தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 17 செப்டம்பர், 2014

திக் திக் திக்….புளியமரத்தில் லட்சக்கணக்கான பேய்: திகிலூட்டும் உண்மை!


சிறுவயதிலிருந்து பேய் இருக்கிறது என்றால், அது புளியமரத்தின் மீது தான் அமர்ந்திருக்கும் என்று கதை சொல்வார்கள்.
இரவில் வெளியே விளையாட செல்லும் சிறுவர்களுக்கு, அங்கே பார் புளியமரத்தில் பேய் அமர்ந்திருக்கிறது என்று மிரட்டி வைப்பார்கள்.
இந்த கதைகளை கேட்டு வளர்ந்த நமக்கு, பெரியவர்கள் ஆகிவிட்ட நிலையிலும், புளியமரத்தை பார்க்கும் போது ஒருவித பயம் வரும்.
புளியமரத்தில் பேய் இருக்கிறது என்று சொல்வார்கள், ஆனால் ஒரு புளியமரத்தில் லட்சக்கணக்கான பேய் இருக்கிறது என்றால் அது நம்மை ஆச்சரியமூட்டுகிறது.
ஆம்,,,இங்கே அந்த ஆச்சரியமூட்டும் புளியமரம் இருக்கத்தான் செய்கிறது.
வேலூர் மாவட்டம் ஏழைகிரி மலைப்பகுதியில் மயில்பாறை கோயிலில் அமைந்துள்ள நாகலம்மனுக்கு பூஜை செய்யும் சாமியார், பேய்களை விரட்டுபவர் என்று பக்தர்கள் கூட்டம் கூட்டமாக குவிகின்றனர்.
கோயிலை விட பக்தர்களுக்கு பயமூட்டுவது அங்குள்ள 100 வயது பழமையான புளியமரம் தான்.
அதில் அறையப்பட்ட தலைமுடிகள் பிசிறுகளாய் நீட்டிக்கொண்டு நிற்க, துருபிடிச்ச ஆணிகள் பயமுறுத்த, லட்சக்கணக்கான பேய்கள் இந்த மரத்தில் குடியிருப்பதாக மிரளவைக்கின்றனர் இந்த பகுதியை சேர்ந்தவர்கள்.
ஆனால் இவை காணிக்கை கேட்பதில்லையாம், கேட்டாலும் கொடுக்கப்படுவதில்லையாம்,
பேய் பிடித்த நபர்கள், அவர்களின் உறவினர்கள் உதவியோடு வெள்ளிக்கிழமை அன்று நாகலம்மன் கோயிலுக்கு அழைத்து வரப்படுகிறார்கள்,
கோயில் வளாகத்தில் அமரவைக்கப்படும் அவர்களது தலையில் பேய்பிடிக்கும் குப்பி வைக்கப்படுகிறது.
மேள தாளத்துடன் பேயை வெளியே கொண்டு வர முயற்சிகள் தொடங்குகின்றன.
பேய் விரட்டுதலில் உச்சகட்டமாக, அந்த நபர்கள் இழுத்துவரப்பட்டு, புளியமரத்தில் முகம் உரசுப்பட அவர்களின் தலைமுடி புளியமரத்தோடு சேர்த்து ஆணி வைத்து அறையப்படுகின்றது.
அந்த சமயத்தில் இவர்களின் உடல் உள்ள பேய், வெளியேறி அந்த புளியமரத்தில் குடிகொண்டு விடுவதாக அங்குள்ளவர்கள் தெரிவிக்கின்றனர்.
“சாட்சாத்” அம்மாவின் காலில் விழுந்த மோடி: டுவிட் செய்த முதல்வர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக