தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 8 செப்டம்பர், 2014

தூக்கத்தில் நடக்கும் வியாதிக்கு என்ன காரணம்?

தூக்கத்தில் நடக்கும் வியாதிக்கு என்ன காரணம் என விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.தூக்கத்தில் நடக்கும் நோயை “சோம்னாம்புலிஸம்” என்று அழைக்கின்றனர், குரோமோசோம் குறைபாடே இந்நோய்க்கு காரணம் என்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
வாஷிங்டன் பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரி ஆய்வாளர்கள், கிறிஸ்டினா கர்னட் என்பவர் தலைமையிலான குழு இதுதொடர்பான ஆய்வில் ஈடுபட்டது.
அவர்கள் பரம்பரையாக தூக்கத்தில் நடக்கும் வியாதி பாதிப்பு இருந்தவர்களை ஆய்வுக்கு எடுத்துக் கொண்டனர்.
அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த 12 வயதுச் சிறுமி ஹன்னாவுக்குக் கூட குறிப்பிட்ட வியாதிப் பாதிப்பு இருந்தது. அவள் தூக்கத்திலேயே நடந்து வீட்டை விட்டு வெளியேறி விடுவதை வழக்கமாக கொண்டிருந்தாள்.
அந்தக் குடும்பத்தினரின் உமிழ் நீர் மாதிரிகளை ஆராய்ந்ததில் குரோமோசோம் 20 ன் சங்கேதக் குறியீட்டுப் பிழைதான் தூக்கத்தில் நடக்கும் வியாதிக்குக் காரணம் என்று கண்டுபிடிக்கப்பட்டது.
அது தலைமுறை தலைமுறையாகக் கடத்தப்பட்டு வந்திருக்கிறது. பெற்றோருக்கு இந்த ஜீன் இருந்தால் அவர்களின் குழந்தைகளுக்கும் அது செல்லும் வாய்ப்பு 50 சதவீதம் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
மேலும் இந்த ஆய்வின் மூலம் தூக்கத்தில் நடக்கும் வியாதிக்குத் தீர்வு காண முடியும் என்று நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக