அன்னாசி பழத்தில் உடலுக்கு தேவையான பல்வேறு சத்துக்கள் உள்ளன.
உடலில் ரத்தத்தை விருத்தி செய்வதாகவும், உடலுக்குப் பலத்தை தருவதாகவும் இருப்பதோடு பல வியாதிகளை குணப்படுத்தும் அரிய மருந்தாகவும் இருக்கிறது.
நார்ச் சத்து, புரதச்சத்து, இரும்பு சத்துகளை கொண்ட அன்னாசி பழம் ஜீரண சக்தியை அதிகரிக்கும்.
வைட்டமின் ஏ, பி, சி சத்துகள் நிறைந்துள்ள இந்த அன்னாச்சி பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் தொப்பை குறையும், முகம் பொலிவு பெறும்.
* அன்னாசி பழம் மற்றும் தேன் சேர்த்து ஜூஸ் செய்து தொடர்ந்து நாற்பது நாள் சாப்பிட்டால் ஒரு பக்கத் தலைவலி, இருபக்கத் தலைவலி, எல்லா வித கண் நோய்கள், எல்லா வித காது நோய்கள், எல்லா வித பல் நோய்கள், தொண்டை சம்பதமான நோய்கள், வாய்ப்புண், மூளைக்கோளாறு, ஞாபக சக்தி குறைவு போன்றவை குணமடையும்.
* நன்றாக பழுத்த அன்னாசி பழத்தை சிறு சிறு துண்டுகளாக வெட்டி வெயிலில் தூசிப்படாமல் உலர்த்தி வற்றல்களாக செய்து வைத்து கொள்ள வேண்டும்.
இதை தினமும் படுக்க செல்வதற்கு அரைமணி நேரத்திற்கு முன்னதாக ஒரு டம்ளர் பாலில் ஓர் ஐந்து அன்னாசி வற்றல்களை ஊற வைத்து, பின் படுக்கச் செல்லும் போது ஊறிய வற்றல்களை 40 நாட்கள் சாப்பிட்டு வரவேண்டும். இதனால் பித்தம் சம்மந்தமான அனைத்து வியாதிகளும் நீங்கும்.
* மஞ்சள் காமாலை உள்ளவர்கள் அன்னாசி பழச் சாற்றை சாப்பிட்டால் சீக்கிரம் குணமடைவார்கள்.
* இரத்தம் இழந்து பலவீனமாக இருப்பவர்களுக்கு அன்னாசி பழச்சாறு சிறந்த ஒரு டானிக்காகும். பித்தத்தால் ஏற்படும் காலை வாந்தி, கிறுகிறுப்பு, பசி மந்தம் நீங்க அன்னாசி ஒரு சிறந்த மருந்தாகும்.
* தொடர்ந்து நாற்பது நாள் இப்பழத்தை உண்டால் தேகத்தில் ஆரோக்கியமும், பளபளப்பும் ஏற்படும். உடலில் ஏற்படும் வலியை தீர்க்கும்.
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக