தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 17 செப்டம்பர், 2014

உங்களுக்கு ஞாபக மறதியா? இதோ சரிசெய்ய வழிகள்

தற்போதைய உலகில் சுறுசுறுப்புடன் இயங்கினால்தான் பல துறைகளில் சாதிக்க முடியும்.
ஆனால் இந்த வகையான சுறுசுறுப்பான மன ஆரோக்கியத்தை கொண்டு வருவது சில நேரங்களில் அவ்வளவு எளிதல்ல.
எனவே உங்கள் மூளையை ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்புடன் இயங்க வைக்க சில வழிகள் இதோ,
சரியானதை சாப்பிடுங்கள்
மூளை சுறுசுறுப்புடன் இயங்குவதற்கு முறையான உணவு உட்கொள்ளுதல் என்பது மிகவும் அத்தியாவசியமான ஒன்றாகும்.
எனவே, தினசரி உணவில் பச்சை இலை காய்கறிகளை சேர்த்துகொள்ளுங்கள்.
புதிய பழங்களை சாப்பிடுங்கள், உங்களின் சரியான உணவு முறை மூளை சேதத்தை தடுக்கும் ஆண்டியாக்ஸிடண்ட்களாக உள்ளன.
மீன் மற்றும் உலர்ந்த பழவகைகளான பாதம் போன்ற பொருட்களும் உங்கள் மூளை சக்தி பெற உதவும்.
நன்றாக தூங்குங்கள்
நல்ல தூக்கத்திற்காக மாற்றாக எதுவே கிடையாது. இன்றைய பரபரப்பான உலகில் தொந்தரவு இல்லாத தூக்கம் மிகவும் அத்தியாவசமானது.
ஆழ்ந்த தூக்கம் உங்களின் மூளையை மட்டும் அல்லாமல் உடலையும் சமநிலைப்படுத்தும்.
மன அழுத்தத்தை தவிருங்கள்
உங்கள் மூளைக்கு ஆக்ஸிஜன் செல்வதை மன அழுத்தம் கடினப்படுத்துகிறது. இதன் காரணமாக மூளை செல்கள் இறக்க தொடங்குகின்றன. எனவே, மன அழுத்தத்தை கட்டுபடுத்த நீங்கள் மிகுந்த முக்கியத்துவம் கொடுக்க வேண்டியது அவசியம்.
மன அழுத்தத்தில் இருந்து, உடனடியாக விடுபட ஆழமான மூச்சுப்பயிற்சி உள்ளிட்டவைகளை முயற்சி செய்யுங்கள்.
நுண்ணறிவு விளையாட்டுகள்
புதிர்கள், செஸ், சுடோகு, குறுக்கெழுத்து போட்டிகள் போன்ற மூளை விளையாட்டுகள் எனப்படும் நுண்ணறிவு விளையாட்டுகளில் ஈடுபடுவது உங்கள் மூளை செல்களை தூண்டி வேகமாக இயங்க வைக்க உதவும்.
திட்டமிடல்
திட்டமிட்ட வாழ்க்கை என்பது தேவையில்லாத மன அழுத்தத்தில் இருந்து விடுபட மிகவும் அவசியமானது ஆகும்.
திட்டமிடுதல் பரிச்சயமான உணர்வை கொடுத்து தேவையில்லாத மன அழுத்தை தவிர்க்க உதவுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக