பெரும்பாலான நபர்களுக்கு பிடித்த, சத்துக்கள் நிறைந்த சுவையான ரெசிபி தான் முந்திரி காளான் மசாலா.
தேவையான பொருட்கள்
பட்டன் காளான் - 1 கப்
வெங்காய பேஸ்ட் - 2 டேபிள் ஸ்பூன்
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
தயிர் - 1/2 கப்
முந்திரி பேஸ்ட் - 2 டேபிள் ஸ்பூன்
சீரகப் பொடி - 1 டீஸ்பூன்
கரம் மசாலா - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
பட்டை - 1
ஏலக்காய் - 4
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
செய்முறை
முதலில் தண்ணீரை காயவைத்து, அதில் காளானை போட்டு அலசிக் கொள்ள வேண்டும்.
பின்னர் வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றியதும் பட்டை, ஏலக்காய் சேர்த்து வதக்க வேண்டும், இதில் வெங்காயம், இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்றாக வதக்கவும்.
இந்த கலவையில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், சீரகப் பொடி மற்றும் முந்திரி பேஸ்ட் சேர்த்து நன்றாக கிளறிவிடவும்.
பின்னர் இதில் தயிரை சேர்த்து கிளறி விட வேண்டும், நன்றாக கொதித்த உடன் அலசி வைத்துள்ள காளானை சேர்த்து வேக விடவும்.
தேவையான அளவு தண்ணீரை சேர்த்து மிதமான தீயில் வேக வைத்து சிறிது கரம் மசாலா தூவி இறக்கினால் சுவையான முந்திரி காளான் மசாலா ரெடி!!!
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக