தூக்கத்திற்கு செல்வதற்கு முன் இலத்திரனியல் சாதனங்களைப் பாவிப்பதனால் தூக்கத்தில் பாதிப்பு ஏற்படும் என்பது அனைவரும் அறிந்ததே.
இருந்தும் நம்மில் பலர் தொடர்ந்தும் இவ்வாறு இலத்திரனியல் சாதனங்களைப் பயன்படுத்தி வருகின்றோம்.
இவ்வாறிருக்கையில் படுக்கையில் இருந்தவாறு ஸ்மார்ட் கைப்பேசியினைப் பாவிப்பதனால் உடல் மற்றும் மூளையில் ஏற்படும் பாதிப்புக்களை கலிபோர்னிய பல்கலைக் கழகத்தின் மனோதத்துவ நிபுணர் Dan Siegel முன்வைத்துள்ளார்.
இதன்படி இரவு நேரத்தில் ஸ்மார்ட் கைப்பேசிகளினை பயன்படுத்துவதனால் அவற்றின் திரையிலிருந்து வெளிவிடப்படும் போட்டோன்கள் (Photons ) கண்கள் மற்றும் மூளையைப் பாதிப்பதுடன் ஹோர்மோன்களின் உற்பத்தியிலும் பாதிப்பை ஏற்படுத்துவதாக தெரிவித்துள்ளார்.
மேலும் தூக்கம் கெடுவதனால் கலங்கள் முறையாக செயற்பட முடியாது போவதாகவும், மறுநாள் காலையில் நீண்ட தூக்கம் தேவைப்படுவதாகவும் தெரிவித்துள்ள அவர், ஸ்மார்ட் கைப்பேசிகளின் ஒலிகளாலும் தூக்கத்தில் பாதிப்பு ஏற்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக