பிரம்ம கமலம் என்றழைக்கப்படும் அபூர்வ மலர் வகை தாவரத்தின் இலையை வெட்டி வைத்தாலே புதிதாக முளைத்துவிடும்.
இலையே மண்ணில் வேர்விட்டு வளர்ந்து, பிறகு தண்டு போல் செயல்படும்.
இலையின் பக்கவாட்டில், சிறுசிறு கணுக்கள் தோன்றி, அவற்றிலிருந்து புது இலைகள் உருவாகும்.
அவற்றின் கணுக்களில் புதிய மொட்டுக்கள் உருவாகி மலர்களாய் மலரும்.
இந்த மலர்கள் சாதாரணமாக ஆண்டுக்கு ஒரு முறைதான் பூக்கும். அதுவும் நள்ளிரவில் பூத்து ஓரிரு நாட்களில் உதிர்ந்து போகும் தன்மை கொண்டவை.
இந்தப் பூவின் வாசம் மனதுக்கு இனிய மணம் கொண்டது. மலர்ந்துள்ள பிரதேசத்தையே ஈர்க்கும் தன்மையுடையது. அதற்குக் காரணம், Benzyl Salicylate வேதிப் பொருள்.
இந்த வித்தியாசமான மலர் இமயமலையைச் சேர்ந்தது.
வீட்டிலேயே வளர்க்க சூப்பர் டிப்ஸ்
* பிரம்ம கமலச் செடியை குளிர் காலத்திற்கு சற்று முன்னர் வைக்க வேண்டும்.
அதிலும் இந்த செடி, மிகவும் குளிர்ந்த இமயமலையில் வளர்வதால், தோட்டத்தில் சற்று குளிர்ந்த இடத்தில் வைத்து வளர்த்தால், மிகவும் நன்றாக வளரும்.
* அந்த மலர் வருவதற்கு நேரடியான சூரிய வெளிச்சம் படாதவாறு மற்றும் வளமான, பாறை மண்ணில் வைக்க வேண்டும். மலைப்பிரதேசத்தில் வளர்ந்ததால், சற்று மலை மண்ணாக இருந்தால் நல்லது.
அதிலும் மண் தண்ணீரை நன்கு உறிஞ்சுமாறும், சற்று சீரை தேக்கி வைக்குமாறும் இருக்க வேண்டும்.
* இரண்டு அல்லது மூன்று தினங்களுக்கு ஒரு முறையாவது தண்ணீர் விட வேண்டும். இல்லையென்றால் தண்ணீர் வற்றி, செடி வாடி இறந்துவிடும்.
* இந்த செடி மிகவும் நீளமாக வளராது. இது ஒரு குறுந்தாவரம் தான். மேலும் இது சற்று அதிகமான நீளத்தில் வளர்ந்தால், அதனை வெட்டி தனியாக ஒரு தொட்டியில் வளர்க்கலாம்.
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக