| அடுப்படியில் கிடந்த பெண்களின் காலம் மலையேறி சென்று, இன்றைய பெண்கள் பல தடைகளை களைத்தெறிந்து சோதனைகளை உடைத்து பல்வேறு துறைகளில் சாதனையை படைத்து வருகின்றனர். எனினும் நம் நாட்டின் தந்தை காந்தியடிகள் கூறியது போல் இன்றும் எந்த ஒரு பெண்ணும் நள்ளிரவில் நகையணிந்து தனியாக நடந்து வரும் நிலை இந்தியாவில் ஏற்படவில்லை. ஏன் பட்டப்பகலில் கூட நிகழவில்லை. அத்தனை பயங்கரமான நாடாக இந்தியா தற்போது இருந்து வருகின்றது. அதிலும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு என்ன தான் கூக்குரல் இட்டாலும் அவை காற்றில் கலைந்து செல்லும் பஞ்சுகளை போல் தான் உள்ளன.
வேட்டையாட உலாவும் ஓநாய்கள்
இந்தியாவின் இன்றைய நிலையை எண்ணி பார்க்கும் போது, இனி சில நாட்களில் கற்பழிப்பில் முதல் நாடு என்ற இடத்தை பிடித்து விடுமோ என்ற சந்தேகம் எழுகிறது.ஏனெனில் பல மாநிலங்களில் தினம்தினம் கற்பழிப்பு சம்பவங்கள் அதிகரித்து கொண்டே தான் இருக்கின்றன. குறிப்பாக கூட்டாக நிகழும் கற்பழிப்புகள் எண்ணற்று செல்கின்றது. பெண் குழந்தை, சிறுமி, இளம்பெண் மற்றும் மூதாட்டி என பெண் இனத்தில் எவரையும் பாராபட்சம் பார்க்காமல் காமூக கழுகுகள் அனைவரையும் ருசி பார்த்து வருகின்றனர். காமூகர்களாய் உருவெடுக்கம் இளம் மொட்டுக்கள் இன்றைய சிறுவர்களும் கற்பழிப்பில் அதிகளவில் ஈடுபடுவதாக சமீபத்தில் தெரியவந்துள்ளது. 5 வயது சிறுமியை 7 வயது சிறுவன் கற்பழிப்பதும், 10 வயது சிறுமியை 12 வயது சிறுவன் கற்பழிப்பதும் தினந்தினம் அரங்கேறும் விடயங்களாய் ஆகிவிட்டன.
“திடுக்” தகவல் தரும் ஆய்வு
இதுகுறித்து தேசிய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவில் கடந்த 2013ம் ஆண்டில் நடத்தப்பட்ட ஆய்வின்படி பெண்களுக்கு எதிரான குற்றங்கள் வடகிழக்கு மாநிலங்களில் அதிகரித்துள்ளன.· அதில் மத்திய பிரதேசத்தில் தான் அதிகமாக 3,425 பெண்கள் கற்பழிக்கப்பட்டுள்ளனர் என அம்மாநிலம் முதலிடத்தை பிடித்துள்ளது. இதனைதொடர்ந்து இரண்டாம் இடத்தில் உத்திரப் பிரதேசம் மாநிலம் இடம்பெற்றுள்ளது. · 2,049 கற்பழிப்புகளுடன் ராஜஸ்தான் மூன்றாம் இடத்தில் உள்ளது. மேலும் தமிழகத்தில் கடந்த ஆண்டு 737 பெண்கள் கற்பழிக்கப்பட்டுள்ளனர்.
முக்கிய நகரங்களில்
இந்தியாவின் இரண்டு பெரிய நகரங்களான டெல்லி மற்றும் மும்பையில் அதிக அளவில் கற்பழிப்புகள் நடந்துள்ளன. டெல்லியில் 585 பெண்களும், மும்பையில் 232 பேரும், சென்னையில் 94 பேரும் கற்பழிக்கப்பட்டுள்ளனர்.
என்ன தான் நிலவரம்?
· கடந்த 2012 மற்றும் 2013ம் ஆண்டுகளை ஒப்பிடுகையில் பெண்களுக்கு எதிரான குற்றங்களின் எண்ணிக்கை அசாமில் 13,544ல் இருந்து 17,449 ஆகவும், திரிபுராவில் 1,559ல் இருந்து 1,628 ஆகவும், மேகாலயத்தில் 255ல் இருந்து 288 ஆகவும், அருணாசல பிரதேசத்தில் 201ல் இருந்து 288 ஆகவும், சிக்கிமில் 68ல் இருந்து 93 ஆகவும், நாகாலாந்தில் 51ல் இருந்து 67 ஆகவும் உயர்ந்துள்ளன.· மணிப்பூர் மற்றும் மிசோராம் ஆகியவற்றில் 199ல் இருந்து 177 ஆக குறைந்துள்ளன. அசாமில் 1,937, திரிபுராவில் 233, மேகாலயத்தில் 183, அருணாசலபிரதேசத்தில் 75, மணிப்பூரில் 72, சிக்கிமில் 43, நாகாலாந்தில் 31 என்ற எண்ணிக்கை அளவில் பாலியல் வன்முறைகள் நிகழ்ந்துள்ளன. மிசோராமில் மட்டுமே இத்தகைய குற்றங்கள் 103ல் இருந்து 89 ஆக குறைந்துள்ளன என்று அந்த ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது. · அகில இந்திய அளவில் 7ம் இடத்தை பிடித்துள்ள அசாம், வட கிழக்கு மாநில அளவில் முதலிடம் வகிக்கிறது. மணிப்பூர் மற்றும் மிசோராம் ஆகிய மாநிலங்களில் இத்தகைய குற்றங்கள் குறைந்துள்ளன.
இந்தியாவை உலுக்கிய சில கற்பழிப்பு சம்பவங்கள் இதோ
· கடந்தாண்டில் டெல்லி மருத்துவ கல்லூரி மாணவி நள்ளிரவில் 5 பேரினால் கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் இன்னும் நம் மனதில் ஓயாத அலைகளாய் இருந்து கொண்டே தான் உள்ளது.· உத்திரபரதேச மாநிலத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இரண்டு சிறுமிகள் கற்பழிக்கப்பட்டு தூக்கில் விடப்பட்ட சம்பவம் இந்தியாவை மட்டும் அல்ல உலக நாடுகளையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. · சென்னையின் சிருசேரி பகுதியில் பிரபல தொழில்நுட்ப நிறுவனமான டி.சி.எஸ் யில் பணிபுரிந்து வந்த உமாமகேஸ்வரி என்ற இளம்பெண் வட மாநில காம வெறியர்களால் கற்பழித்து வீசப்பட்ட சம்பவம் இன்னும் சென்னைவாசிகளை அலற வைத்து கொண்டு உள்ளது.
அரசு தூங்குகிறதா?
கற்பழிப்புகள் மட்டுமல்லாது நகைபரித்தல் , கிண்டலடித்தல் போன்ற வன்முறைகள் நின்ற பாடில்லை. என்ன தான் சட்டத்தை வலுப்படுத்தினாலும் அதன் ஓட்டைகளின் வழியாக இவற்றை நிகழ்த்து கேவலாமான ஜென்மன்கள் தப்பி விடுகின்றன.இதற்கு அரசியல் புள்ளிகள் “ஆமா ஒவ்வொரு பெண்ணிற்கும் பொலிஸ் போட முடியுமா” என ஏளானம் செய்கிறதே தவிர , எந்த ஒரு முயற்சியும் மேற்கொண்டதாக தெரியவில்லை நாமும் விழிப்புடன் இருப்போம். என்ன தான் சட்டங்களும், சீர்த்திருங்கங்களும் வந்த வண்ணம் இருந்தாலும் எதனாலும் எந்த ஒரு மாற்றம் நிகழ்ந்த படி தெரியவில்லை. எனவே பெண்களாகிய நாம் எப்போதும் விழிப்புடன் இருப்போம். எந்த ஒரு பெண்ணும் ஆணை கண்டு ஓடி ஒளியாமல் நம் நாட்டின் சரித்திர நாயகி ஜான்சி ராணியை போல் துணிச்சலுடன் இருந்தால் மட்டுமே நம்மை நாம் காத்துக்கொள்ள முடியும். |
தொலைக்காட்சி!!
இந்த வலைப்பதிவில் தேடு
புதன், 3 செப்டம்பர், 2014
கற்பழிப்புகள் நிறைந்த இந்தியா- ஓர் அலசல் (வீடியோ இணைப்பு) !
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக