டனர்.
அவர்கள் மீன்களில் வரிக்குதிரை மீன் வகையை தங்கள் ஆராய்ச்சிக்கு தெரிவு செய்தனர். அந்த மீன் ஒன்றுக்கு மது கொடுத்து அதை தண்ணீரில் விட்டனர்.
மது அருந்திய பிறகு அந்த மீன் வழக்கத்தை விட வேகமாக நீந்தியது. அதை பார்த்த மற்ற மீன்களும் வேகமாக நீந்தின.
மேலும் இந்த ஆய்வு மூலம் புதிய மருத்துவ சிகிச்சை முறைகளை கண்டறியலாம் என்று விஞ்ஞானிகள் நம்புகிறார்கள்.
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக