உலகின் முதலாம் செல்ஃபி புகைப்படம் கடந்த 1850ம் ஆண்டிலேயே எடுக்கப்பட்டது என தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
இன்று செல்ஃபி மோகம் உலகையே கவர்ந்து வருகிறது என்பது அனைவரும் அறிந்த ஓர் விடயமாகும். அதை நிரூபிக்கும் வகையில் மிக ஆபாத்தான செல்ஃபி புகைப்படம் ஒன்றும் சில நாட்களுக்கு முன்பு இணையதளத்தில் வெளியாகி தீயாய் பரவியது.
ஆனால் இந்த செல்ஃபி எடுப்பது என்பது, கடந்த 1850ம் ஆண்டிலேயே கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதை கண்டுபிடித்தவர் சுவீடன் நாட்டை(Sweden) சேர்ந்த ஆஸ்கர் ரெஜ்லாண்டர் (Oscar Rejlander) என்ற கலைப்புகைப்பட நிபுணர்.
இவரது செல்ஃபி புகைப்படம், அவரே தயாரித்த ஆல்பம் ஒன்றிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த ஆல்பத்தில் மொத்தம் 70 படங்கள் இருக்கின்றன.
இதில் ரெஜ்லாண்டரின் மனைவி ஹாலம் டெனிசன் (Hallam Tennyson) புகைப்படமும் இடம்பெற்றுள்ளது.
மேலும் புகைப்படக்கலையின் தந்தை என அழைக்கப்படும் இவர், இந்த கலையின் ஆரம்ப காலத்திலேயே செல்ஃபி எடுத்து அசத்தியுள்ளார்.
இவரது செல்ஃபி சமீபத்தில் வடக்கு யோக்ஷயரில் (Yorkshire) சுமார் 70,000 பவுண்டுகளுக்கு ஏலம் போனது என்பது குறிப்பிடத்தக்கது.
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக