தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 7 செப்டம்பர், 2014

கனவுகளும், அவற்றிற்கான அர்த்தங்களும்


நாம் காணும் ஒவ்வொரு கனவுகளுக்கும் பலன் உண்டு என்று காலம் காலமாக சொல்லப்படுவதுண்டு.
அதிலும் நாம் கண்ட கனவின் நேரத்தை பொருத்து அதன் பயன்கள் அமையுமாம்.
இரவில் மாலை 6 – 8.24 மணிக்குள் கண்ட கனவு 1 வருடத்திலும், இரவு 8.24 – 10.48 மணிக்குள் கண்ட கனவு 3ம் மாதத்திலும், இரவு 10.48 – 1.12 மணிக்குள் கண்ட கனவு 1 மாதத்திலும், இரவு 1.12 – 3.36 மணிக்குள் கண்ட கனவு 10 தினங்களிலும், விடியக்காலை 3.36 -6.00 மணிக்குள் கண்ட கனவு உடனேயும் பலிதாகும் என்று 'பஞ்சாங்க சாஸ்திரம்' சொல்கிறதாம்.
நற்பலன் தரும் கனவுகள்
* இறப்பு என்பது சோகமான விடயம் என்றாலும், அது கனவு காண்பர்களின் வாழ்வில் நிகழக்கூடிய பெரிய மாற்றத்தை குறிப்பிடுவதேயாகும்.
* இறந்தவருடன் பேசுவதைப் போன்று கனவு கண்டால் அதிகாரம், பதவி, லாபம் நிச்சயம் கூடி வரும்.
* குழந்தை கனவில் வந்தால், புதியதொரு விஷயத்தை அது பிரதிபலிக்கிறது என்று பொருளாகும்.
* ஒன்றுக்கு மேற்பட்ட நட்சத்திரங்களை கனவில் கண்டால் பதவி உயர்வு நிச்சயம் உண்டு.
* வானவில்லை கனவில் கண்டால் பணம், செல்வாக்கு அதிகரிக்கும். பதவி உயர்வு கிடைக்கும்.
* கனவில் நிலவை கண்டால் தம்பதிகளிடையே அன்பு பெருகும், மயில், வானம் பாடியை கனவில் கண்டால் தம்பதிகளிடையே நெருக்கம் அதிகரிக்கும்.
* திருமண கோலத்தை கனவில் கண்டால், சமூகத்தில் நன்மதிப்பு உயரும்.
* தற்கொலை செய்து கொள்வதை போல் கனவு கண்டால் நெருங்கி வந்த ஆபத்துகள் நீங்கி, நன்மை பிறக்கும்.
* ஆமை, மீன், தவளை போன்ற நீர்வாழ் உயிரினங்களை கனவில் கண்டால் கவலைகள் பறந்து போகும், நெஞ்சிலே நிம்மதி பிறக்கும்.
தீயபலன் தரும் கனவுகள்
* பூனையை கனவில் கண்டால் வியாபாரத்தில் திடீர் என நஷ்டம் ஏற்படும்.
* தேனீக்கள் கொட்டுவதை போல் கனவில் கண்டால் வீண் செலவுகள் ஏற்படும், குடும்பம் பிரியும்.
* எறும்புகளை கனவில் கண்டால் மன கஷ்டம் பொருள் நட்டம் உண்டாகும்.
* எலிகளை கனவில் கண்டால் எதிரிகள் பலம் பெருகும்.
* இடியுடன் மழை பெய்வதைப் போல் கனவில் கண்டால், உறவினர்கள் விரோதியாவார்கள்.
* பசு நம்மை விரட்டுவதை போல் கனவில் கண்டால் உடல் நலம் கெட்டு வியாதி சூழும்.
* குதிரையில் இருந்து விழுவதை போல் கனவு கண்டால் கொடிய வறுமை வரும், செல்வாக்கு சரியும்.
* நோய் பீடித்ததாக கனவு கண்டால், நண்பர் ஏமாற்றுவார்.
* நிர்வாண கோலத்தை கனவில் கண்டால், அவமானம் தேடி வரும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக